தலைப்பை பார்த்தவுடன் பலருக்கு என் மேல் கோபம் வரும்.அல்லது வருத்தப்படுவார்கள்.அன்பான தமிழ்வெளி நிர்வாகம் கூட சங்கடப்படலாம்.ஆனால் இதற்காக நான் இந்த தலைப்பை வைக்கவில்லை.பின்ன எதற்காக வைத்தீர்கள் என்று நீங்கள் கேட்பது எனக்கு தெரிகிறது.
கொஞ்சம் பொருங்கள் விவரமாக விளக்குகிறேன்.
கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு வரை இணைய உலகில் திரட்டி என்றாலே நினைவுக்கு முதலில் வருவது தமிழ்மணம் அதை விட்டால் தேன்கூடு இரண்டு மட்டும் தான்.
பெயரளவில் தமிழ்வெளி திரட்டி இருந்து வந்தது.இந்த கடந்த வருடத்தில் அநேக திரட்டிகள் முளைத்தெழுந்தது நாம் அனைவரும் அறிந்ததே.
இதற்கென்ன என்று கேட்கிறீர்களா?கொஞ்சம் பொருங்கோ அதற்குத்தான்வருகிறேன் நான் பிளாக்கர் ஆரம்பித்த புதிதில் சக பதிவர் ஒருவரின் அறிமுகம் எனக்கு கிடைத்திருந்தது.அவரிடம் ஒரு சில இணைய தொழில்நுட்ப விஷயங்களை மெயிலுவது வழக்கம்.
என்னுடைய பிளாக்கரில் தமிழ்மணம்,தேன்கூடு,மற்றும் தமிழ்வெளி ஆகிய திரட்டிகளின் கருவிப்பட்டைகளை(லிங்க் இமேஞ்) இணைத்து விட்டு சக பதிவரின் பிளாக்குக்கு சென்று பார்வையிட்டேன்.அதில் முந்தின இரண்டு திரட்டிகளின் தொடுப்பு மட்டும் இருந்தது.
உடனே நான் அவரிடம் மெயிலினேன்.அதில் இன்னொரு திரட்டி உண்டு.அதன் பெயர் தமிழ்வெளி.உடனே அதில் உங்களை பதிந்து அதன் தொடுப்ப்பை உங்கள் பிளாக்கரில் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று சொன்னேன்.
ஆனால் அதற்கு அவரிடம் இருந்து வந்த பதில் என்னை மிகவும் ஏமாற்றத்தில் தள்ளியது.ஒருவாராக சமாளித்துக்கொண்டேன்.அப்படி அவர் என்ன சொன்னார் தெரியுமா?
இப்பொழுது தலைப்பை மீண்டும் படியுங்கள்.இதுதான் அவர் என்னிடம் சொன்ன பதில்.
அதன் பிறகு நான் இந்த விசயத்தை பற்ற்ரி பேசவில்லை.பல நாட்கள் ஆகிவிட்டது.கடந்த வாரத்தில் நான் அந்த சக பதிவரின் பிளாக்குக்கு செல்ல நேரிட்டது.அப்ப்பொழுது என்னால் நம்பமுடியவில்லை.தலைப்பை சொன்ன அதே பதிவார் அவரின் பிளாக்கில் கீழே உள்ள படத்தை இணைத்திருந்தார்.எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது..
இதிலிருந்து ஒன்று தெரிந்தது .நன்றாக வாழ்ந்திருந்தாலே தமிழன் நம்மை வாழ்த்துவான்.சிருத்துப்போன நாட்களில் நம்மை தூற்றுவான்.நான் ஈழப்பிரச்சனை பற்றி பேசுகிறேன் என்று நினைக்க வேன்ண்டாம்.
பின்குறிப்பு:கடந்த மாதங்களில் என் பிளாக்கருக்கு திரட்டிகளின் வருகை பதிவாளர்கள் எண்ணிக்கையில் தமிழ்வெளி திரட்டியே முதலிடம் பிடித்துள்ளது.
இதற்கு தமிழ்வெளியின் சமீபக்கால புத்தெழுர்ச்சியே ஒரு காரணம் என்று நினைக்கிறேன்.உங்கள் கருத்துக்களை அறியலாமா?
No comments:
Post a Comment