Sunday, April 19, 2009

முஸ்லிம்கள் கிறிஸ்துவைப் பின்பற்றக் காரணம் என்ன?

 

ஒவ்வொரு வருடமும் புதியதாக கிறிஸ்தவர்களாக மாறுபவர்களின் எண்ணிக்கை முஸ்லிம்களாக மாறுபவர்களின் எண்ணிக்கையை விட அதிகம் என்று ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது. கிறிஸ்தவர்களின் வாழ்க்கை முறை முஸ்லிம்களைக் கவர்ந்துள்ளதே இதற்குக் காரணம். Fuller Theological Seminary's School of Intercultural Studies என்ற நிறுவனம் 1991 முதல் 2007 வரை கிறிஸ்துவைப் பின்பற்றத் தீர்மானித்த 750 முஸ்லிம்களிடம் சர்வே நடத்தி அவர்களைத் தூண்டிய காரணிகளைக் கண்டறிந்தது. இதில் பங்கேற்றவர்கள் 30 நாடுகளைச் சேர்ந்த 50 இனப் பிரிவுகளைச் சேர்ந்த இஸ்லாமிய உலகின் ஒவ்வொரு பிராந்தியத்தையும் சேர்ந்தவர்கள்.

இதில் பங்கேற்ற சிலர் கிறிஸ்தவர்களின் போதனைக்கும் தங்கள் வாழ்க்கைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்று தெரிவித்தனர். ஒரு எகிப்தியர் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் கிறிஸ்தவக் குழு காட்டிய அன்புக்கும் மெதினாவிலுள்ள பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் அன்பற்ற வழிமுறைகளுக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்வதாகத் தெரிவித்தார். இன்னும் சிலர் கிறிஸ்தவர்கள் பெண்களை சமமாக நடத்துவதாகவும் அன்பான வாழ்க்கையை நடத்துவதாகவும் தெரிவித்தனர். முஸ்லிம்கள் பிற முஸ்லிம்கள் மேல் நடத்தும் வன்முறை அவர்களை நம்பிக்கை இழக்கச் செய்திருக்கிறது. அடுத்ததாக ஜெபத்திற்கு பதிலளிக்கும் மற்றும் குணமாக்கும் கடவுளின் வல்லமை இவர்களைப் பாதித்துள்ளது. முகமதுவுக்கு எந்த நபரையும் நோயிலிருந்து விடுவிக்கும் அற்புத சக்தி கிடையாது என்பதை நினைவிற் கொள்ளவும்.

மூன்றாவதாக தாங்கள் பின்பற்றிய‌ இஸ்லாத்தின்மீது ஏற்பட்ட திருப்தியின்மை. குரான் கடவுளின் அன்பைவிட தண்டனையைப் ப‌ற்றியும் இஸ்லாமியச் சட்டங்களை நடைமுறைப்படுத்தும் வன்முறையான வழிகளைப் பற்றியுமே அதிகமாக வலியுறுத்துகிறது. இந்த நம்பிக்கையின்மை இஸ்லாமிய உலகில் அதிகமாகக் காணப்படுகிறது. கோமெனியின் 1979ம் வருட புரட்சியினால் ஏற்பட்ட முல்லாக்களின் ஆட்சியினால் ஏற்பட்ட
வெறுப்பையடுத்து பல ஈரானியர்கள் சுவிசேஷத்தின்மேல் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். பாகிஸ்தானியர்களுக்கு இந்த நிலைமை அதிபர் ஜியா‍ உல் ஹக் (1977 - 1988) இஸ்லாமியச் சட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சித்தபோது ஏற்பட்டது. தற்போது தலிபான்களின் முன்னேற்றத்தையடுத்து அவர்களின் நிலை சொல்லாமலேயே விளங்கும். ஆஃப்கானியர்கள் தலிபான்களின் ஆட்சிக்கு (1994 - 2001) பிறகு வெளிப்படையாகவே சொல்ல ஆரம்பித்து விட்டனர்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம், 27 சதவீத பங்கேற்பாளர்கள் சொப்பனங்களும் கனவுகளும் கிறிஸ்துவைப் பின்பற்றத் தீர்மானித்தத‌ற்கு முக்கிய காரணம் என்று தெரிவித்தனர். இதில் 40 சதவீதம் பேருக்கு கிறிஸ்தவர்களாக மாறியபோதும் 45 சதவீதம் பேருக்கு கிறிஸ்துவுக்குள் வந்த பிறகும் சொப்பனங்களோ தரிசனங்களோ ஏற்பட்டிருக்கின்றன.

மேலும் மதம் மாறிய பலரும் கிறிஸ்து வழங்கும் ரட்சிப்பு மற்றும் மன்னிப்பின் நிச்சயத்தின்பால் கவரப்பட்டுள்ளனர். இஸ்லாமில் கடவுள் அவருடைய விருப்பப்படி யாரை வேண்டுமென்றாலும் மன்னிக்கவோ தண்டிக்கவோ செய்வார் என்றுள்ளதால் ரட்சிப்பு என்பது நிச்சயமில்லை. ஆனால் கிறிஸ்தவத்தில் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்தால் ரட்சிப்பு நிச்சயம்.

கிறிஸ்தவர்களாக மாறுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் முஸ்லிம்களின் வருடாந்திர வளர்ச்சி விகிதம் (1.81 சதவீதம்) கிறிஸ்தவர்களை விட (1.23 சதவீதம்) அதிகம் ஆகும். கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை மொத்தத்தில் அதிகமாக இருப்பதால் வளர்ச்சி விகிதம் அதிகரிக்க வேண்டுமென்றால் இன்னும் அதிகமானோர் தேவை. மேலும் முஸ்லிம்களின் பிறப்பு விகிதம் அதிகம் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று.


Reference:

http://www.christianpost.com

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails