Thursday, August 5, 2010

இணையதளம் மூலம் விவசாயிகள் "டிப்ஸ்' பெறலாம்!

 விவசாயிகளின் விளைபொருட்களை சந்தைப்படுத்துவதற்கான மென்பொருளை உருவாக்கி, சர்வதேசப் போட்டியில் வென்றுள்ள ராகுல் சங்க்ஹி: ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சியும், விவசாயத்தைச் சார்ந்து உள்ளது. ஆனால், மற்ற நாடுகளைப் போல் இல்லாமல் நம் நாட்டில் விவசாயம் சார்ந்த விஷயத்தில் முரண்பாடுகள் உள்ளன. விவசாயத்திற்காகப் புதிதாக அரசு திட்டங்கள் தீட்டினாலும், இடைத்தரகர்களாலும், முதலாளிகளாலும், விவசாயிகள் தங்களுக்குக் கிடைக்க வேண்டிய லாபத்தை இன்னும் ஈட்ட முடியாமல் உள்ளனர். என்ன செய்தால் இந்நிலை மாறும் என்று யோசித்து வடிவமைத்த வரைவு திட்டத்திற்குத் தான் இந்த விருது.நான் கண்டுபிடித்த இந்த மென்பொருள் மூலம் இடைத்தரகர்களால் விவசாயிகள் ஏமாற்றப்படுவது தவிர்க்கப்படும். விவசாயப் பொருட்களை எப்படி விற்பது, பொருட்களின் விலை நிர்ணயம், அதை சந்தைப்படுத்தும் முறைகள், விவசாயிகளுக்குப் பயன்படும் தகவல்கள் போன்றவற் றை நான் வடிவமைத்த இணையதளம், விவசாய மக்கள் அனைவருக்கும் வழங்கும்.விவசாயிகள் தங்கள் பகுதியில் பயன்படுத்தி வரும் விவசாய முறைகளை மற்றவர்களும் பயன்பெறும் வகையில் இந்த இணையதளம் மூலம் பகிர்ந்து கொள்ளலாம். "பார்மர்ஸ் பிரேம் ஒர்க்' என பெயரிடப்பட்டுள்ள இதில், விவசாயிகள் தங்கள் வட்டார மொழியிலேயே ஒலி வடிவிலான தகவல்களைப் பெற முடியும். மேலும், ஒளிக் காட்சி செயல்முறை விளக்கங்களும் இடம் பெறும். தொடு திரை வாயிலாகவே விவசாயிகள் இந்தத் தகவல்களைப் பெறவும் வசதி செய்யப்பட்டுள்ளது.விவசாயிகள் நேரிடையாக இணையதளத்தில் தங்களைப் பதிவு செய்து கொண்டு, இந்த இணையதளத்திலிருந்து எப்போது வேண்டுமானாலும் தங்களுக்கு வேண்டிய தகவல்களைப் பெறலாம். நாட்டில் குக்கிராமத்தில் எந்த அளவிற்கு இணையதள சேவைகள் உள்ளன என்பதைப் பொருத்தே இந்த முயற்சியின் வெற்றி உள்ளது.


ஜெயிச்சே தீரணும்!பி.பீ.ஓ., தொழில் செய்யும் ராகிலா: புதுக்கோட்டை மாவட்டம் தான் எங்களுக்கு சொந்த ஊர். தொழில் காரணமா திருவள்ளூர்ல செட்டிலான  குடும்பம் எங்களுடையது. நான், எங்க அண்ணன் வீட்டில் இரண்டு குழந்தைகள். சின்ன வயதில் வெளியே போய் விளையாட அனுமதிக்காத எங்க வீட்டில், நான் எட்டாவது பாஸ் பண்ணப்போ, இனி பள்ளிக் கூடமெல்லாம் போக வேண்டாம்; படிச்சது போதும்னு சொல்லிட்டாங்க. எங்கப்பா தான் எல்லாரையும் எதிர்த்து என்னை பிளஸ் 2 முடிக்க வச்சார்.அடுத்ததா கல்லூரி போறேன்னு நான் கேட்டப்போ, எங்க வீட்டில் பெரிய போராட்டமே நடந்தது. நான் பிடிவாதமா நின்னு, ஒரு வழியா பி.எஸ்சி., முடிச்சேன். படிப்பு முடிந்த உடன் திருமணம்.என் கணவர் தாஹீர், வெளிநாட்டு மாப்பிள்ளை. திருமணத்திற்குப் பின், உள்ளூரிலேயே பிசினஸ் பண்ண முடிவெடுத்து, திருச்சிக்கு வந்து பி.வி.சி., பைப் பிசினஸ் ஆரம்பித்தார்.அந்த சமயத்தில் பேப்பர்ல வந்த, "டிடீட்சியா'வைப் பற்றிய செய்தியைப் படிச்சுட்டு, அங்கு போய் ராமசாமி தேசாய் சாரைப் பார்த்தேன்; நிறைய தொழில்களைப் பற்றி விளக்கினாங்க. வீட்டிலிருந்தே செய்யக்கூடிய பிசினசான பி.பீ.ஓ.,வை தேர்ந்தெடுத்தேன்.பல சிரமங்கள், போராட்டங்கள் எல்லாத்தையும் தாண்டி 15 கம்ப்யூட்டரை வாங்கிப் போட்டு பிசினஸ் ஆரம்பித்த சமயத்துல, பி.பீ.ஓ., சார்ந்த வேலைகளை வெளிநாடுகளுக்கு கொடுக்க மாட்டோம்னு ஒபாமா உத்தரவு போட, மொத்த பி.பீ.ஓ.,வும் முடங்கிப்போயிடுச்சு.லட்சக்கணக்கில் பணம் போட்டு பண்ணின பிசினசில், எனக்கு மிஞ்சினது நஷ்டம் மட்டும் தான். ஒரு கட்டத்தில் என் கணவரின் பிசினசையும் பாதிக்க, வேதனையில துவண்ட நான், வீட்டுக்குள்ளேயே முடங்கிட்டேன். ஆனாலும், ஜெயிச்சே தீரணும்னு மீண்டும் போராட ஆரம்பிச்சேன். முன்பை விட ராத்திரி, பகல் பார்க்காம உழைச்சேன். பி.பீ.ஓ., பத்தி தெரியாத பல விஷயங்களை கத்துக்க ஆரம்பிச்சேன். இழந்ததை மீட்டு விட்டேன்.



source;dinamalar

--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails