15 வருடங்களுக்கு முன் தந்தையால் கடத்திச் செல்லப்பட்ட தனது குழந்தைகளை ஃபேஸ்புக்கின் உதவியுடன் தாயார் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். பிரின்ஸ் செகாலா என்ற பெண்ணின் 2 வயது மகனும் 3 வயது மகளும் 1995ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் தனது தந்தையால் கடத்திச்செல்லப்பட்டார்கள்.
எங்கு தேடியும் பிள்ளைகளைக் கண்டுபிடிக்க முடியாத செகாலா மிகவும் மன உளைச்சளுக்கு ஆளானார். சில மாதங்களுக்கு முன்னர் செகாலாவின் கணவர் குழந்தைகள் மெக்சிகோவில் இருப்பதாக தகவல் அளித்தார்.
இதையடுத்து செகாலா தனது குழந்தைகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கினார். அவரால் முடியவில்லை. இந்நிலையில்தான் அவருக்கு இந்த யோசனை தோன்றியது, தனது குழந்தைகளின் பெயரை ஃபேஸ்புக்கில் புகுந்து தேடத் தொடங்கினார்.
செகாலா நினைத்தது போல் அவரது மகளின் பெயரைக் கொண்ட ஒரு பெண் இருந்தார், முதலில் அவருடன் நண்பராகப் பழகினார் செகாலா. இந்த நட்பின் மூலம் அந்த பெண்ணின் குடும்பப் படத்தைப் பார்த்தார். பாரத்தவருக்கு பெரும் மகிழ்ச்சி. அந்த பெண்தான் தனதுமகள் என்பதை அறிந்துகொண்டார்.
ஆனால், இதையறிந்த செகாலாவின் மகள் இதற்காகச் சந்தோசப்படாமல் தனது தாயாருடனான உறவை முறித்துக் கொண்டார். ஃபேஸ்புக்கின் பக்கங்களையும் பார்வையிடமுடியாதவாறு மறைத்துவிட்டார். எனினும் சோர்வடையாத செகாலா காவல்துறையில் புகார் செய்தார்.
இதனை விசாரித்த காவல்துறையினர் செகாலாவின் கணவரை கடந்த மாதம் 26ம் திகதி கைது செய்தனர். தற்போழுது செகாலாவின் 16 வயது மகனும், 17 வயது மகளும் மீட்கப்பட்டு ஃபுளோரிடாவில் உள்ள ஒரு குழந்தைகள் நலக் காப்பகத்தில் உள்ளனர். இந்த வழக்கு பற்றிய விசாரணை களிபோர்னியாவிலுள்ள நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
--
http://thamilislam.tk
No comments:
Post a Comment