ஆத்தூர் : ஆத்தூர் அருகே, மனித உருவில் இறந்தே பிறந்த ஆட்டுக்குட்டியை ஏராளமானோர் பார்த்து வியந்தனர். சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சி பைத்தூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல். 50க்கும் மேற்பட்ட வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார். நிறைமாத சினையாக இருந்த ஆடு, நேற்று அதிகாலை 5 மணியளவில் கடும் சிரமத்துடன் குட்டியை ஈன்றது. பிறந்த ஆட்டுக் குட்டி மனித உருவத்தில் இறந்தே பிறந்ததை கண்ட வெற்றிவேல் அதிர்ச்சியடைந்தார். ஆட்டுக் குட்டியின் உடலில் முடிகள் இல்லை. ரப்பர் பொம்மை குழந்தை போல காணப்பட்டது. தகவலறிந்த அப்பகுதியினர், அதிசய ஆட்டுக் குட்டியை வியப்புடன் பார்த்துச் சென்றனர். கால்நடை மருத்துவ ஆய்வாளர் சேகரன், ஆட்டுக்குட்டியின் உடலை ஆத்தூர் கால்நடை மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு எடுத்து சென்றார்.
கால்நடை மருத்துவர் தேவேந்திரன் கூறியதாவது: ஒரே வகையான கிடா ஆடு மூலம் பெட்டை ஆடுகளுக்கு இனவிருத்திக்காக கருவூட்டல் செய்கின்றனர். மரபணு கோளாறு காரணமாக உடல் முழுவதும் நீர் நிரம்பி, ரப்பர் போன்ற குட்டி பிறந்துள்ளது. ஆடு சினை பிடிப்புக்கு வேறு கலப்பின கிடாவை பயன்படுத்த வேண்டும். மனித இனத்தில் நெருங்கிய உறவு முறையில் திருமணம் செய்தால் குறைபாடு உள்ள குழந்தைகள் பிறப்பது போல, ஆடுகளுக்கும் இனவிருத்தியில் குறைபாடு ஏற்படும். ஆத்தூரில் பிறந்த ஆட்டுக் குட்டி மனித உருவத்தில், ரப்பர் குழந்தை போல் உள்ளதால் பரிசோதனை செய்யவுள்ளோம். இவ்வாறு தேவேந்திரன் கூறினா
source:dinamalar
--
http://thamilislam.tk
No comments:
Post a Comment