உலகில் மொத்தம் 180 கோடிப் பேர் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். இதில் 32 நாடுகளில் ஒரு கோடிக்கும் மேல் இணையப் பயனாளர்கள் உள்ளனர். இந்த வரிசையில் முதல் பத்து நாடுகளில் உள்ளவர் களின் எண்ணிக்கை 117 கோடி. அதாவது உலக இணையப் பயனாளர்களில் 65% பேர் இந்த பத்து நாடுகளில் உள்ளனர். அடுத்த பத்து நாடுகளையும் சேர்த்து, 20 நாடுகளில் உள்ள இணையப் பயனாளர் எண்ணிக்கை 147 கோடி. அதாவது மொத்தத்தில் 82%. சீனாவும் அமெரிக்காவும் இணைந்து, முதல் 15 இடங்களில் உள்ள நாட்டின் பயனாளர்களில் பாதிப்பேர் எண்ணிக்கையைக் கொண்டுள்ளன.
ஒரு நாட்டின் மக்கள் தொகை அடிப்படையில், அதிக எண்ணிக்கையில் இன்டர் நெட்டினைப் பயன்படுத்து வோர் உள்ள நாடுகளில் முதல் இடத்தினை பிரிட்டன் (82.5%) கொண்டுள்ளது. அடுத்தது தென் கொரியா (81.1%) மூன்றாவதாக ஜெர்மனி (79.1%), ஜப்பான் 78.2% மக்களுடன் அடுத்த இடத்தில் உள்ளது. அமெரிக்க மக்களின் எண்ணிக்கையில் 76.3% பேர் இன்டர்நெட் பயன்படுத்துகின்றனர்.
முதல் 20 நாடுகளில், 7 நாடுகள் (35%) ஆசியாவைச் சேர்ந்தவை. ஐந்து நாடுகள் ஐரோப்பாவைச் சேர்ந்தவை. முதல் 20ல் ஆங்கிலம் பயன்படுத்தப்படும் நாடுகள் மூன்று. இந்தியாவையும் சேர்த்தால் நான்கு.
அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி மற்றும் பிரிட்டனில் ஏற்கனவே இன்டர்நெட் பயன்பாடு ஏறத்தாழ அதிக பட்சம் உள்ளதால், அடுத்த வளர்ச்சி, சீனா, பிரேசில், இந்தியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ் மற்றும் ரஷ்யாவில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியா பற்றிப் பார்ப்போமா! இந்தியாவில் பத்து ஆண்டுகளுக்குச் சற்று முன்னர் தான் இன்டர்நெட் தொடங்கியது. 1995ல் தான் விதேஷ் சஞ்சார் நிகாம் என்னும் பொதுத்துறை நிறுவனம் மூலம் இன்டர்நெட் மக்களுக்கு வழங்கப்பட்டது. 1998ல் இந்தியா இதற்கான கொள்கை முடிவை அறிவித்துத் தனியார்களும் இன்டர்நெட் சேவை வழங்க அனுமதித்தது. இன்றைக்கு இந்திய மக்கள் தொகை 120 கோடி. இதில் இன்டர்நெட் பயன்படுத்துபவர்கள் 8 கோடியே பத்து லட்சம்.
அமெரிக்கப் பத்திரிக்கை ஒன்றில் ஒரு செய்தி வந்தது. அமெரிக்கர்கள் இன்டர் நெட்டைக் கண்டு பிடித்தார்கள். ஜப்பானியர்கள் அதைத் தூக்கிக் கொண்டு ஓடி விட்டார்கள் என்று. ஓடியது மட்டுமல்ல, அதில் பல அதிசயத்தக்க மாற்றங்களையும் கொண்டு வந்தனர். இன்று உலகில் 7.8 Mbps வேகத்தில் இணைய இணைப்பினைக் கொடுக்கும் மூன்று நாடுகளில் ஜப்பானும் ஒன்று. மிகவும் குறைந்த கட்டணத்தில் அதிக டேட்டா வேகத்தைத் தரும் நாடாக ஜப்பான் உள்ளது. மிகப் பெரிய திரை, துல்லியமான படங்கள், ஒலியின் தன்மை எனப் பல பிரிவுகளில் அமெரிக்கர்களை, ஜப்பான் மிஞ்சி விட்டது. ஜப்பான் மக்கள் தொகை 12.68 கோடி. இன்டர்நெட் பயன்படுத்துபவர்கள் 9.91 கோடி.
source:dinamalar
--
http://thamilislam.tk
No comments:
Post a Comment