Tuesday, June 1, 2010

எக்ஸெல் டிப்ஸ்....

எக்ஸெல் பதிப்பு எண் என்ன?

நீங்கள் வேறு ஒருவரிடம் இருந்து கம்ப்யூட்டரைப் பரிசாகவோ, இரண்டாவது சிஸ்டமாக விலைக்கோ, வாங்கியிருந்தால், அதில் உள்ள எக்ஸெல் தொகுப்பு பதிப்பு எண் என்ன என்று தெரியாமல் இருப்பீர்கள். அதனால் அதனைப் பயன்படுத்த முடியாத நிலை நிச்சயம் ஏற்படாது. ஆனால் பல டிப்ஸ்கள் அல்லது உதவிக் குறிப்புகளைப் படிக்கும்போது, அவற்றை ஒவ்வொரு பதிப்பிற்கும் ஒரு மாதிரியாகத் தந்திருப்பார்கள். அப்படி கிடைக்கும்போது, எந்த வகைக் குறிப்பினை உங்கள் கம்ப்யூட்டரில் பின்பற்ற வேண்டும் என்று அறிவது, நிச்சயமாய், உங்களிடம் உள்ள எக்ஸெல் தொகுப்பின் பதிப்பு எண் என்ன என்பதை அறிந்து கொள்வதன் மூலமாகத்தான் இருக்கும். அப்படியானால், எக்ஸெல் தொகுப்பின் பதிப்பு எண் என்ன என்பதனை எப்படி அறிந்து கொள்வது? இதற்குச் சில வழிகள் உள்ளன.
முதலாவதாக, எக்ஸெல் தொகுப்பினைத் தொடங்குகையில், உங்கள் சிஸ்டத்தின் இயக்க வேகத்தின் அடிப்படையில், எக்ஸெல் எந்த பதிப்பினைச் சார்ந்தது என்று ஒரு பிளாஷ் வேகத்தில் காட்டப்படும். இதனை நிறுத்திப் பார்ப்பது மிகவும் சிரமமான காரியம். 
ஆனால், எக்ஸெல் தொகுப்பினைத் தொடங்கிய பின் இதனை அறிவது சற்று எளிதானது. நீங்கள் எக்ஸெல் 2007க்கு முந்தைய பதிப்பினைப் பயன்படுத்துவதாக இருந்தால், ஹெல்ப் மெனுவில் இருந்து About Microsoft Excel என்ற பிரிவைப் பெறவும். இங்கு எக்ஸெல் About Microsoft Excel  என்ற டயலாக் பாக்ஸைக் காட்டும். இதில் நீங்கள் பயன்படுத்தும் எக்ஸெல் பதிப்பு எண், அப்டேட் பைல் எண் மற்றும் யாருக்கு அதனைப் பயன்படுத்த லைசன்ஸ் வழங்கப்பட்டுள்ளது என்ற அனைத்து விபரங்களும் இருக்கும்.
நீங்கள் பயன்படுத்துவது எக்ஸெல் 2007 எனில், இதே தகவலைப் பெறுவது சற்று சுற்று வழியாக இருக்கும். முதலில் ஆபீஸ் பட்டனைக் கிளிக் செய்திடுங்கள். பின்னர், எக்ஸெல் ஆப்ஷன்ஸ் (Excel Options)  என்ற பட்டனைக் கிளிக் செய்திடவும். இப்போது எக்ஸெல், Excel Options என்ற டயலாக் பாக்ஸைக் காட்டும். இந்த பாக்ஸின் இடதுபுறத்தில், Resources  என்பதைக் கிளிக் செய்திடவும். பின்னர் About பட்டனைக் கிளிக் செய்திடவும். இங்கு About Microsoft Office Excel என்ற டயலாக் பாக்ஸ் கட்டம் காட்டப்படும். இந்த டயலாக் பாக்ஸின் மேலாக, நீங்கள் பயன்படுத்தும் எக்ஸெல் தொகுப்பின் பதிப்பு எண் காட்டப்படும். இதனைக் குறித்துக் கொண்டு, குளோஸ் பட்டன் அழுத்தி டயலாக் பாக்ஸை மூடலாம்.
எக்ஸெல் டெக்ஸ்ட் காப்பி:
எக்ஸெல் தொகுப்பிலிருந்து, டெக்ஸ்ட்டை காப்பி செய்து வேர்ட் தொகுப்பில் பேஸ்ட் செய்திடுகையில், டெக்ஸ்ட்டில் பல மாற்றங்களை எடிட் செய்திட வேண்டிய சூழ்நிலையைப் பலர் சந்தித்திருப்பீர்கள். இது ஒரு எரிச்சல் உண்டாக்கும் நிலையாகும். இதனால் காப்பி / பேஸ்ட் செய்திடாமல் மீண்டும் டெக்ஸ்ட் அமைக்கும் முயற்சியே தேவலாம் என்று எண்ணலாம். இங்கு நாம் சரியான வழியை விட்டுவிடுகிறோம். அதனால் தான் இந்த வெட்டி வேலை. சரியான வழி எது என்று காணலாம்.
முதலில் எக்ஸெல் தொகுப்பில் உள்ள டெக்ஸ்ட், அது எவ்வளவு பெரிதாக இருந்தாலும், காப்பி செய்து கொள்ளுங்கள். பின் வேர்ட் தொகுப்பினைத் திறந்து கொண்டு, பேஸ்ட் செய்திட வேண்டிய டாகுமெண்ட் திறந்து, ஒட்ட வேண்டிய இடத்திற்குச் செல்லவும்; அல்லது புது டாகுமெண்ட் ஒன்றைத் திறந்து கொள்ளவும். பின் வழக்கமாக நாம் செய்திடும் கண்ட்ரோல் +வி அல்லது எடிட் மெனுவில் பேஸ்ட் தேர்ந்தெடுக்கும் செயல்பாட்டினை மேற்கொள்ள வேண்டாம். 
இனி எடிட் மெனு திறக்கவும். கீழ் விரியும் மெனுவில் Paste Special என்று ஒரு பிரிவு இருக்கும். இதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு கிளிக் செய்தவுடன் கிடைக்கும் டயலாக் பாக்ஸினைப் பார்க்கவும். இதில் Microsoft Excel Worksheet Object   என்பதனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். இப்போது டெக்ஸ்ட் எந்த பிரச்னைக்கும் இடம் இன்றி ஒட்டப்படுவதனைப் பார்க்கலாம். இதற்கான டெக்ஸ்ட் பாக்ஸிலேயே, அதனை ரீசைஸ் செய்வதற்கான ஹேண்டில்களையும் காணலாம். இதனைப் பயன்படுத்தி டெக்ஸ்ட்டை நகர்த்தி அமைக்கலாம்.


source:dinamalar

--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails