கம்ப்யூட்டருக்குப் புதியவரா வேர்டில் பைண்ட் அண்ட் ரீப்ளேஸ்
ஆவணங்கள் தயாரிப்பதில் வேர்ட் தரும் வசதிகளில், மிக முக்கியமானது, அதிக பயனுள்ளதாகவும், பலரால் கருதப்படுவது, அதன் பைண்ட் அண்ட் ரீபிளேஸ் (Find and Replace) ஆகும். ஓர் ஆவணத்தின் மொத்த பக்கங்களிலும், குறிப்பிட்ட ஒரு மாற்றத்தை, ஜஸ்ட் ஒரு கிளிக் செய்வதன் மூலம் மேற்கொள்ளலாம். இந்த வசதி குறித்து இங்கு காணலாம். வேர்ட் தொகுப்பில் டாகுமெண்ட் தயாரித்த பின்னர் எடிட் செய்கையில், ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட சொல் ஒன்றுக்குப் பதிலாக இன்னொரு சொல் ஒன்றினைப் போட விரும்புகிறீர்கள். அப்போது கர்சரை ஒவ்வொரு லைனாக இழுத்துச் சென்று அந்த சொல்லைத் தேடி, அதை அழித்துவிட்டு மீண்டும் புதிய சொல்லை டைப் செய்வது நம் நேரத்தை வீணடிக்கும் செயலாக இருக்கும். இதற்கெனவே வேர்ட் தொகுப்பில் Find and Replace என்றொரு வசதி உள்ளது. முதலில் அந்த சொல்லைத் தேட வேண்டிக் கொடுக்கும் கட்டளையைப் பார்க்கலாம். இதற்கு Edit மெனு சென்று அதில் Find கட்டளையைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது இதற்கென உள்ள Ctrl+F என்ற ஷார்ட் கட் கீயைப் பயன்படுத்தவும். இப்போது எந்த சொல்லைத் தேட என்று கேட்டு அதற்கென ஒரு நீள் கட்டம் இருக்கும். அதில் கர்சர் துடித்துக் கொண்டிருக்கும். அதில் தேடி அறிய வேண்டிய சொல்லை டைப் செய் திடலாம். இந்த சொல் 255 கேரக்டர்களுக்குள் இருக்க வேண்டும். இது ஒரு எழுத்தாகவோ, சொல்லாகவோ அல்லது நிறுத்தக் குறிகளாகவோ, ஸ்பெஷல் கேரக்டர்க ளாகவோ இருக்கலாம். அதன்பின் Replace என்ற கட்டத்தில் எந்த சொல்லைப் புதிதாய் அமைக்க வேண்டுமோ அதனை டைப் செய்திடலாம். பின்னர் கீழே உள்ள கட்டங்களில் Next என்ற கட்டத்தில் கிளிக் செய்தால், அடுத்த சொல் இருக்குமிடத்தில் கர்சர் செல்லும். நீங்கள் விரும்பினால், அந்த சொல்லுக்குப் பதிலாக, புதிய சொல்லை அமைக்க, Replace என்பதில் அழுத்த வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு இடமாக அந்த சொல்லைத் தேடித்தேடி மாற்றி அமைக்காமல் அனைத்து இடங்களிலும் அமைக்க முடிவு செய்தால் Replace All என்பதில் கிளிக் செய்தால் போதும். உடனே அனைத்து இடங்களிலும் தேடி, அறிந்த சொல்லுக்குப் பதிலாக புதிய சொல் அமைக்கப்பட்டு டாகுமெண்ட் ரெடியாகும்.
source:dinamalar
--
http://thamilislam.tk
No comments:
Post a Comment