Sunday, November 14, 2010

வேர்டு வரியில் இரண்டு அலைன்மென்ட்


 

வேர்டில் டாகுமெண்ட்களைத் தயாரிக்கை யில் வரிகள் அல்லது பாராக்களை இடது, வலது, இருபக்கமும் அல்லது நடுவாக என அலைன்மெண்ட் செய்து கொள்ளலாம். ஒரு வரியை இடதுபக்கமாக அலைன்மெண்ட் செய்தால் அப்படியே தான் இருக்கும். அந்த வரியில் சில சொற்களை வலது ஓரமாக நகர்த்தி வைக்க வேண்டுமென்றால் சில சொற்களை டைப் அடித்தபின்னர் எந்த சொற்கள் வலது ஓரமாக இருக்க வேண்டுமோ, அவற்றை டைப் அடித்துப் பின் முதல் தொகுதி சொற்களுக்குப் பின்னர் ஸ்பேஸ் பார் மூலம் கர்சரை நகர்த்தி நகர்த்தி காலி ஸ்பேஸ் ஏற்படுத்தி, இரண்டாவது தொகுதி சொற்களை நகர்த்தி வரியின் முனைக்குக் கொண்டு செல்வீர்கள். குறிப்பாக லெட்டர் பேட் போன்று தயாரிக்கும் போது பெயரினை இடதுபுற அலைன்மெண்ட்டிலும் வீடு முகவரியினை வலதுபுற அலைன்மெண்ட்டிலும் வேண்டுமென்றால் இது போல்தான் செயல்படுவீர்கள். இது தேவைக்குச் சரி என்றாலும் பின்னர் எடிட் செய்திடுகையில் இட குழப்பத்தை ஏற்படுத்தி சரியான முறையில் வரியை உருவாக்காது. இதற்கு ஒரு தீர்வு இருக்கிறது. முதலில் வரியின் முதல் பாதியில் இருக்க வேண்டிய சொற்களை டைப் அடித்து அப்படியே இடதுபுற அலைன்மெண்ட்டில் விட்டுவிடுங்கள். இனி அடுத்து வலது புறமாக அலைன்மெண்ட் செய்ய வேண்டிய சொற்களுக்கு வருவோம். இப்போது வரியின் வலது மூலையில் டேப் ஒன்றை உருவாக்குங்கள். இதற்கு நெட்டுவாக்கிலான ரூலர் உங்கள் வேர்ட் டாகுமெண்ட்டில் இருக்க வேண்டும். இதனைக் கொண்டு வர Viewமெனு சென்று Ruler   என்பதைக் கிளிக் செய்திடவும். ரூலர் கிடைத்தவுடன் அதன் வலது ஓரமாகச் சென்று மவுஸால் கிளிக் செய்தால் டேப் ஒன்று கிடைக்கும். இதனை வலது இன்டெண்ட் டேப் ஆக வைத்திட வேண்டும். டேப் அடையாளம் கிடைத்தவுடன் அதன் மீது கிளிக் செய்தால் Tab  என்ற ஒரு விண்டோ கிடைக்கும். அதில் Alignmentஎன்ற பிரிவில் லெப்ட் , சென்டர் , ரைட் ,டெசிமல் மற்றும் பார் என்ற பிரிவுகள் சிறிய வட்டங்களுடன் கிடைக்கும். இதில் ரைட் என்பதில் கர்சரால் புள்ளி ஏற்படுத்தி பின் ஓகே கிளிக் செய்திடவும். இப்போது நீங்கள் வரியின் வலது ஓரத்தில் ஏற்படுத்திய டேப் வலது இன்டென்ட் டேப்பாக மாறி இருக்கும். இதே போன்று டேப் ஒன்றினை வரியின் இடது மூலையில் காணலாம். இது எந்த வகையான டேப்கள் நமக்குக் கிடைக்கும் எனக் காட்டுகிறது. இது ரைட் டேப் அடையாளமாகக் கிடைக்கும் வரை இதில் கிளிக் செய்திடவும். இனி முதலில் இடது அலைன்மெண்ட்டில் இருக்கவேண்டிய சொற்களை டைப் செய்த பின்னர் டேப்பைத் தட்டவும். பின் அடிக்கும் சொற்கள் அனைத்தும் வலதுபக்க அலைன்மெண்ட்டில் அமைவதனைக் காணலாம்


source:dinamalar

--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails