முதல் தீர்வாக நீங்கள் செய்ய வேண்டியது, இன்னொரு பிரவுசரைப் பயன்படுத்துவதுதான். எப்போதும் உங்கள் கம்ப்யூட்டரில் ஒன்றுக்கு மேற்பட்ட பிரவுசரை வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்குப் பிடித்த, நீங்கள் பயன்படுத்தும் பிரவுசர் எதுவாக இருந்தாலும், மற்றொரு பிரவுசரை இன்ஸ்டால் செய்து வைத்துக் கொள்வது, இது போன்ற சூழ்நிலைகளில் கை கொடுக்கும்.
அடுத்த தீர்வு, கம்ப்யூட்டரை ரீ பூட் செய்வது. கம்ப்யூட்டரில் உள்ள அனைத்தையும் மறுபடி இயக்கிப் பார்க்கலாம். கம்ப்யூட்டரை ஷட் டவுண் செய்திடவும். ரௌட்டருக்கு வரும் மின்சக்தியை நிறுத்திப் பின்னர் இயக்கவும். டி.எஸ்.எல் அல்லது கேபிள் மோடம் வைத்திருந்தாலும் இதே போலச் செயல்படவும். இவை இயங்கத் தொடங்கியதை அவற்றில் உள்ள விளக்குகள் உறுதிப்படுத்திய பின்னர், கம்ப்யூட்டரை ரீ பூட் செய்திடவும். பின் நீங்கள் குறிப்பிடும் தளத்தினைப் பெற முயற்சிக்கவும்.
அடுத்ததாக, குறிப்பிட்ட வெப்சைட்டின் பெயருக்குப் பதிலாக, அதன் இணைய முகவரியை எண்களில் தந்து பார்க்கவும். நாம் சொற்களில் அமைக்கும், இணைய தள முகவரிகள், முகவரிகளே அல்ல. அவை குறிப்பிட்ட இணைய முகவரிகளுக்கான திசை காட்டிகளே. இந்த சொற்கள், அதற்கான எண்களில் அமைந்த முகவரிகளைப் பெறுவதில், ஏதேனும் சிக்கல்கள் இருப்பின், இந்த வகையில் அந்த பிரச்னை தீர்க்கப்பட்டு உங்கள் தளம் உங்களுக்குக் கிடைக்கலாம். இந்த எண்களால் அமைந்த முகவரிகளைப் பெறுவதற்குப் பல வழிகள் உள்ளன. எளிதான ஒரு வழி, http://www.selfseo.com /find_ip_address_of_a_website.php என்ற முகவரியில் உள்ள தளத்தின் மூலம் பெறுவதுதான். இந்த தளம் சென்று, சொற்களில் அமைந்த முகவரியை டைப் செய்து என்டர் தட்டவும். அல்லது எஞுt ஐக என்ற பட்டனில் தட்டவும். எண்களினால் ஆன முகவரி கிடைக்கும். அதனை காப்பி செய்து, பிரவுசரின் முகவரி கட்டத்தில் ஒட்டி முயற்சிக்கவும். இதன் பின்னும் இணையதளம் கிடைக்கவில்லையா! அமைதியாக இருங்கள். தவறு உங்கள் பக்கம் இல்லை. தளத்தின் பக்கம் தான். அப்படிப்பட்ட சூழ்நிலையில் நம்மால் ஒன்றும் செய்ய இயலாது. தளத்தை அமைத்து இயக்குபவர்களாகப் பார்த்து அதனைச் சரி செய்தால் தான் உண்டு. ஆனால் எண்களால் ஆன ஐ.பி. முகவரி மூலம் முயற்சிக்கையில், தளம் கிடைத்தால், முகவரிக்கான எண் முகவரி கிடைப்பதில் ஏதோ சிக்கல் உள்ளது என்று பொருள். எந்த பிரவுசரைப் பயன்படுத்தினாலும், இந்த பிரச்னை இருந்து கொண்டுதான் இருக்கும்.
இந்தச் சூழ்நிலையில், இன்னொரு வழியில் முயற்சிக்கலாம். நோட்பேடினைத் திறக்கவும். அதில்C:\Windows\System32\drivers\etc\hosts என டைப் செய்து என்டர் செய்திடவும். இப்போது உள்ள டெக்ஸ்ட் பைலில் உங்கள் இணையதள முகவரி கிடைக்கிறதா எனப்பார்க்கவும். அந்த முகவரி இருந்தால், அதன் முன் # என்ற அடையாளத்தை இணைக்கவும். பின் அந்த பைலை சேவ் செய்து, பின் பிரவுசரை மீண்டும் இயக்கவும். இப்போதும் தளம் கிடைக்கவில்லை என்றால், கம்ப்யூட்டரை மூடிவிட்டு, இன்னொரு கம்ப்யூட்டரில் முயற்சி செய்து பார்க்கவும். குறிப்பாக பொதுவான கம்ப்யூட்டர் ஒன்றில் முயற்சி செய்து பார்க்கவும்.
இணைய தளம் சரியாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தால், நிச்சயம் மேலே குறிப்பிட்ட வழிகளில் ஒன்றில், தளம் கிடைக்க வாய்ப்புண்டு. இல்லையேல் தளம் தானாகச் சரி செய்யப்படும் வரை பொறுத்திருந்து, அவ்வப்போது பெற முயற்சிக்கவும்
No comments:
Post a Comment