Sunday, April 26, 2009

கருணாநிதியின் இந்த பச்சை துரோகத்துக்கும்,500 கோடி சுவிஸ் வங்கி பணத்துக்கும் என்ன சம்மந்தம்-அதிர்வின் ரிப்போர்ட்

தமிழ் நாட்டு அரசியலில் பெரும் மாற்றங்கள் இடம்பெற ஆரம்பித்திருப்பது நாம் அனைவரும் அறிந்த விடையம். இருப்பினும் மறைமுகமாக பல விடையங்கள் நடந்தவண்ணம் உள்ளது. குறிப்பாக தற்போதைய நிலையில் இந்திரா காங்கிரஸ் கலைஞர் கூட்டணியானது வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பல அதிர்சி தோல்விகளை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ் நாட்டில் நாளுக்கு நாள் இலங்கைத் தமிழருக்கான ஆதரவு பெருகிவரும் நிலையில், காங்கிரசுக்கு தமிழினத் துரோகி என்ற முத்திரை குத்தப்பட்டுள்ளது. சரளமாக சென்னை வந்து பல கூட்டங்களை நடத்திச் சென்ற சோனியா அம்மையார் தற்போது சென்னைக்கு வரமுடியாத நிலை காணப்படுகிறது. அங்கு வந்தால் அவர் உயிருக்கு ஆபத்தாக அமையலாம் என இந்திய புலனாய்வு துறையான ரோவின் எச்சரிக்கையை அடுத்து அவர் அடக்கிவாசிக்க ஆரம்பித்திருக்கிறார்.

இந்த வேளையில் எப்போதுமே கருப்பு கண்ணாடியுடன் காணப்படும் பழுத்த, பழம்பெரும் அரசியல்வாதி ஒருவருக்கு தற்போது நடுக்கம் ஆரம்பித்திருக்கிறது. 80 வயது தாண்டியும் நடுக்கம் இன்றி காணப்படும் இவர் தேர்தல் சமயங்களில் மட்டும் சிலவேளைகளில் நடுங்குவது உண்டு. கவிதைகள் பாடி,எதுகை மோனைகளில் கதைத்து கடைசியில் காலைவாரும் நல்ல பழக்கங்களை கொண்ட இவரது கட்சி தேர்தலில் தோல்வியை சந்தித்துவிடக் கூடாது என்பதற்காகவே தற்போது சிவ்சங்கர் மேனனும் நாராயனனும் இலங்கை வர இருக்கிறார்கள். மே மாதம் 15ம் திகதி தமிழ் நாட்டில் தேர்தல். அதற்கு முன்னதாக இலங்கையில் ஒரு 10 நாள் யுத்த நிறுத்தத்தை அமுல் படுத்தினால் அதனை ஒரு பரப்புரையாக்கி பாமர தமிழ் நாட்டு மக்களை ஏமாற்றி வோட்டுகளை வென்றுவிட இந்த கருப்பு கண்ணாடி மணிதர் திட்டம் தீட்டி இருக்கலாம்.

பலிக்குமா இலங்கை அரசுடன் ? இது ஒருபுறம் இருக்க, ஒரு சுவாரசியமான செய்தி ஒன்று சொல்லுகிறேன்...கேளுங்கள்.... ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த காலத்தில் பொபோர்ஸ் எனப்படும் பீரங்கிகளை வெளிநாடு ஒன்றிடம் இருந்து வாங்கியதில் பெரும் ஊளல் நடைபெற்றது. கோடிக்கணக்கான ரூபாய்களை லஞ்சமாக பெற்றார் என பரவலாக பேசப்பட்ட நிலையில் அவர் தேர்தலையும் சந்திக்கவேண்டிய நிலையில் இருந்தார். அப்போது தமிழகத்தில் இந்திரா காங்கிரஸ் பெரிய கட்சி, அவர்களுக்கு எதிராக போட்டியிட்ட பல கட்சிகள் இந்த பொபோர்ஸ் பீரங்கி ஊளலை ஒரு ஆயுதமாக தேர்தலில் பயன்படுத்தியது. அதி உச்சக்கட்ட பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தன எதிர்கட்சிகள் ஒரு கட்டத்தில் பொபோர்ஸ் பீரங்கியின் படங்களை கட்-அவுட் ஆக செய்து (ரஜனி கமலுக்கு செய்வது போல) பல இடங்களில் கட்டினர். தேர்தல் பிரச்சாரங்களும் முடிவிற்கு வந்தது. தேர்தல் நாளும் வந்தது. வாக்குச் சாவடிக்கு சென்ற மக்கள் பலர் வாக்களிக்கும் போது எங்கே பீரங்கி சின்னம் இங்கு இல்லையே என அதிகாரிகளிடம் கேட்டிருக்கிறார்கள்.

இவ்வளவு தொண்டை கிளிய கத்தி, பொர்போஸ் பீரங்கி பற்றி எடுத்துக் கூறி அதை விளங்கப்படுத்த அதனை படமாக்கி கட்-அவுட்டாக வைத்தால், அதனையும் ஒரு கட்சியின் சின்னம் என மக்கள் நினைத்துவிட்டார்கள் என்று அப்பதான் அதிகாரிகள் ஓடிமுளித்துள்ளார்கள். அப்போதைய தமிழ் நாட்டு மக்கள் வேறு தற்போதைய தமிழ் நாட்டு மக்கள் வேறு.. இப்பவும் பலிக்குமா கறுப்புக்கண்ணாடி மனிதரின் பாச்சா ? அதனால் தான் தேர்தலுக்கு கிட்டவாக ஒரு சிறிய யுத்த நிறுத்தம் ஒன்றை இலங்கை அரசு அறிவித்தால் அதில் சற்று குளிர்காய ஆசைப்படுகிறது காங்கிரஸ். ஒருமுறை நிருபர் ஒருவர் நீங்கள் ஏன் எப்போதும் கறுப்பு கண்ணாடி அணிந்திருக்கிறீர்கள் என கலைஞரை கேட்டபோது, இதை நான் அணிந்திருந்தால் எல்லாரும் என்னைப் பார்க்கலாம் ஆனால் நான் யாரை பார்க்கிறேன் என்று யாருக்கும் தெரியாது என்று பதில் கூறியிருக்கிறார்.

இது இவ்வாறிருக்க கலைஞரால் ஏன் மத்திய அரசுக்கு எதிராக அதிரடி நடவடிக்கையில் இறங்க முடியவில்லை என பலராலும் கேள்வி எழுப்பப்படுகிறது. இன்று கலைஞரின் கட்சி ஆதரவை விலக்கினால் மத்தியில் ஆட்சி கலையும் நிலையில் இருக்கும் போது ஏன் கலைஞரால் இதனைச் செய்ய முடியவில்லை? இதற்கும் ஒரு காரணம் தான் உண்டு. ஸ்பெக்ரம் ரெலிகொம் ஊளல்.

இதுவும் ஒரு சுவாரசியமான தகவல். ! ஸ்பெக்ரம் ரெலிகாம் ஊளலில் சுமார் 500 கோடி ரூபா கவிஞர் கனிமொழியின் சுவிஸ் வங்கி கணக்கில் இடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வைப்பில் இடப்பட்ட தொகையின் பற்றுச்சீட்டின் பிரதி ஒன்று எம்.கே. நாராயனனின் கையில் உள்ளதாக பரவலாக பேசப்படுகிறது. இந்த பற்றுச்சீட்டின் பிரதி ஒன்று எவ்வாறு எம்.கே. நாராயனனின் கையில் சிக்கியது என ஆராய்ந்து, ஆராய்ந்து கடைசியில் வைத்தியசாலைவரை சென்று திரும்பி இருக்கிறார் கலைஞர்.

கலைஞர் இலங்கைத் தமிழரைப்பற்றியோ அல்லது ஆட்சிக்கலைப்புப் பற்றியோ வாய்திறந்தால் நாராயனன் கையில் இருக்கும் சுவிஸ் வங்கியின் பற்றுச்சீட்டுதான் நினைவிற்குவரும். இதனால் கனிமொழியை காப்பாற்ற அத்துடன் தனது மானத்தையும் காக்க கலைஞர் ஆடும் நாடகமே தனி. ஆங்காங்கே மாட்டிக்கொண்டு இவர் அடிக்கும் அரசியல் லூட்டியில் தமிழன் உயிர் நாளுக்கு நாள் மடிந்த வண்ணம் உள்ளது. போதாக்குறைக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் கவிதைவேறு பாடுகிறார் ஈழத் தமிழரைப் பற்றி.....


No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails