| |||||
பாலுறவின் முக்கியத்துவம், அதில் அனுபவிக்க வேண்டிய சுகம் ஆகியவை தொடர்பில் இஸ்லாம் வலியுறுத்தும் விஷயங்களையும் அவை பின்பற்றப்படும் விதத்தினையும் ஆராயும் குறுந்தொடர். |
திருமண பந்தத்துக்குள் தம்பதியர் கலவி இன்பம் அனுபவிக்க வேண்டுமென்று இஸ்லாம் பரிந்துரைக்கிறது. பாலுறவை தடைசெய்யப்பட்ட விஷயமாக அது பார்க்கவில்லை. இஸ்லாத்தில் திருமண பந்தத்துக்குள் எல்லா விஷயங்களும் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. தம்பதியர் இருவருமே அதற்கு உடன்பட்டிருக்க வேண்டும் என்பதுதான் நிபந்தனை என்கிறார் இமாம் அஜ்மல் மஸ்ரூர்.
இஸ்லாத்தின்படி திருமண பந்தத்தை தாண்டி, வெளியில், பாலுறவு கொள்வது தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால் திருமணத்துக்குள் அது ஊக்குவிக்கப்படுகிறது.
இறைதூதர் முகம்மது நபியே கூட, "ஒரு ஆண் ஒரு பெண்ணையோ, ஒரு பெண் ஆணையோ நாடும்போது, பாலுணர்வைத் தூண்டும் காம விளையாட்டுகளில் நன்கு ஈடுபட்டு, புணர்ச்சிக்கு ஒருவரை தயார் செய்துகொள்ள வேண்டும்" என்று சொல்லியிருக்கிறார்ர்கள் என்று விளக்குகிறார் இமாம் அஜ்மல் மஸ்ரூர்.
No comments:
Post a Comment