Sunday, August 8, 2010

வீடியோ கன்வர்டர்


இந்த வார டவுண்லோட்

கடந்த பத்து ஆண்டுகளில் வீடியோ இயக்கும் சாதனங்களின் எண்ணிக்கையும், வகையும் அதிகரித்து உள்ளன. வீடியோ கேம் சாதனங்கள், மொபைல் போன்கள், எம்பி3 பிளேயர்கள், லேப்டாப் கம்ப்யூட்டர்கள், நெட்புக் மற்றும் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்கள் என இந்தப் பட்டியல் தொடர்கிறது. 
ஒவ்வொரு சாதனமும் வீடியோ பைல்களை இயக்க தனித்தனி வரையறைகளைக் கொண்டுள்ளன. இந்த சாதனங்களுக்கேற்ற பார்மட்டுகளில் வீடியோ பைல்கள் இருக்க வேண்டியது கட்டாயமாகிறது. இவற்றுடன் திரை அளவு மற்றும் ரெசல்யூசன் அளவுகளும் வீடியோ இயக்கத்திற்கு வரையறை களைத் தருகின்றன. 
எனவே வீடியோ பைல்களை இந்த சாதனங்களில் இயக்க முயற்சிக்கையில், அவற்றின் பார்மட் வரையறைகளை, அந்த சாதனங்களுக்கேற்ற வகையில் மாற்றி அமைக்க வேண்டியுள்ளது. பார்மட் மாற்றம் ஓர் அவசியத் தேவையாகிவிட்ட சூழ்நிலையில், இதற்கு உதவிட பல இலவச புரோகிராம்கள், இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றில் மிக அதிகமாகப் பயன்படக் கூடிய புரோகிராம் ஹேம்ஸ்டர் பிரீ வீடியோ கன்வர்டர் (Hamster Free Video Converter) ஒன்று. 
இந்த புரோகிராம் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கக் கூடியது.வீடியோ பார்மட் மாற்றம் மூன்று நிலைகளில் மிக வேகமாக மாற்றப்படுகிறது. ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வீடியோக்களை ஒரே நேரத்தில் மாற்றுகிறது. 
முதலில் வீடியோ பைல்களை மொத்தமாக இதன் இன்டர்பேஸுக்குள் இழுத்து அமைத்துவிடலாம். ஏறத்தாழ அனைத்து வீடியோ பார்மட்களுக் கிடையேயும் (AVI, MPG, WMV, MPEG, FLV, HD, DVD, M2TS மற்றும் பிற) இந்த புரோகிராம் மாற்றத்தினை ஏற்படுத்தித் தருகிறது. இரண்டாவது நிலையில் மாற்றத்திற்கான வரையறைகளைத் தேர்ந்தெடுக்கிறோம். பைல் பார்மட் அடிப்படையில் மட்டுமின்றி, சாதனங்களுக்கு ஏற்ற வகையிலும் இது பார்மட்டை மாற்றித் தருகிறது. எடுத்துக் காட்டாக, ஐபேட், ஐபோன், எக்ஸ்பாக்ஸ், பி.எஸ் 3, ஆப்பிள் டிவி, பிளாக்பெரி, ஐரிவர் என சாதனங்களின் பெயர்களைக் கொடுத்தும் வீடியோ பைல்களின் பார்மட்டினை மாற்றிக் கொள்ளலாம்.
எந்த பார்மட்டில் வெளியாக வேண்டுமோ, அதற்கான வீடியோ தன்மை, ரெசல்யூசன், கோடக் பைல் ஆகியவற்றையும் தேர்ந்தெடுக்கலாம். இவை அனைத்தையும் முடித்த பின்னர்,இறுதி பட்டன் அழுத்தி, மாற்றம் மேற்கொள்ள கட்டளை இடலாம். நாம் பயன்படுத்தும் கம்ப்யூட்டரின் செயல் வேகத்திற்கிணங்க, வீடியோ பார்மட் மாற்றம் ஏற்படுத்தப்படும். 
இந்த புரோகிராமின் சிறப்பு, வீடியோ பைல் பார்மட்டுகள் குறித்து அவ்வளவாக அறியாதவர்கள் கூட இந்த புரோகிராம் மூலம் தங்கள் வீடியோ பைல்களை மாற்றிக் கொள்ளலாம். அந்த அளவிற்கு எளிமையான வழி நடத்துதல் தரப்பட்டுள்ளன.
இதனை இலவசமாக டவுண்லோட் செய்திடhttp://videoconverter.hamstersoft.com/ என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்ல வேண்டும். விண்டோஸ் இயக்கத்தில் 32 பிட் மற்றும் 64 பிட் இயக்கத்திற்கான தனித்தனி புரோகிராம்கள் தரப்பட்டுள்ளன. விண்டோஸ் 7 இயக்கத்திற்கும் இணைவாக மாற்றத்தை மேற்கொள்ளலாம். அத்துடன் இந்த புரோகிராம் குறித்த் தகவல்கள் 40 மொழிகளில் கிடைக்கின்றன

source:dinamalar

--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails