Saturday, August 7, 2010

வீட்டுக் கஷ்ட, நஷ்டம் தெரிஞ்ச‌ மனசாட்சி உள்ள ரோபோ..

Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update 

குடும்பத்தில் நிலவும் மகிழ்ச்சி, துக்க சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு செயல்படும் திறன் படைத்த ரோபோக்களை ஸ்பெயின் நாட்டு விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். உலக அளவில் இன்று முன்னணியில் இருக்கும் ஆராய்ச்சிகளில் நானோ தொழில்நுட்பத்துக்கு அடுத்த படியாக ரோபோ ஆராய்ச்சியை குறிப்பிடலாம். இந்த ஆராய்ச்சியில் ஜப்பான் முன்னணியில் இருக்கிறது. அந்நாட்டின் ஹோண்டா நிறுவனம் தயாரித்துள்ள அசிமோவ் ரோபோ உலகப் புகழ்பெற்றதாகும். இந்நிலையில் உயிருள்ள ஜீவன் போல சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் 'ஐசாய் 1' என்ற ரோபோவை ஸ்பெயின் நாட்டு விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இது விஞ்ஞானக் கற்பனை அல்ல.. நிஜம் என்கிறார் இந்த ரோபாவை உருவாக்கிய விஞ்ஞானிகள் குழுவின் தலைவர் டீகோ கார்சியா. மனிதர்களுக்கு ஒரு துணையாகவும், பொழுதுபோக்கு அம்சமாகவும் இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டில் உயிருள்ள நபர் போல் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வகையிலும், முடிவுகளை தாமாக சுதந்திரமாக எடுக்கும் வகையிலும் இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. 25 செமீ உயரமும், ஒன்றரை கிலோ எடையும் கொண்ட இந்த ரோபோவுக்கு மனசாட்சியும் இருப்பதாக கார்சியா தெரிவித்துள்ளார்.
வீட்டில் கிடைக்கும் அனுபவத்திலிருந்து தன்னை மாற்றிக் கொள்ளும் திறன் படைத்தது இந்த ரோபோ. தொழிற்சாலையிலிருந்து சந்தைக்கு வரும் சமயத்தில் ஒரே மாதிரியாக இருக்கும் இந்த ரோபோக்கள் வீடுகளில் உபயோகப்படுத்தும் போது, இரண்டே மாதத்தில் அந்தந்த வீட்டு சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு தனிப்பட்ட அடையாளத்தை உருவாக்கிக் கொள்ளும் என்கிறார் இதனை வடிவமைத்த கார்சியா.


source:dinakaran


--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails