துபாய், ஜூன். 19-
குவைத் நாட்டு இளவரசர் ஷேக் பாசல் (52). கடந்த சில நாட்களுக்கு முன்பு துபாயில் இவர் தனது உறவினருடன் காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது முற்றி தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த உறவி னர் அவரை துப்பாக்கியால் சிட்டார்.
இதனால் உயிருக்கு போராடிய அவரை துபாயில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
அவரது இறுதி சடங்கு இன்று நடைபெறுகிறது. இந்த தகவலை குவைத் அரசு தெரிவித்துள்ளது. இதற் கிடையே, அவரை சுட்ட உறவினரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே, இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. பல முறை துப்பாக்கியால் சுட்டும் இவர் தப்பி விட்டார். தற்போது துப்பாக்கி குண்டுக்கு பலியாகி விட்டார் என்ற தகவல் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சுட்டுக் கொல்லப்பட்ட இளவரசர் ஷேக் பாசல் குவைத்தின் 12-வது அரசர், ஷேக் ஷாப் அல்சலீம் அல்சபாவின் பேரன் ஆவார். இளவரசர் ஷேக் பாசலின் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
source:maalaimalar
http://thamilislam.tk
No comments:
Post a Comment