Tuesday, June 8, 2010

இந்த வார டவுண்லோட்

கெட்டுப்போன "சிடி'யிலிருந்து டேட்டா
தொலைபேசி மூலமாகவும், கடிதங்களிலும் பல வாசகர்கள், தங்களிடம் உள்ள சிடியில் ஸ்கிராட்ச், கோந்து மற்றும் பிற பட்டதனால், சிடி ட்ரைவில் டேட்டா படிக்கப்படவில்லை, வெளியே தள்ளப்படுகிறது என்றும், இதற்கு ஏதேனும் தீர்வு உண்டா என்றும் கேட்டிருந்தனர்.
இதற்குத் தீர்வாக ஒரு இலவச புரோகிராம் ஒன்று இருப்பதனை அண்மையில் பார்த்தேன். அந்த புரோகிராம் பெயர் CDRoller. இந்த புரோகிராம், வழக்கமான விண்டோஸ் டூல்கள் மூலம், சிடி ட்ரைவினால் படிக்க இயலாத, சிடி/டிவிடி/புளுரே டிஸ்க் ஆகிய டிஸ்க்குகளிலிருந்து டேட்டாவினைப் பெற்றுத் தருகிறது. பெரும்பாலான சிடிக்களிடம் இது பலனளிக்கிறது. இந்த புரோகிராமினாலும் படிக்க இயலவில்லை என்றால், டேட்டாவினை, அத்தகைய சிடிக்களிடமிருந்து பெறுவது கஷ்டம்தான்.
இந்த புரோகிராமினை http://download.cnet.com/CDRoller/30102248_411384331.html என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து பெறலாம். சி.டி. ரோலரின் பதிப்பு 8.81 தற்சமயம் கிடைக்கிறது. இதனை இன்ஸ்டால் செய்து, படிக்க இயலாத சிடிக்களிடமிருந்து டேட்டா பெற முயற்சிக்கலாம். இதில் ஒரு யு.டி.எப். ரீடர்(UDF Reader) தரப்பட்டுள்ளது. இது பல முறை எழுதப்பட்ட (Multi Session CDs) சிடிக்களிலும் சிறப்பாக இயங்குகிறது. சிடிக்களிலிருந்து கவனக் குறைவாக அழிக்கப்பட்ட பைல்களையும் மீட்டுத் தருகிறது. சாதாரணமாகப் படிக்க இயலாத பைல்களை, ட்ராக் அண்ட் ட்ராப் முறையில் மீட்டுத் தருகிறது. இந்த புரோகிராமிலேயே டிவிடி –வீடியோ ஸ்பிளிட்டர் என்னும் வசதி தரப்படுகிறது. இதன் மூலம் டிவிடி வீடியோக்களைப் பிரித்து அமைக்கலாம். மேலும் சிடி/டிவிடி/புளு ரே டிஸ்க் ஆகியவற்றில் டேட்டா எழுதும் பர்னர் புரோகிராமும் தரப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி பிளாஷ் ட்ரைவ்களில் இருந்து காணாமல் போன பைல்களையும் மீட்கலாம். இந்த பதிப்பில் பல ட்ரேக்குகளை ஒரே நேரத்தில் ஸ்கேன் செய்திடும் வசதியும் தரப்பட்டுள்ளது.


source:dinamalar

--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails