* உங்கள் திரையில் பல விண்டோக்களைத் திறந்து வைத்து இயங்கிக் கொண்டிருக்கிறீர்களா? அனைத்தையும் மூடி திரையில் இருக்கும் ஒரு ஐகானைக் கிளிக் செய்திட விரும்புகிறீர்களா? விண்டோஸ்(Windows) கீயை (கண்ட்ரோல் மற்றும் ஆல்ட் கீகளுக்கு நடுவே விண்டோஸ் படத்துடன் உள்ள கீ) அழுத்திக் கொண்டு அதனுடன் D கீயை அழுத்தவும். அனைத்து விண்டோக்களும் மினிமைஸ் செய்யப்படும். அய்யோ ! மீண்டும் அவை வேண்டுமே என்று எண்ணுகிறீர்களா? மறுபடியும் அதே போல அந்த இரண்டு கீகளையும் அழுத்துங்கள். மீண்டும் அவை கிடைக்கும்.
* உங்களுடைய சி டிரைவில் என்ன என்ன உள்ளன என்று அறிய ஆவலா? விண்டோஸ் எக்ஸ்புளோரர் சென்று சி டிரைவ் மீது கிளிக் செய்து அறிவது ஒரு வழி. டாஸ் கமாண்ட் பிராம்ப்ட் வரவழைத்து அதில் C:\ என டைப் செய்து என்டர் அழுத்தி அறிவது ஒரு வழி. இன்னொரு வழியும் உள்ளது. எக்ஸ்பி தொகுப்பில் விண்டோஸ் கீ அல்லது ஸ்டார்ட் அழுத்தி அதில் வரும் மெனுவில்Run கிளிக் செய்து அதில் கிடைக்கும் விண்டோவில் C என மட்டும் டைப் செய்து என்டர் அழுத்துங்கள். உடனே விண்டோஸ் எக்ஸ்புளோரர் திறக்கப்பட்டு C டிரைவில் உள்ள போல்டர்கள் மற்றும் பைல்கள் காட்டப்படும். அல்லது \ என்ற பேக்ஸ்லாஷ் அமைத்து என்டர் தட்ட சி டிரைவ் பைல்கள் கிடைக்கும்.
* பைல்களை அழிக்கிறீர்கள். அவை எங்கே செல்கின்றன? ரீசைக்கிள் பின்னுக்குத்தான். இப்படியே அழித்துக் கொண்டு போகப் போக அவை அங்கு நிரம்பிக் கொண்டே இருக்கும். ஒரு நிலையில் என்ன பைல்களை எல்லாம் அழித்தோம் என்று தெரிய விரும்புகிறீர்களா? அல்லது நீக்கிய பைல்களை கம்ப்யூட்டரிலிருந்தே அழிக்க விரும்புகிறீர்களா? ரீசைக்கிள் பின் ஐகானில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Open என்பதனைக் கிளிக் செய்திடவும். இப்போது நீங்கள் அழித்த பைல்கள் தெரிய வரும். ஆனால் இவற்றை அங்கேயே கிளிக் செய்வதன் மூலம் படிக்க முடியாது. நீங்கள் மீண்டும் படிக்க விரும்பும் பைல்களை அந்த பைல் இருந்த டிரைவ் மற்றும் போல்டருக்குக் கொண்டு சென்ற பின்னரே படிக்க முடியும். இதற்கு மீண்டும் காண விரும்பும் பைலை செலக்ட் செய்து ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில்Restore என்ற பிரிவைக் கிளிக் செய்திட பைல் அதன் முந்தைய இடத்திற்குச் செல்லும். அங்கு சென்று அந்த பைலைத் திறந்து படித்துக் கொள்ளலாம்.
--
http://thamilislam.tk
No comments:
Post a Comment