மோதல் தவிர்ப்பு வலயத்தில் உள்ள ஆயிரக் கணக்கான சிவிலியன்கள் பட்டினிச் சாவை எதிர்நோக்கியுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 165,000 பொதுமக்கள் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இன்னமும் இருப்பதாக குறிப்பிட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் தமது பிரதேசத்தில் உணவுக் கையிருப்பு முடிவடைந்துள்ளதாகவும், உடனடியாக உணவு விநியோகம் செய்யப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். வன்னிச் சிவிலியன்களுக்கு உணவு வழங்க சர்வதேச சமூகம் அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டுமென தெரிவித்துள்ள அவர்கள், தொண்டு நிறுவனங்கள் யுத்த வலயத்திற்கு செல்ல அரசாங்கம் அனுமதி மறுத்துள்ள நிலையில் மக்கள் பேரவலத்தை எதிர்நோக்கியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர். இலங்கை அரசாங்கம் மோதல் தவிர்ப்பு வலயத்திற்கான உணவு விநியோகப் பாதைகளை மூடியுள்ளதாக புலிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். இதனால் மோதல் தவிர்ப்பு வலயத்தில் உள்ள அப்பாவிச் சிவலியன்கள் பட்டினியால் வாடுவதாக புலிகள் தமது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளனர். விடுதலைப் புலிகள் சர்வதேச சமூகத்திடம் விடுத்துள்ள கோரிக்கை கடிதம் ஆங்கிலத்தில் இணைக்கப்பட்டுள்ளது. |
No comments:
Post a Comment