Monday, August 23, 2010

ஃப்ளாஷ் ட்ரைவில் ஆன்ட்டி வைரஸ்


பிளாஷ் ட்ரைவின் கொள்ளளவுத் திறன் உயர்ந்து வருவதனால், இப்போதெல்லாம் புரோகிராம்களை, அதில் பதிந்து வைத்து இயக்குவது எளிதாகிறது.  வைரஸ் எதிர்ப்பு மற்றும் ஸ்பைவேர் எதிர்ப்பு புரோகிராம்களை இதில் பதிந்து இயக்கும் வகையில் கிடைத்தால் நல்ல பயனுடைத்ததாய் இருக்கும் அல்லவா! 
நாம் அடிக்கடி பொது மையங்களில், இதுவரை செல்லாத அலுவலகங்களில் உள்ள கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்தும் கட்டாயத்திற்கு உட்படுத்தப் படுகிறோம். அப்போது அதில் உள்ள வைரஸ் மற்றும் ஸ்பைவேர் புரோம்கிராம்களுக்கு எதிரான தடுப்புகளை நாம் கட்டாயப்படுத்த முடியாது. அப்படிப்பட்ட புரோகிராம்கள் பதிந்து வைக்கப்பட்டிருந்தாலும், அவை அண்மைக் காலத்தில் அப்டேட் செய்யப்பட்டுள்ளனவா என்பதையும் தீர்மானிக்க முடியாது. எனவே நாம் கையில் எடுத்துச் செல்லும் பிளாஷ் ட்ரைவ்களில் இந்த புரோகிராம்களைப் பதித்து இயக்க முடியும் என்றால் நமக்கு நல்லதுதானே! அது போன்ற பல புரோகிராம்கள் இப்போது இணையத்தில் கிடைக்கின்றன.  அவற்றில் ஒன்று  http://www.freeav.com என்ற முகவரியில் உள்ளது. இதன் பெயர் AntiVir.  இதன் சிறப்பு தன்மை, இந்த புரோகிராமினை ப்ளாஷ் ட்ரைவில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்த முடியும். அடுத்ததாக, இது ஆண்ட்டி வைரஸ் புரோகிராமாக மட்டுமின்றி, ஸ்பைவேர் புரோகிராம்களுக்கு எதிராகவும் செயல்படுகிறது. இதனை ஹார்ட் டிஸ்க்கில் பதியாமல், ப்ளாஷ் ட்ரைவில் பதிந்தே இயக்கவும். 
ஸ்பைவேர்களுக்கு எதிரான இத்தகைய புரோகிராம் ஒன்றும் இணையத்தில் கண்ணில் பட்டது. இதன் பெயர்AdAware SE Personal Edition 1.06.இதனையும் பிளாஷ் ட்ரைவில் வைத்தே பயன்படுத்தலாம்.  ஆனால் இதனை இன்ஸ்டால் செய்கையில், முதலில் ஹார்ட் டிஸ்க்கில் இன்ஸ்டால் செய்திடவும். பின்னர், ஸ்டார்ட், ஆல் புரோகிராம்ஸ் சென்று அதில் உள்ள  AdAware   பைலை காப்பி செய்து, பிளாஷ் ட்ரைவில் பேஸ்ட் செய்து இயக்கவும். இந்த புரோகிராமினை http://www.imgsrv.worldstart.com/download/aawsepersonal.exe என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து இலவசமாக டவுண்லோட் செய்திடலாம்.

 

சொஉர்செ:டினமலர்


--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails