Thursday, June 3, 2010

துருக்கி-இஸ்ரேல் மோதல் முற்றுகிறது

 
மத்திய கிழக்கின் காசா பகுதிக்கு உதவி நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பல் தொடரணி மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில், அதிலிருந்த நான்கு துருக்கிய செயற்பாட்டாளர்கள் கொல்லப்பட்டது துருக்கியில் தேசிய உணர்வுகளை பெருமளவில் தூண்டிவிட்டுள்ளது.

இஸ்ரேலின் தாக்குதலுக்கு உள்ளான ஒரு கப்பல்
இஸ்ரேலின் தாக்குதலுக்கு உள்ளான ஒரு கப்பல்

இந்தச் சம்பவத்தை அடுத்து, இஸ்ரேலுடனான அனைத்து இராணுவ மற்றும் பொருளாதார உறவுகளையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என துருக்கிய நாடாளுமன்றம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.

துருக்கியை ஆளும் நீதி மற்றும் வளர்ச்சிக்கான கட்சியின் சில உறுப்பினர்கள் இஸ்ரேல் மீது இன்னும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் முகமான அறிக்கையை கோரினார்கள்.

இதில் இஸ்ரேலுடன் துருக்கிக்கு இருக்கும் குறிப்பிடத்தக்க இராணுவ மற்றும் வர்த்தக உறவுகளும் அடங்கும். இந்த உறவுகளை உறைநிலையில் வைக்க வேண்டும் என அவர்கள் விரும்பினர்.

ஆனால், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமோ இந்த உறவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்கிற அளவிலேயே இருந்தது.

துருக்கி இந்தச் சம்பவம் குறித்து ஒரு சுயாதீனமான விசாரணையை கோரியுள்ளது. மேலும் இஸ்ரேல் இது தொடர்பாக, மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கொல்லப்பட்ட தமது நாட்டினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் துருக்கி கோரியுள்ளது.

இஸ்ரேலுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள்
இஸ்ரேலுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள்

வர்த்த ரீதியில் துருக்கி மற்றும் இஸ்ரேலுக்கு இடையே நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல் சம்பவம் இதில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்றும் கூறப்படுகிறது.

இந்த இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம் ஆண்டொன்றுக்கு மூன்று பில்லியன் டாலர்களுக்கும் கூடுதலான அளவில் உள்ளது. மேலும் பல டஜன் கணக்கில் கூட்டு நிறுவனங்களும் உள்ளன.

இஸ்ரேல் நடத்திய தாக்குதலை அடுத்து, அந்நாட்டுக்கும் துருக்கிக்கும் இடையேயான நெருங்கிய இராணுவ உறவுகளுக்கு ஆபத்து ஏற்படலாம் என பிபிசியின் செய்தியாளர் கூறுகிறார்.

இஸ்ரேலுடனான தமது அனைத்து உறவுகளையும் மீள்பரிசீலனை செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என துருக்கியின் வெளியுறவு அமைச்சர் அஹ்மட் டாவுடோக்லூ தெரிவித்துள்ளார்.


source:BBC


--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails