Sunday, August 1, 2010

சபலத்தின் சம்பளம் மரணம்


                 ன்றைய இளைஞர்களை முறையற்ற உறவுகளும்... சபலங்களும்... மோச மான பாதைக்கு அழைத்துப்போகின்றன. ஒருவித மன்மதக் கிக்கில் புத்தி பேதலிக்கிற... இத்தகையவர்களுக்கு... எப்படிப்பட்ட விபரீதங்கள் எல்லாம் படையெடுத்து வருகின்றன தெரியுமா?

சம்பவம்-1 :

திருவண்ணாமலையில் இருக்கும் பிரபல 'இந்தியன் ஹார்டு வேர்' கடையில்... கல்லாவில் உட் கார்ந்திருந்தான்... கடை ஓனரின் மகனான ஷாசுதீன். இவன் ஒரு கல்லூரி மாணவன். அப்போது அந்தக் கடைக்கு இளம் விதவைப் பெண்ணான கல்பனா பெயிண்ட் வாங்க வந்தாள். கல்பனா பெயிண்ட்டின் வண்ணங்களைப் பார்த்துக்கொண்டிருக்க... ஷாசு தீனோ கல்பனாவின் உடல் வனப்பைக் கண்களால் மேய்ந்தான். செல்போனில் அவன் பதிந்து வைத்திருந்த பலான காட்சிகள் அவன் புத்தியை ஏற்கனவே கிறுகிறுக்க வைத்திருந்தன. எனவே படத்தில் பார்த்ததை எல்லாம்     நேரில் பார்க்கும் வெறி அவனுக்குள் கொஞ்சநாளாய் மூண்டிருந்தது.

இதை அறியாத கல்பனா... '"இந்த பிராண்டில் ஸ்கைபுளூ கலர்ல பெயிண்ட் இல்லையா?'' என்றாள். ஷாசுதீனோ, "மேடம் நீங்க கேட்கிற கலர் இப்ப ஸ்டாக்கில் இல்லை. உங்க செல் நம்பரைக் கொடுத்துட்டுப்போங்க. பெயிண்ட் வந்ததும் போன் பண்றேன்''என்று சொல்ல... கல்பனாவும் தன் செல்போன் எண்ணைக் கொடுத்துவிட்டுக் கிளம்பினாள்.

மறுநாளே அவள் எண்ணைத் தொடர்புகொண்ட ஷாசுதீன்... தன்னை அறிமுகப் படுத்திக்கொள்ளாமல் ""மேடம் உங்க உடம்புக்கட்டு அட்டகாசம். உங்க அழகு கிறங்க வைக்குது. திம்மு திம்முன்னு இருக்கும் உங்க மேனியை தொட்டுப் பார்க்கணும் போலிருக்கு''' என்று ஜொள் விட...

""டேய் யார்றா நீ? பொறம்போக்கு. நேர்ல வாடா செருப்பால அடிக்கிறேன்''' என்று கல்பனா காட்டமாய் டோஸ் விட்டாள். உடனே போனைத் துண்டித்துவிட்டான் ஷாசுதீன். மறுநாள் மீண்டும் கல்பனா எண்ணுக்குப் போன ஷாசுதீன் '""மேடம் என்னை மன்னிச் சிடுங்க. தப்புத் தப்பாப் பேசி உங்க மனசை நோக வச்சிட்டேன். என்னை மன்னிச்சிட்டேன்னு நீங்க சொன்னாதான் எனக்கு மனசு ஆறும்'' என்றான் கெஞ்சலாக.

இதைக்கேட்டு மனம் இரங்கிய கல்பனா, ""சரிப்பா. தப்பு செய்யறது இயற்கை. அதை உணர்ந்தாலே போ தும். நீ நல்லவனா இருக்கே. உன் பேர் என்ன? எங்க இருக்கே?'' என்று அக்கறையாக விசாரித்தாள்.

இவனும் தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டு '""உங்க பேச்சு எனக்கு சந்தோசமா இருக்கு. இனி நல்லதை மட்டுமே நினைப்பேன். உங்க நட்பு மட்டும் கிடைச்சாப் போதும். இந்த உலகத்தையே ஜெயிப்பேன்'''என்று சொல்ல... அன்று முதல் கல்பனா அவனுக்கு தோழியாகிவிட்டாள். ஒரே வாரத்தில் அவர்களின் பேச்சு காதலில் தொடங்கி கட்டில் வரை போனது.

தனிமைப் பசியில் இருந்த கல்பனாவை கொஞ்சம் கொஞ்சமாய் வளைத்து புதுவை, சென்னை என அவளுடன் அடிக்கடி டூர் அடித்து.... மன்மதம் படித்தான் ஷாசு. அவனுக்குத் தன்னைக்கொடுத்த கல்பனா... பதிலுக்கு 5 ஆயிரம், 10 ஆயிரம் என பணம் வாங்க ஆரம்பித்தாள்.       பிறகு?

வெறயூர் இன்ஸ்பெக்டர் முருகேசனே சொல்கிறார்.... ""இந்தக் கள்ள உறவு... கல்பனாவின் வீடுவரை  தொடர ஆரம்பிச்சிருக்கு. ஷாசுதீனின் சபலத்தைப் பயன்படுத்திக் காசைப்பிடுங்க ஆரம்பித்த கல்பனா... அன்று தனக்கு அவசரமாக 40 ஆயிரம் ரூபாய் வேணும்னு போன்ல கேட்டிருக்காள். ஷாசுதீன் 20 ஆயிரம் ரூபாயை மட்டும் கொடுத்திருக்கான். கல்பனாவோ "என்னை விதவிதமா அனுபவிக்கத் தெரியுது. காசு கேட்டா மட்டும் நோகுதா? இன்னும் 20 ஆயிரம் இன்னைக்கே வேணும். தராட்டி.. நீ என்னோட சல்லாபிச்ச அசிங்கமான காட்சிகள் எல்லாம் என் செல்போன்ல இருக்கு. அதை போலீஸ்ல கொடுத்து உன்னை அசிங்கப்படுத்துவேன்'னு சொல்லியிருக்கா. இதில் கோபமான ஷாசுதீன்... கல்பனாவின் தலையை சுவத்தில் வேகமா மோதியிருக்கான். அவ்வளவுதான் இதில் கல்பனா செத்துட்டா. ஷாசுதீனின் சபலம்.. அவனை கொலைகாரனா இப்ப கம்பி எண்ண வச்சிருக்கு. செத்துப்போன பெண்ணுக்காக நாம வருத்தப்படறதா? இல்லை சிறைக்குப் போன இவனை எண்ணி வருத்தப்படறதா? இந்த ரெண்டு பேரின் நிலைமைக்கும் காரணம் சபலம்' என்கிறார்'' வருத்த மாக.

சம்பவம்-2 :

சென்னை முகப்பேரைச் சேர்ந்த ப்ளஸ்-1 படிக்கும் மாணவி சித்ரா வுக்கும்.. அதே பகுதியில் இருக்கும் கார் ஓட்டும் இளைஞனான வினோத்துக்கும் இடையில் காதல் முளைத்தது. விவகாரம் சித்ராவின் வீடுவரை போக... நெருப்புக்குப் பக்கத்தில் பஞ்சை இருக்க விடக் கூடாது என்றபடி... சித்ராவை திருவண்ணாமலை அருகே இருக்    கும் ஆலந்தூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு அனுப்பிவைத்தனர். 

காதலனைப் பார்க்காமல் தவித்துப்போன சித்ரா... தான் இருக்கும் முகவரியைச் சொல்லி... இரவு நேரத்தில் வீட்டுக்குப் பின்புறம் வரும்படி அழைத்தாள். உடனே சென்னையில் இருந்து டூவீலரிலேயே ஆலந்தூர் போன வினோத்... சித்ரா சொன்ன நேரத்துக்கு அந்த வீட்டின் பின்புறம் போய் காத்திருந்தான். சித்ரா சொன்னமாதிரியே வந்தாள். அவளை ஃபாலோ பண்ணிய அவளது சொந்தபந்தங்களும் ஊராரும் வினோத்தை மடக்கிப் பிடித்து அடித்தனர். 

தப்பி ஓடிய அவனைத் துரத்திப்பிடித்தும் செமையாய் கவனித்தனர். பிறகு?

அந்த வினோத்தின் உடல் அருகே இருந்த கிணற்றில் மிதந்          தது. போலீஸோ.. அது கொலையா? தற்கொலையா? என தற்போது விசாரித்துக்கொண்டிருக்கிறது.

சம்பவம்-3 :


திருவாரூர் மாவட்டம் கண்கொடுத்தவனிதம் கிராமத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ராமானுஜம். அவரது மனைவிக்கு பிரசவவலி உண்டாக.. மனைவியை திருவாரூர் அரசு மருத்துவ மனையில் சேர்த்தார். அதே மருத்துவமனையில் தன் பாட்டியை சேர்த்திருந்த குலமாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி பானுவைப் பார்த்து... அவளது அழகில் மயங்கிய ராமானுஜம்... அடிக்கடி பேசி நம்பிக்கையூட்டி... மருத்துவ மனையிலேயே தனிமையான பகுதிக்கு அவளை அழைத்துச் சென்று.. நினைத்ததை முடித்துக்கொண்டார்.

பானுமதியின் பாட்டி டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்குப்போக... ருசிகண்ட பூனையான ராமானுஜம்.. பானுவைத் தேடி குலமாணிக்கம் கிராமத்திற்குப் போனார். இவரை மடக்கிய கிராமத்தினர்... பானுவின் கழுத்தில் தாலியைக் கட்டு என்றனர். ராமானுஜமோ ""என்னை மன்னிச்சிடுங்க. எனக்கு ஏற்கனவே கல்யாணமாயிடிச்சி'''என்றார். இதைக்கேட்டு கடுப்பான கிராமத்தினர்... '""கண்டவனும் வந்து தின்னுட்டுப்போக... எங்க ஊரு பொண்ணு என்ன ஓசிச் சாப்பாடா?''' என்று அவரைத் தாக்கியதோடு... அவர் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்து விட்டு அவர் ஊருக்கும் தகவல் கொடுத்தனர். சபலத் தீயில் விழுந்த ராமானுஜம் உண்மையிலேயே தீயில் எரிந்து கரிக்கட்டையாய் இறந்துபோனார்.  தற்போது குலமாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்த 8 பேரை இது தொடர்பாகக் கைதுசெய்திருக்கிறது போலீஸ்.

-இப்படிப்பட்ட சபல மரணச் சம்பவங்கள்... நாளுக்குநாள் பெருகிவருகின்றன. ஏன்?

பா.ம.க. மாநில மாணவரணி துணைச் செயலாளர் விஜயகுமாரின் கணிப்பு இது... """படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டிய மாணவ-மாணவிகள்... இன்றைக்கு குடிப் பழக்கத்தைக் கத்துக்கறது.. நள்ளிரவு வரை ஊர் சுத்தறது... காதல் என்கிற பெயரில் சபல விஷயங்களில் இறங்கறதுன்னு திசைமாறிப் போய்க்கிட்டிருக்காங்க. இன்றைக்கு வளர்ந்திருக்கும் மோசமான டெக்னாலஜிகள்தான் இதுக்கெல்லாம் காரணம். இந்த சமயத்        தில் மாணவர்களுக்கு செக்ஸ் விழிப்புணர்வை ஏற்படுத்தணும். அதுக்குப் பாலியல் கல்வியைக் கொண்டு வரணும். அதில் விழிப்புணர்வு இருந்தா சபலமெல்லாம் வரவே வராது. அதே சமயம் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் மீது அக்கறை வைத்து... அவர்களைக் கவனிக்கணும். அவங்கக்கிட்ட மனம் விட்டுப் பேசணும். அவங்க பிரச்சினைகளுக்கு பொறுமையா காது கொடுக் கணும். 

அப்படி பெற்றோர்களின் கனிவான அக்கறையான அரவணைப்பிற்குள் இருக்கும் பிள்ளைகள் கெட்டுப்போக மாட் டாங்க'''அவரது வார்த்தைகளில் தெளிவு தென்படுகிறது.

'பாவத்தின் சம்பளம் சபலம்; சபலத்தின் சம்பளம் மரணம்' என்பதாகத்தான் இருக்கிறது இன்று பலரின் வாழ்க்கை.

-ராஜா, பகத்சிங்

source:nakkheeran

--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails