மே 2009 ம் ஆண்டு இறுதிக்கட்டப் போரின் போது பல அழிவுகள் நடந்ததுஎன்னவோ உண்மைதான் ! புலிகளின் பல முக்கிய களமுனைத்தளபதிகள் கொல்லப்பட்டதும் உண்மைதான், ஆனால் நாம் அழிந்துவிட்டோமா ? அதற்கு அப்பால் யார் யார் அங்கிருந்து தப்பிச்சென்றார்கள் ? எவர் எவர் இடம் மாறினார்கள் ? இன்னும் புரியாதபுதிராகவே உள்ளதா ? சுமார் 23 படகுகள் முள்ளிவாய்க்காலில் இருந்துஇந்துமா கடலின் தெற்கு திசை நோக்கிப் புறப்பட்டதாக தகவல்கள் சொன்னாலும், அந்தநடவடிக்கை தோல்வியடைந்ததாகவும் சில செய்திகள் இருக்கின்றதே என்றுசொல்லும்சிலர்.... பலர் பலவகையான கருத்துக்களைக் கூறிவந்தாலும் இது தொடர்பானஆதாரங்கள் எவரிடமும் இருக்கவில்லை. புலம்பெயர் தமிழ் மக்கள் கேட்கத் துடித்தசெய்திகள் சிலவும் வெறும் ஊகமாகவே இருந்து வந்துள்ளது. உண்மை நிலை தான் என்னஎன பலரும் யோசிக்கும் தருணம் இது.
ஆனால் உண்மை வெகுநாள் உறங்குமோ?
பல காலமாக புலிகளின் கோட்டையாகத் திகழ்ந்து, இன்று கயவர்கள் கைகளில் சிக்கித்தவிக்கும் வன்னி நிலப்பரப்பில் இருந்து, சில புகைப்படங்களும் ஒரு சில தகவல்களும்உற்சாகம் தரக்கூடிய செய்திகளைச் சுமந்து வந்துள்ளன,,,,,,, அதுதான் என்ன ? பலநாட்களாக இருந்துவரும் கேள்விகளுக்கு அது விடைதருமா ? வெறுமனவே ஒரு சுரங்கப்பாதையைக் காட்டி ஒரு செய்தி சொல்வதாக எண்ணவேண்டாம். ஏன் எனில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் கடைசிநேரத்தில் இருந்த பல முக்கிய தளபதிகளுக்கும்போராளிகளுக்கும் நாம் இங்கு காண்பிக்கும் படம் நன்கு புரியும். அது போன்றசுரங்கங்களைக் கிண்டிய போராளிகள் கூட இன்னும் உயிரோடு இருக்கலாம் !அவர்களுக்கு இது எங்கு அமைந்துள்ளது என்ற விபரங்களும் தெரிந்திருக்கும்.
ஆம்! நீங்கள் இங்கே பார்ப்பது புலிகளின் உயர்மட்டத் தலைவர்களும் சில களமுனைத்தளபதிகளும் தங்கியிருந்த இடத்தில் காணப்படும் சுரங்கப் பாதை. ஆனால் அவைதற்போது கடல் நீரால் நிரப்பப்பட்டு உள்ளதாக அறியப்படுகிறது. அதாவது இச் சுரங்கப்பாதை நேரடியாக கடலோடு தொடர்புடையதாக இருந்ததாகவும், அதனூடாக தப்பிச்சென்ற பின்னர் அச் சுரங்கப்பாதையை யாரோ வெடிவைத்துத் தகர்த்து விட்டதாகவும்இலங்கை இராணுவமே தன் வாயால் கூறியுள்ளது. சுரங்கம் தகர்க்கப்பட்ட காரணத்தால்கடல் நீர் அங்கு புகுந்துள்ளது.
அப்பாதை எங்கே செல்கிறது என்று யாருக்கும் இதுவரை தெரியவில்லை என்கிறதுஇராணுவம். அப்பாதை எங்கே செல்கிறது என்று சுழியோடிப் போய் பார்ப்பதற்கு எவரும்தயார் இல்லை. காரணம் அங்கே நீருக்கு அடியில் மேலும் கண்ணிவெடிகள் அல்லதுபொறிவெடிகள் இருக்கலாம், அவை வெடித்தால் உயிரோடு திரும்பமுடியாது என்றுஎல்லோரும் அஞ்சுவதே காரணம் ஆகும்.
இவ்வாறானதொரு நிலையில் இச் சுரங்கம் காணப்படுவதாகவும், அங்கே விட்டுச்செல்லப்பட்ட பொருட்களைப் பார்க்கும் போது விடுதலைப் புலிகளின் மூத்தஉறுப்பினர்கள் அங்கே இருந்திருக்கக் கூடும் எனவும் இராணுவமே ஒத்துக்கொள்கிறது.இலங்கை இராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையே நடைபெற்ற இறுதிச் சமரின்போது,பல இடங்களைக் கைப்பற்றிய இராணுவத்தினர் அங்கே காணப்பட்ட சில அதிசயஇடங்களையும் புகைப்படம் பிடித்து வைத்துள்ளனர். அவற்றில் இவையும் அடங்கும்.போர்க்களத்தில் நின்ற இராணுவத்தினர் இச் சுரங்கத்தைப் பார்த்து வியப்படைந்துள்ளனர்.
எமக்கு கிடைக்கப்பெற்ற இச் செய்திகளை நாம் வெளியிட்டுள்ளோம். தமிழீழ மக்கள்மட்டுமல்ல உலகத் தமிழர்கள் மனதிலும் ஒரு உற்சாகம் பிறக்கும் செய்தியாக இதுஇருக்கக்கூடாதா என்ற ஏக்கம் எங்கள் மனதை நிரப்புகிறது. அதை நாம் உணர்கிறோம்!
ஆயிரம் ஆயிரம் போராளிகள் எதற்காகப் போராடினார்களோ, ஏன் வீர மறவர்களாகிக்களமாடினார்களோ அவர்கள் கனவுகள் பலிக்கவேண்டும் ! எதை எமது தேசிய தலைவர்விரும்பினாரோ, எந்த விடுதலைக் காற்றை அவர் சுவாசிக்க நினைத்தாரோ அதனை நாம்தொடர்ந்து முன்னெடுக்கவேண்டும்! தமிழீழம் எங்கள் மூச்சு! தமிழீழம் எங்கள் பேச்சு!தமிழீழம் எங்கள் உயிர்! என ஒவ்வொரு தமிழனும் வாழ்ந்திடவேண்டும!
"தங்கத் தமிழும் தமிழீழ மண்ணும் எங்கள் இரு விழிகள் நாங்கள் விடுதலைப் புலிகள்""என்றான் ஒரு கவிஞன் ! அதன் உயிர் நாடியாம் எம் தேசிய தலைவர் பிறந்த நாளில் நாம்ஒரு உறுதிமொழி எடுத்துக்கொள்வோம்! எங்கு வாழ்ந்தாலும் எத்தகைய துயர் வந்தாலும்எமது ஈழவிடுதலை என்னும் தீ ஓயாது ! தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்னும்தாரக மந்திரத்தை உச்சரிக்காமல் நாம் இருக்கமாட்டோம் என்பதேயாகும். போராடும்இனம் தோற்றதாக வரலாறு இல்லை ! ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் ஆயினும் எமதுஇலக்கை எட்டும்வரை விடுதலைப் போர் ஓயாது என்னும் உறுதிமொழியைஎடுத்துக்கொள்வோம்!
எம்மோடு போகாமல் எம் சந்ததிக்கும் விடுதலை உணர்வைக் கற்றுக்கொடுப்போம் !புலத்தில் பிறந்தாலும் எம் பிள்ளைகளுக்கு விடுதலை என்னும் தீ இன்னும் அணைந்துவிடவில்லை என்பதை கூறிக்கொள்வோம் ! இனி வரும் வரலாறு எம் கதைகளைசரித்திரமாக எழுதட்டும்!. அதில் ஒவ்வொரு தமிழனும் இடம்பெறட்டும்!
அதிர்வின் ஆசிரியபீடம்
இச் செய்தி அதிர்விலிருந்து...

http://thamilislam.tk
No comments:
Post a Comment