ஜம்மு: காஷ்மீர் என்றாலே களேபரம் இல்லாமலா இருக்கும் என்ற நிலைக்கு வந்து விட்டது. கடந்த சில மாதங்களாக கடும் போராட்டம், துப்பாக்கிச்சூடு, வன்முறை, என ஊரடங்கு நிலைகளில் இருந்து வரும் காஷ்மீரில் இன்று நடந்த சுதந்திர தின விழாவில் முதல்வர் ஒமர் அப்துல்லா மீது ஷூ வீசப்பட்டது.
கடந்த சில மாதங்களாக கட்டுக்கு அடங்காமல் இருக்கும் வன்முறை தொடர்பாக எழுந்த துப்பாக்கி சூட்டில் இதுவரை 25 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். பிரதமர் , மற்றும் உள்துறை அமைச்சர்கள் ஆலோசனை நடத்திய வண்ணமாகவே உள்ளனர். இன்று கூட பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஒமர் ஒரு சந்திப்பு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்திருந்தார்.
இந்நிலையில் இன்று காலையில் நாடு முழுவதும் 64 வது சுதந்திரதினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காஷ்மீரில் முதல்வர் ஒமர் அப்துல்லா கொடியேற்றி வைத்தார்.ஒமர் சல்யூட் அடித்து மரியாதை செலுத்தி கொணடிருக்கையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் ஒருவர் பலத்த சப்தத்துடன் முதல்வரை நோக்கி தனது காலில் இருந்த ஷூவை வீசினார். காஷ்மீருக்கு விடுதலை வேண்டும் என ஆவேசமாக கோஷமிட்டார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர்மீது படவில்லை. இதனையடுத்து விழாவில் திடீரென பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் அந்த நபரை சுற்றிவளைத்து பிடித்து அப்புறப்படுத்தினர்.
விசாரணையில் இவரது பெயர் அப்துல்ஆகாத் ஜான் என்றும் இவர் முன்னாள் போலீஸ் உதவி சப்.இன்ஸ்பெக்டரும் ஆவார். எனது மீது கல்வீசப்பட்டாமல் ஷூ வீசப்பட்டிருக்கிறது குறித்து நான் கவலைப்படவில்லை. வன்முறை எதற்கும் தீர்வாகாது என்றும் கூறியுள்ளார்.
15 போலீசார் சஸ்பெண்ட் : ஓமர் அப்துல்லா மீது ஷூ வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 போலீஸ் உயர் அதிகாரிகள் உட்பட 15 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
ஷூ வீச்சில் சிக்கியவர்கள் யார் ? யார் ? : கடந்த காலங்களில் ஷூ வீச்சுக்கு பல தலைவர்கள் உள்ளாகியிருக்கின்றனர். சீன பிரதமர் வென்ஜியாபோ, அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ், பாகிஸ்தான் அதிபர் சர்தாரி ஆவர். இந்த வரிசையில் ஒமர்அப்துல்லாவும் இப்போது.
--
http://thamilislam.tk
No comments:
Post a Comment