கேள்வி: என்னுடைய இமெயிலில் ஒரு பகுதியை மட்டும் பிரிண்ட் செய்திட வேண்டியுள்ளது. இதனை எப்படி பிரிண்டருக்கு பிரிண்ட் செய்திடக் கொண்டு போவது?
–வினுகிருபா, வில்லியனூர்
பதில்: எந்த பகுதியைப் பிரிண்ட் செய்திட விருப்பமோ, அதனை முதலில் செலக்ட் செய்திடவும். பின் அதன் மீது ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனு மூலம் காப்பி செய்திடவும். இப்போது கிளிப் போர்டுக்கு உங்கள் டெக்ஸ்ட் வந்துவிட்டது. இதனை வேர்ட் புரோகிராம் அல்லது பேஜ் மேக்கர் போன்ற புரோகிராம்களில் பைல் ஒன்றைத் திறந்து பேஸ்ட் செய்திடலாம். பின் அந்த பைலை பிரிண்ட் செய்திடலாம். அல்லது ஏற்கனவே இருக்கும் டாகுமெண்ட்டில் இதனைப் புது பக்கமாக பேஸ்ட் செய்து, அந்தப் பக்கத்தினை மட்டும் பிரிண்ட் செய்திடலாம். பிரிண்ட் செய்த பின்னர் அந்த டெக்ஸ்ட் தனி பைலாகத் தேவை இல்லை என்றாலோ, அல்லது பைல் ஒன்றில் இடம் பெறுவது தேவை இல்லை என்று கருதினாலோ, அதனை நீக்கிவிடலாம்.
கேள்வி: இணைய பக்கங்களைப் பார்த்துக் கொண்டிருக்கையில், கீழாகவும் மேலாகவும் வேகமாகச் செல்ல எந்த கீகளைப் பயன்படுத்த வேண்டும்? –சி.மேரிபுஷ்பம், பொள்ளாச்சி
பதில்: பேஜ் அப் மற்றும் பேஜ் டவுண் கீகளையே இதற்கும் பயன்படுத்தலாம். விரல்களை அதிகம் நகர்த்தாமல் இந்த செயல்பாட்டினை மேற்கொள்ள ஒரு வழி சொல்லட்டுமா! ஸ்பேஸ் பாரை அழுத்துங்கள், இணைய தளத்தில் ஒரு பக்கம் கீழாக எடுத்துச் செல்லப்படுவீர்கள். ஷிப்ட் கீயையும், ஸ்பேஸ் பாரையும் சேர்த்து அழுத்துங்கள். ஒரு பக்கம் மேலே எடுத்துச் செல்லப்படுவீர்கள். கம்ப்யூட்டர் நம் விருப்பப்படி நடக்கும் செல்லக் குழந்தை.
கேள்வி: கம்ப்யூட்டர் இயங்குவதில் கெர்னல் (kernel) என்ற சொல் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. இப்போது வரும் வைரஸ் பிரச்னைகளிலும் இது குறித்து எழுதப்படுகிறது. இது எதனைக் குறிக்கிறது என்று விளக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். –கம்ப்யூட்டர். அறிவியல் மாணவர்கள் சார்பாக –டி. நமசிவாயம், சிவகாசி
பதில்: பலவகையான கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் கெர்னல் என்பது மிக மிக முக்கியமான ஒரு உறுப்பாகும். இது ஒரு கரு போன்றது. ஹார்ட்வேர் அளவில் நடக்கும் டேட்டா கையாளுதல் செயல்பாட்டிற்கும், அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்பின் செயல்பாட்டிற்கும் இடையே ஒரு பாலமாக, இது இயங்கும். சிஸ்டத்தின் திறன்களை, ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் செயல்பாடு களுக்கெனத் திறமையாக நிர்வாகம் செய்வது கெர்னல் ஒன்றின் பொறுப்பு. சிஸ்டத்தின் திறன் என்பது சென்ட்ரல் ப்ராசசிங் யூனிட், ராம் நினைவகம், கீ போர்டு, மானிட்டர்,டிஸ்க் ட்ரைவ் மற்றும் பிரிண்டர் போன்ற உள்ளீடு, வெளியீடு சாதனங்கள் ஆகியவை ஆகும். இவற்றிலிருந்து கிடைக்கும் வேண்டுகோள் கட்டளைகளை, அவற்றின் நிலை அறிந்து, பெற்று இயக்குவது இந்த கெர்னலின் பொறுப்பு.
விண்டோஸ் இயக்கத்தில் இது எப்படி இடம் பெற்றுள்ளது என்றும் பார்க்கலாம். 1985ல், அப்போதிருந்த எம்.எஸ். டாஸ் இயக்கத்தின் ஆட் ஆன் தொகுப்பாகத்தான் விண்டோஸ் வெளியானது. விண்டோஸ் தன் இயக்கத்திற்கு, டாஸ் இயக்கத்தின் மீது சார்ந்து இருந்ததால், விண்டோஸ் 95 இயக்கத்திற்கு முன் வந்தவை, ஆப்பரேட்டிங் சுற்றுவட்டம் (என்விரான்மென்ட்) (கவனிக்க: ஆப்பரேட்டிங் சிஸ்டம் இல்லை) என அழைக்கப்பட்டது. இப்படியே விண்டோஸ் இயக்கம் 1980 முதல் 2000 வரை இருந்தது. பின்னர் படிப்படியாக கெர்னலிலேயே பயன்பாட்டு செயல்பாடுகளும் தரப்பட்டு, முழுமையான கெர்னல் இயக்கத்தில் விண்டோஸ் பயனாளர் பயன்பாடு அமைந்தது.
அண்மைக் காலத்தில் இந்த கெர்னல் செயல்பாட்டில், விண்டோஸ் 7 உட்பட, அனைத்து விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் பிழை இருப்பதாக அறியப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனம் அவற்றைத் தீர்க்கும் பேட்ச் பைல்களைத் தருவதில் ஈடுபட்டுள்ளது.
கேள்வி: பயர்பாக்ஸ் பிரவுசரில் புக்மார்க்கு களுக்கான போல்டரை உருவாக்க முடியுமா? அப்படியானால், அவ்வாறு புதியதாக உருவாக்கிய போல்டரில் புதிய புக்மார்க்குகளை இøணைக்க முடியுமா? –கா. அறிவரசன், மதுரை
பதில்: பயர்பாக்ஸ் பிரவுசரில் புக்மார்க் போல்டரை உருவாக்குவது மிக எளிது. அதேபோல நீங்கள் விரும்புவது போல அதனை மாற்றி அமைப்பதும் எளிது. இணையத்தில் நாம் விரும்பும் தளங்கள் பல வகைப்படும். கல்வி, ஆராய்ச்சி, விளையாட்டு, பாடல்கள், தொழில் நுட்ப தளங்கள் என இவை பலவாரியாக இருக்கும். இவை அனைத்தையும் ஒரே போல்டரில் போட்டு வைத்தால் தேடிப் பெறுவது கடினம். இங்குதான் போல்டர்கள் நமக்கு உதவுகின்றன.
பயர்பாக்ஸ் பிரவுசரைத் திறந்து கொள்ளவும். பின்னர் Bookmarks என்பதில் கிளிக் செய்து கிடைக்கும் பிரிவில் Organize Bookmarks என்பதைத் தேர்ந்தெடுக்கவும். எங்கு நீங்கள் போல்டரை இணைக்க வேண்டும் என்பதனை முடிவு செய்து கொள்ளவும். Bookmarks என்பதில் ஒரு முறை கிளிக் செய்தவுடன், நீங்கள் போல்டரைக் காண வேண்டும் என்றால், Bookmark Menu என்பதில் ஒருமுறை கிளிக் செய்திடவும். இங்கு ரைட் கிளிக் செய்து கிடைக்கும் பட்டியலில் New Folder என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதற்கு நீங்கள் அடையாளம் காணும் வண்ணம் பெயர் ஒன்றைக் கொடுக்கவும். அதன் பின் Add என்பதில் கிளிக் செய்திடவும். புதிய புக்மார்க் ஒன்றை, நீங்கள் உருவாக்கிய புதிய போல்டரில் இணைக்க வேண்டும் எனில், போல்டரில் ரைட் கிளிக் செய்து, New Bookmarkஎன்பதில் கிளிக் செய்திடவும். இதில் உள்ளName பீல்டில் இணைய தளத்தின் பெயரை (எ.கா Dinamalar ) இடவும். பின்னர் Locationபீல்டில் இணைய தள முகவரியை (எ.கா http://www.dinamalar.com) டைப் செய்திடவும். Keyword என்னும் இடத்தில் நீங்கள் அடையாளம் காணக் கூடிய சிறிய சொல்லை இடலாம். (எ.கா.malar). இதன் பின் என்டர் தட்டவும். இப்போது நீங்கள் அந்த இணைய தளத்திற்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள். Load this bookmark in the sidebar என்பதற்கு முன் உள்ள செக் பாக்ஸில் கிளிக் செய்தால், View – Sidebar – Bookmarksஎன்று செல்கையில் இந்த புக்மார்க் கிடைக்கும்.
ஏற்கனவே நீங்கள் புக்மார்க் செய்தவற்றின் பெயர்களை எப்படி போல்டருக்குக் கொண்டு வருவது என்று பார்க்கலாம். Bookmarks என்பதில் கிளிக் செய்து பின்னர் Organize Bookmarks என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இனி புக்மார்க்குகளை அப்படியே இழுத்துச் சென்று போல்டரில் விடலாம். ஒரே நேரத்தில் பல பழைய புக்மார்க்குகளைப் புதிய போல்டரில் கொண்டு சேர்க்க, கண்ட்ரோல் கீ அழுத்தியவாறே, அவற்றைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் போல்டருக்குக் கொண்டு செல்லவும்.
கேள்வி: வேர்ட் தொகுப்பில் மேலாக உள்ள டூல்பாரில் (பைல், எடிட்,வியூ போன்றவை இருப்பது) உள்ள மெனு பெயர்களில், சில எழுத்துக்களில் மட்டும் அடிக்கோடு இடப்பட்டுள்ளது ஏன்? –ஆ. சந்த்ரு, விழுப்புரம்
பதில்: நீங்கள் குறிப்பிடுவது சரிதான். File என்பதில் F எழுத்திலும், Editஎன்பதில் E எழுத்திலும் அடிக்கோடு இடப்பட்டுள்ளது. அவை அந்த மெனுவின் ஷார்ட் கட் எழுத்தைக் குறிக்கின்றன. Alt கீயுடன் இந்த எழுத்துக்களை அழுத்தினால், அந்த மெனுக்கள் விரியும். எடுத்துக்காட்டாக View என்ற மெனு பெற Alt+V அழுத்தினால் போதும்.
கேள்வி: பைல்களை அழிக்கும்போது, அவை ரீசைக்கிள் பின்னுக்குச் செல்கின்றன. வேண்டாம் எனில், ஷிப்ட் அழுத்தியவாறு டெலீட் கொடுத்தால், அங்கு செல்லாமல் அழிந்து போகின்றன. நான் அழிக்கும் பைல்கள், எனக்கு உறுதியாகத் தெரியும் பட்சத்தில், எப்போதும் அது ரீசைக்கிள் பின்னுக்குச் செல்லக் கூடாது என்று அமைக்க முடியுமா? –கா. மேரி ரெஜினா, ஸ்ரீவில்லிப்புத்தூர்.
பதில்: அதாவது பைலை அழிக்கும்போது அது, அழிக்கப்பட்டே ஆக வேண்டும். ரீசைக்கிள் பின்னுக்குச் செல்லக் கூடாது என்று விரும்புகிறீர்கள். அதனாலென்ன! தாராளமாக செட் செய்திடலாம். ரீசைக்கிள் பின் ஐகான் டெஸ்க்டாப் திரையில் உள்ளதல்லவா? அதில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில், ப்ராப்பர்ட்டீஸ் தேர்ந்தெடுங்கள். இப்போது ரீசைக்கிள் பின் ப்ராப்பர்ட்டீஸ் என்று ஒரு திரை காட்டப்பட்டு, அதில் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள ஹார்ட் டிஸ்க் பிரிவுகள் அனைத்தும், அவற்றின் எழுத்து மற்றும் பெயருடன் தெரியவரும். இதில் Use one setting for all drivesஎன்று ஒரு ரேடியோ பட்டனுடன் கூடிய வரி இருக்கும். இதனைத் தேர்ந்தெடுங்கள். இப்போது அதன் கீழாக, ஒரு சிறிய கட்டத்துடன், Do not move files to the Recycle Bin. Remove files immediately when deletedஎன்று இருக்கும். இதனைத் தேர்ந்தெடுக்க டிக் அடையாளம் அமைத்து ஓகே கொடுக்கவும். இனி ஜாலியாக பைல்களை அழிக்கவும். அது குப்பைத் தொட்டிக்குப் போகாது. ஆனால் எதற்கும் ஒருமுறைக்கு இருமுறை இந்த ஆப்ஷனை மேற்கொள்ளும் முன் யோசிக்கவும்.
No comments:
Post a Comment