Wednesday, August 4, 2010

கிரிக்கெட் மட்டையிலும் ரத்தக் கறையே மிஞ்சியுள்ளது

 

ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தோடு இணைந்து, லண்டனில் கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகளை நடாத்த சில தமிழ் அமைப்புகள் பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்றன என்பதை நாம் சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தோம். செப்டெம்பர் மாதம் 11ம் திகதி இப் போட்டிகள் நடக்கவிருப்பதாக அதிர்வு இணையம் அறிகிறது. அதாவது லண்டனில் விளையாட்டுப் போட்டிகளை நடத்த ஸ்ரீலங்கன் ஏர் லைன்ஸ் நிறுவனம் இவர்களுக்கு அனுசரணை கொடுத்துள்ளதாம், தமிழ் வர்த்தகர்கள் தமக்கு அனுசரணை வழங்க முன்வரவில்லை அதனால் தாம் பேரினவாதிகளிடம்(சிங்களவர்களிடம்) அனுசரணையைப் பெற்றோம் என்று சாக்குப் போக்குகளைச் சொல்கிறார்கள் இந்த தமிழ் விளையாட்டுக் கழகங்கள்.

தமிழ் விளையாட்டுக் கழகங்கள் பல லண்டனில் இருந்தாலும், தற்போது இலங்கை அரசோடு கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகளை நடத்தியே தீருவேன் எனக் கங்கணம் கட்டி அலைவது, மிடில்செக்ஸ் தமிழர் விளையாட்டுக கழகம்(MTSSC). லண்டன் மிடில் செக்ஸ் மாகாணத்தில் வாழும் தமிழர்கள் வெட்கி நாணும் வகையில் இவர்கள் செயல் அமைந்துள்ளது. ஆரம்பத்தில், பிற தமிழர் விளையாட்டுக் கழகங்கள் இதில் பங்கேற்க இருந்தது இருப்பினும் யதார்த்தத்தை புரிந்துகொண்டு அவர்கள் பின்னர் விலகிக்கொண்டனர்.

முதலில் ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனம் ஏன் லண்டனில் விளையாட்டுப்போட்டி நடத்தவேண்டும்?

இலங்கையில் இருக்கும் ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனம் லண்டனில் தமிழர்களோடு சேர்ந்து விளையாட்டு விழாவை நடாத்தி அரசியல் ஆதாயம் தேட முற்படுகிறது என்பது, யாவரும் அறிந்த விடயம். ஆனால் மிடில்செக்ஸ் தமிழர் விலையாட்டுக் கழகமோ தமக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை, விளையாட்டுத் துறையோடு அரசியலை சேர்க்கவேண்டாம் என்று வாதாடுகிறார்கள். தாம் செய்வதை நியாயப்படுத்த முயல்கிறார்கள். லண்டனில் விளையாட்டு விழா நடாத்த இருக்கும் ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனம் ஏன் இந்த வன்னி மாணவர்களுக்கு உதவக் கூடாது???? படிப்பதற்கு மேசை கதிரை கூட இல்லாமல், மரத்தடி நிழலில் அமர்ந்து படிப்பது தமிழர்கள். அவர்களுக்கு உதவலாமே,



சரி, ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தை விட்டுவிடுவோம் அவர்கள் பேரினவாதிகள், வன்னி மாணவர்களுக்கு ஏன் உதவவேண்டும். ஆனால் லண்டனில் உள்ள தமிழர் விளையாட்டுக் கழகங்களுமா தமிழ் மாணவர்களைப் புறக்கணிக்கவேண்டும்? லண்டனில் விளையாட்டுப் போட்டிகளை நடாத்தும் காசுக்கு, பதிலாக அந்தக் காசில் ஒரு சிறுதொகையை பாவித்தால் கூட இம் மாணவர்கள் ஒழுங்காகக் கல்வி கற்பார்களே! இது போன்ற வன்னிப் பாடசாலைகளுக்கு வெளிநாடுகளில் பழைய மாணவர் சங்கங்கள் இல்லை, இருந்திருந்தால் அவர்கள் உதவி இருப்பார்கள்.

தமிழ் மாணவர்கள் ஆலமரத்தடியிலும், அரச மரத்தடியிலும் கல்வி கற்க, பெரும் பொருட்செலவில் ஆடம்பர விளையாட்டுப் போட்டிகளை நடாத்துவதால் என்ன பயன். அதுவும் எமது இனத்தை அழித்தொழித்த, எமது தமிழ் பாடசாலைகள் மீது குண்டுமழை பொழிந்த, எமது இனத்தை கருவறுக்க துடிக்கும் பேரினவாத சிங்களவனோடு கிரிக்கெட் விளையாடத் துடிக்கும் முதுகெலும்பற்ற தமிழர்களே பாருங்கள்! உங்கள் விளையாட்டுக் கழகங்கள் என்ன செய்கின்றன என்று பாருங்கள்.

பரமேஸ்வரன் பேகரை உண்டார் என பிரித்தானிய பத்திரிகைகள் செய்தி வெளியிட்டபோது, தமிழன் உண்ணாவிரதத்தின்போது உணவு உண்டான் என சிங்களப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன. பின்னர் அவர் அந்த வழக்கில் வெற்றி பெற்றதும், அதே பத்திரிகைகள் கொஞ்சம் கூடக் நாக் கூசாமல் ""இலங்கையர் ஒருவர் வழக்கில் வென்றுவிடார்"" என்று மார்தட்டுகிறது. தாழ்ந்த செயல் என்றால் தமிழன், வெற்றிபெற்றால் "இலங்கையர்" ஆகிவிடுகிறார் அவர். இதுவே சிங்களவரின் பாதை! இதை இன்னுமா உணரவில்லை நாங்கள்?

யுத்தக் குற்றங்களை கிரிகெட் மட்டைக்குள் மறைக்க நினைக்கும் சிங்களம், தமிழன் தலையில் மிளகாய் அரைக்க நினைக்கிறது. இதனை அறியாமல் சிலர் இயங்குகிறார்கள் என்று கூறவே முடியாது. அனைத்தையும் அறிந்தே இவர்கள் நடந்துகொள்கிறார்கள். இலங்கை அரசு போடும் பிச்சைக் காசுக்கும், தமது சொந்தச் செல்வாக்குக்காகவும் தமிழன் மானத்தை அடகுவைக்கும் இவர்கள் போன்ற நபர்களையும், விளையாட்டுக் கழகங்ளையும் தமிழர்கள் புறக்கணிக்கவேண்டும்! தகுந்த பாடத்தை புகட்டவேண்டும்! வருங்காலத் தூண்களாக அமையும் தமிழ் மாணவச் சமூகத்தை கட்டி எழுப்பவேண்டும், வன்னியிலும், பிற மாவட்டங்களிலும் அல்லலுறும் தமிழ் மாணவர்களுக்கு உதவுங்கள்! அவர்களை முன்னேற்றுவதன் மூலமே எமது சமுதாயம் முன்னேறும், கட்டமைப்பு ஒன்று உருவாகும்! எழுச்சி பெருகும், எமது இலட்சியம் நனவாகும்!

அதிர்வின் ஆசிரியபீடம்






source:அதிர்வின் ஆசிரியபீடம்




--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails