போட்டோக்களை இணைய தளத்தில் வைத்து பாதுகாப்பது இன்று பரவலாகப் பலரும் பயன்படுத்தும் ஒரு வசதியாக மாறி வருகிறது. பல இணைய தளங்கள் போட்டி போட்டுக் கொண்டு இதற்கான வசதிகளைச் செய்து வருகின்றன. போட்டோக்களை அனைவரும் காணும் வகையிலோ அல்லது குறிப்பிட்ட சிலர் மட்டும் காணும் வகையிலோ பதிந்து வைக்கலாம். ஒவ்வொருவருக்கும் போட்டோக்களைப் பதிய தரப்படும் டிஸ்க் இடம், தளத்திற்கு தளம் மாறுபடுகிறது. ஜிமெயில் அக்கவுண்ட் உள்ளவர்கள் அனைவரும், கூகுள் தரும் ஜி போட்டோ ஸ்பேஸ் பகுதியினையும் பயன்படுத்தலாம்.
உங்களுக்கு போட்டோக்களை ஆன்லைனில் அனுப்புவதில் சிக்கல்களை எதிர் கொள்கிறீர்களா? அப்லோட் செய்வதில் பெரிய அளவில் பிரச்னைகளைச் சந்திக்கிறீர்களா? சேமிக்கும் இடம் அதிகமாக உங்களுக்கு வேண்டுமா? அதற்காக நீங்கள் பயன்படுத்தும் தளம் கூடுதல் கட்டணம் கேட்கிறதா? உங்கள் தனி நபர் சுதந்திரம் இந்த வகையில் பாதிக்கப்படுகிறதா?
அப்படியானால், நீங்கள் கூகுள் தரும் ஜிபோட்டோ ஸ்பேஸ் பயன்படுத்தத் தொடங்கலாம். கூகுள் தரும் கூடுதல் வசதிகளையும், அதற்கான பயர்பாக்ஸ் ஆட் தொகுப்பு குறித்தும் இங்கு காணலாம். கூகுள் தரும் ஜிபோட்டோ ஸ்பேஸ் வசதிக்கு எந்த நிலையிலும் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை.
பயர்பாக்ஸ் எக்ஸ்டன்ஷன் மூலம் 50 போட்டோக்களை ஒரு தொகுப்பாக அப்லோட் செய்திடலாம். மற்ற எந்த இணைய அப்லோடிங் வசதியைக் காட்டிலும், இது ஐந்து மடங்கு வேகத்தில் அப்லோட் செய்கிறது.
பல தளங்கள், குறைந்த அளவே போட்டோக்களை சேமிக்க இடம் தருகின்றன. ஜிபோட்டோ ஸ்பேஸ் இதற்கென வரையறையை விதிக்கவில்லை. ஜிமெயிலுக்கு ஒதுக்கப்படும் 7 ஜிபி மற்றும் கூடுதல் இடம் தரத் தயாராய் உள்ளது. இணைய தளத்தில் பதிக்கப்படும் போட்டோக்களை மற்றவர்கள் பகிர்ந்து பார்ப்பதன் மூலம், உலகம் முழுவதும் உள்ள மக்கள் பார்த்துவிடுவார்களோ என்ற அச்சம் இருந்தால், ஜிபோட்டோ ஸ்பேஸ் அதனைத் தீர்க்கிறது. நீங்கள் உங்கள் தனிநபர் உரிமையை 100% பாதுகாத்துக் கொள்ளலாம்.
மேலும் விபரங்களுக்கும் தகவல்களுக்கும் http://www.gphotospace.com/features.html என்ற முகவரியில் உள்ள தளத்தினைப் பார்க்கவும்.
No comments:
Post a Comment