லண்டன் :விண்வெளியில் சூரியனைவிட 100 மடங்கு பெரியதாகவும் பிரகாசமாகவும் உள்ள நட்சத்திரம் ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. லண்டனில் உள்ள ஷெபில்டு பல்கலைக்கழக வான்வெளி ஆராய்ச்சியாளர் பால் க்ரவுத்தர் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட ஆராய்ச்சியில் இந்த புதிய மெகா நட்சத்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
'தரந்துலா நெபுலா' என்று அழைக்கப்படும் நட்சத்திரக் கூட்டங்களுக்கு மத்தியில் இந்தப் புதிய நட்சத்திரம் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
புழுதிப் புயல் போன்று புகை மண்டலமாக உள்ள மேகக் கூட்டங்களுக்கு இடையில் இந்த நட்சத்திரம் மிகப் பிரகாசமாக மின்னிக் கொண்டிருந்தது. 'ஆர்136 ஏஎல்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த நட்சத்திரம் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட நட்சத்திரங்களிலேயே மிகவும் பெரியது என்பது ஆராய்ச்சியாளர்களின் கணிப்பு.
ஆனால் தற்போது உள்ள எடையை விட இது 2 மடங்கு பெரியதாக இருந்திருக்கும் என்றும் அதிக உஷ்ணத்தால் தன்னைத்தானே எரித்துக் கொள்ளும் குணம் உள்ள இத்தகைய நட்சத்திரங்கள் காலப்போக்கில் சுருங்கி சிறியதாகி முற்றிலும் அழிந்து விடும் என்று கூறும் விஞ்ஞானிகள் இதன் ஆயுட்காலமும் மிகக் குறைவே என்கின்றனர்.
நாம் பூமியில் இருந்து பார்க்கும் சூரியனை விட பன்மடங்கு அதிகப் பிரகாசமாக காணப்படும் இந்தப் புதிய நட்சத்திரம் அதன் உயர் வெப்பம் காரணமாக தன்னைத் தானே எரித்துக் கொள்ளும் என்பதும் பூமியின் வெப்பத்தைப் போல் 7 மடங்கு அதிக வெப்பம் அதனைச் சுற்றி இருக்கும் என்பதும் ஆராய்ச்சித் தகவல்கள். இதன் ஆயுட்காலம் அதிக அளவாக (3 மில்லியன்) 30 லட்சம் ஆண்டுகள். இத்தகைய நட்சத்திரங்கள் மிகக் குறைந்த ஆயுட்காலம் கொண்டது என்பதாலும் மிக அதிக தொலைவில் நட்சத்திரக் கூட்டங்களுக்கு இடையில் மறைந்து இருக்கும் என்பதாலும் இவற்றைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம் என்கின்றனர்
விஞ்ஞானிகள். குறுகிய ஆயுளைக் கொண்டுள்ள இவை குறித்த தொடர் ஆராய்ச்சி என்பது இயலாத ஒன்று என்பது ஆராய்ச்சியாளர்களின் ஆதங்கம். பொதுவாக மிகக் குறைந்த எடையுடன் பிறந்து பின்னர் எடை கூடுவது மனித பிறப்பு. இதற்கு மாற்றாக நட்சத்திரங்கள் உருவாகும் போது மிக அதிக எடை மற்றும் உருவத்துடன் தோன்றி, பின்னர் தேய்ந்து மறைந்து விடும்.
புதிய நட்சத்திரம் ஆர்136 ஏஎல் அளவில் நமது பூமியை விட 10 மடங்கு பெரியது. மிகவும் அரியதும் அளவில் பெரியதும் அதிக ஒளி வீசுவதுமான புதிய வரவாக வந்துள்ள இத்தகைய நட்சத்திரங்கள் தன்னைத்தானே எரித்துக் கொள்ளும் என்பதால் இவற்றின் ஆயுள் மிகவும் குறைந்த காலம் தான் என்பது வருத்தத்திற்கு உரிய செய்தி.
source:dinakaran
http://thamilislam.tk
No comments:
Post a Comment