
வன்னியில் இடம்பெறும் மனிதப் பேரவலத்தை நிறுத்தவும்.இலங்கையில் உடனடியாக போர்நிறுத்தம் வேண்டியும். உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரும் போராட்டங்களையும் உண்ணாவிரதங்களையும் நடாத்தி வருகிறார்கள்.குறிப்பாக ஜரோப்பிய நாடுகளான இங்கிலாந்து. பிரான்ஸ்.ஜெர்மனி.சுவிஸ்.நெதர்லாந்து.ஆகிய நாடுகளிலும். கனடாவிலும் தொடர்போராட்டங்கள் நடைபெறுவதைத் தொடர்ந்து உலக நாடுகளின் போக்கில் சிறிது மாற்றம் வந்திருக்கின்றது. இந்த நாடுகளும் போரை நிறுத்தச் சொல்லி இலங்கையரசிற்கு அழுத்தமற்ற ஒரு வேண்டுகோளை இலங்கையரசிற்கு வைத்திருக்கின்றன.அதே நேரம் ஜ.நா சபையும் தன்பங்கிற்கு கவலை தெரிவித்துள்ளது. அது தவிர்ந்து மனிதவுரிமை மையம். மற்றும் வேறு மனிதவுரிமை ஆர்வலர்களும் அமைப்புக்களும். ஜ.நா சபையிடமும் இலங்கையரசிடமும் நேரடியாகவே தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.. இதே நேரம் உலகநாடுகள் நேரடியாக தலையிடவிடாமல் தடுத்து தானே நேரடியாக இலங்கையரசுடன் சேர்ந்து இந்த யுத்தத்தினை நடாத்தும் இந்திய அதிகாரத்திடமிருந்து பிரணாப் முகர்ஜியும்..நாராயணனும்... மேனனும் கூட போரை நிறுத்தச்சொல்லி அறிக்கை விட்டுவிட்டார்கள். அதே நேரம் படுகொலை செய்யப்படும் தமிழர்களை நினைத்து சோனியவும்.. மன்மோகன் சிங்கும் கவலை தெரிவித்து விட்டார்கள். இவர்களையெல்லாம் விடுங்கள் வேற்று நாட்டவர்கள் வேற்று இனத்தவர்கள் வேற்று மொழிக்காரர்கள். ஏதோ அவர்களால் முடிந்தது அவ்வளவுதான்.ஆனால் இந்தியாவில் தொழில்நுட்ப வளர்ச்சியடைந்த முதன்மையான மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாடு மாநிலத்தின் முதல்வர் மதிப்பிற்குரிய கலைஞர் கரணாநிதி அவர்கள்கூட அவரிடம் தொலைபேசி வசதியோ..தொலைநகல் வசதியோ.. மின்னஞ்சல் வசதியோ.. எஸ்.எம்.எஸ். அனுப்பக்கூட ஒரு கைத்தொலைபேசி வசதிகூட இல்லாத நிலையில்... இலங்கையில் போரை நிறுத்தச் சொல்லி இதுவரை மூன்று தந்திகளை சோனியாவிற்கும். மன்மோகன் சிங்கிற்கும். அனுப்பியுள்ளார்.. அதற்கடுத்ததாய் வருகிற 23 ந்திகதி நாடுதழுவிய பொது வேலை நிறுத்தத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளார். இதேபோல ஈழத்தமிழர் பாதுகாப்பு இயக்கம் கடந்தமாதம் பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தபொழுது ..பொது வேலைநிறுத்தம் என்பது இந்திய அரசியலமைப்புசட்டத்திற்கு எதிரானது என்று கருணாநிதி சொன்னது யாரிற்காவது நினைவிற்கு வந்தால் அதனை தயவு செய்து மறந்து விடுங்கள்..ஏனென்றால் மக்களின் மறதிதானே தமிழ்நாட்டு அரசியலின் வெற்றி.. இனியென்ன அடுத்ததாக உலகத்தமிழர்கள் அனைவருமே எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு செய்தி என்னவெனில் இலங்கையில் போரை நிறுத்தச்சொல்லி மகிந்தராஜபச்சா உண்ணாவிரதப்போராட்டம் என்கிற ஒரேயொரு செய்திதான். அப்படி ஒரு செய்தி வந்தாலும் நாங்கள் ஆச்சரியப்படமாட்டோம்.. ஏனென்றால் அதனையும் போட்டி போட்டு வரவேற்க நம்ம கலைஞர் இருக்கிறார்..
No comments:
Post a Comment