Tuesday, November 9, 2010

கல்லால் அடித்து கொல்லும் தண்டனை மாற்றம்: ஈரான் பெண்ணுக்கு இன்று தூக்கு

கல்லால் அடித்து கொல்லும் தண்டனை மாற்றம்:    ஈரான் பெண்ணுக்கு    இன்று தூக்கு
பெர்லின், நவ. 3-
 
ஈரான் நாட்டைச் சேர்ந்தவர் சகினே மொகமதி ஆஸ்தியானி. கணவரை கொலை செய்ததாகவும், வேறு ஒரு ஆணுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டதாகவும் இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. ஆனால், இந்த தண்டனை எப்போது நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்படாமல் உள்ளது. கைது செய்யப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஆஸ்தியானி. தற்போது தெக்ரானில் உள்ள தாப்ரிஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
 
எனவே, பொதுமக்கள் மத்தியில் இவரை கல்லால் அடித்து கொல்ல அந்நாட்டு கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதற்கு உலக நாடுகளும், சமூகசேவை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் எதிர்ப்பு தெரிவித்தன.
 
எதிர்ப்பு வலுவடைந்ததை தொடர்ந்து இந்த தண்டனையை ஈரான் அரசு கை விட்டது. மாறாக கணவரை கொலை செய்த குற்றத்துக்காக அவருக்கு தூக்கு தண்டனை விதித்தது.
 
இந்த நிலையில், அவருக்கு இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆஸ்தியானயை கல்லால் அடித்து கொல்ல விதிக்கப்பட்ட தண்டனை எதிர்த்து போராடிய உலக நிறுவனம் இத்தகவலை தெரிவித்துள்ளது. இது ஜெர்மனியில் இயங்குகிறது.
 
இதற்கிடையே, தூக்கு தண்டனை இன்று நிறைவேற்றப்படுமா? என தெரிய வில்லை. இது குறித்து ஈரான் அதிகாரிகளிடம் நிருபர்கள், கேட்டனர். அதற்கு பதில் சொல்ல அவர்கள் மறுத்து விட்டனர். தண்டனை இன்று நிறைவேற்றப்படலாம் அல்லது வேறு தேதிக்கு மாற்றப்படலாம் என்று மழுப்பலாக பதில் அளித்தனர்.

source:maalaimalar


--------

http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails