Tuesday, August 24, 2010

சமையல் செய்யும் முறை:கேரட் கேசரி

கேரட் கேசரி

 


தேவையானவை: கேரட் - 200 கிராம், பால் - 200 கிராம், பேரீச்சம்பழம் - 10, கோதுமை மாவு - 2 டீஸ்பூன், சர்க்கரை - 100 கிராம், தேங்காய் துறுவல் - 2 டீஸ்பூன், லவங்கம் - 3, நெய் - 2 ஸ்பூன், வறுத்த முந்திரிப்பொடி - 1 டீஸ்பன்

செய்முறை: பேரீச்சம் பழங்களின் கொட்டையை நீக்கி விட்டு அதில் கேரட் துறுவலைச் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு குக்கரில் வேக வைக்க வேண்டும். நெய் விட்டு கோதுமை மாவை பொன் நிறமாக வறுக்க வேண்டும்.

 பாலை பால்கோவா பதத்தில் காய்ச்ச வேண்டும். கேரட் தேங்காய்த் துறுவல் இரண்டையும் சேர்த்து மசிய அரைக்க வேண்டும். அடிகனமான பாத்திரத்தில்  கொஞ்சம் தண்ணீர்விட்டு  அடுப்பில் வைத்து சர்க்கரையைப் போட்டு பாகானவுடன் மற்ற எல்லாச் சாமான்களையும் போட்டு அடிபிடிக்காமல் கெட்டியாகச் கிளறவும். கேசரி பதம் வந்தவுடன் தட்டில் நெய் தடவி அதில் கொட்டிப் பரத்தி விட்டு மேலே முந்திரியை வறுத்து தூவினால் சுவையான கேரட் கேசரி ரெடி. அதிக சத்தும் நிறைந்து


source:dinamani

--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails