Monday, August 23, 2010

நாம் நினைப்பதை கண்டுபிடிக்கும் புதிய கம்ப்யூட்டர் இன்டெல் அறிமுகப்படுத்துகிறது

 


 

நியூயார்க் : இணையத்தில் தேட வேண்டுமா , உதவியாளருக்கு கடிதம் எழுதுவதற்கான வாக்கியங்கள் கூற வேண்டுமா மனதில் நினைத்தால் மட்டும் போதும். என்ன நினைக்கின்றீர்கள் என்பதை மூளையை படிப்பதன் மூலம் கண்டுபிடித்து செய்து கொடுத்து விடுமாம் கம்ப்யூட்டர்கள். கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தின் அதிமேதாவியான இன்டெல் நிறுவனத்தை சேர்ந்த பொறியியல் வல்லுனர்கள் இது போன்றதொரு பணித்திட்டத்தில் இறங்கியுள்ளனர். இனிமேல் மவுஸ், கீபோர்ட் வைத்து நீங்கள் வேலை செய்ய வேண்டாம். கற்பனை மட்டும் செய்யுங்கள் போதும் எங்கள் கம்ப்யூட்டர் அனைத்தையும் செய்து கொடுக்கும் என்கின்றனர் இந்த பணித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளோர். இதற்காக கணினியை பயன்படுத்துவோரின் மூளையைப் பற்றிய விபரமான வரைபடக் குறிப்பு ஒன்றை உருவாக்கி மனிதன் என்ன நினைக்கும் போது எந்த வகையான மாற்றம் மூளையில் உருவாகும் என்பதையும் ஆராய்ச்சி செய்துள்ளனர் இந்த வல்லுனர்கள். ஆரம்ப கட்ட சோதனை முடிவுகளின் படி நினைப்பதை கண்டறிந்து அதை வார்த்தைகளாக மாற்ற முடியும் என்பது தெரிய வந்துள்ளதாகவும் இன்டெல் கூறுகிறது

source:dinamalar

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails