Wednesday, November 17, 2010

வேர்டில் டெக்ஸ்ட் செலக்ஷன்

 
 

வேர்ட் டாகுமெண்ட் ஒன்றில் டெக்ஸ்ட் செலக்ட் செய்திடப் பல வழிகள் உள்ளன. பொதுவாக நாம் மவுஸ் கர்சரை, தேர்ந்தெடுக்க வேண்டிய டெக்ஸ்ட் தொடக்கத்தில் வைத்துப் பின் ஷிப்ட் கீ அழுத்தியவாறே, டெக்ஸ்ட் முடிவு வரை இழுத்து தேர்ந்தெடுப்போம். இதுவே பல பக்கங்களுக்கு நீண்டால் என்ன செய்வது? கஷ்டம் தான்; இடையே எங்காவது மவுஸ் கர்சர் விடுபட்டாலோ அல்லது ஷிப்ட் கீ விடுபட்டாலோ, சிரமம் தான். ஆனால் இந்த சிரமத்தைத் தவிர்க்கும் வழியும் உள்ளது. அடுத்த முறை எத்தனை பக்கங்களுக்கு டெக்ஸ்ட் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியது இருந்தாலும் கவலைப்பட வேண்டாம். 
முதலில் எங்கு டெக்ஸ்ட் தொடங்குகிறதோ, அந்த இடத்தில் கர்சரைக் கொண்டு சென்று வைக்கவும். பின் சற்று கீழாகக் கர்சரை இழுக்கவும். தொடக்க நிலையில் உள்ள சில வரிகள் தேர்ந்தெடுக்கப்படும். பின் கர்சரை விடுவித்து எந்த இடம் வரை டெக்ஸ்ட் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமோ அந்த பக்கத்திற்குச் செல்லவும். அங்கு சென்று தேர்ந்தெடுக்கப்படும் டெக்ஸ்ட் முடியும் இடத்தில் கர்சரை வைத்திடும் முன், ஷிப்ட் கீயை அழுத்திப் பிடித்துக் கொண்டு கர்சரை வைத்திடவும். ஆஹா! டெக்ஸ்ட் முழுவதும், அது எத்தனை பக்கங்களாயினும், தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதனைக் காணலாம்.
டேபிள் செல்களைப் பிரித்தலும் சேர்த்தலும்
வேர்ட் டாகுமெண்ட்டில் டேபிள் ஒன்றை உருவாக்கிய பின்னர், அதில் அருகேயுள்ள செல்களை இணைத்து ஒன்றாக்கலாம். இதற்கு Merge Cells என்ற கட்டளை உதவிடுகிறது. இவ்வாறு இணைத்த செல்களை, பின்னால் எப்படிப் பிரிப்பது என்று இங்கு காணலாம்.
1. முதலில் இணைத்து ஒன்றாக்கிய செல்லில் பாய்ண்ட்டரைக் கொண்டு செல்லவும். 
2. பின் டேபிள் மெனுவில் இருந்து Split Cells என்ற கட்டளைப் பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். 
இப்போது இணைத்த செல் மீண்டும் பிரிக்கப்பட்டிருக்கும். இந்த செல்களின் அகலம் மற்ற செல்களிடமிருந்து சற்று வேறுபட்டிருக்கும். இவற்றை நாமாக அட்ஜஸ்ட் செய்திடலாம். இணைந்த செல்களை Tables and Borders டூல்பார் மூலமாகவும் பிரிக்கலாம். 
1. View மெனுவிலிருந்து Toolbars ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் துணை மெனுவில்Tables and Borders என்பது தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதனை உறுதி செய்திடவும். 
2. இனி டேபிளுடன் டூல்பாரும் தெரியும்படி, டாகுமெண்ட் மற்றும் டூல்பாரை அட்ஜஸ்ட் செய்திடவும்.
3. டூல்பாரில் உள்ள Draw Table என்பதில் கிளிக் செய்திடவும். இது ஒரு பென்சில் போலத் தோற்றமளிக்கும். மவுஸ் கர்சர் தான் இப்போது ஒரு பென்சில் போன்ற தோற்றத்திற்கு மாறிவிடும்.
4. இதனைப் பயன்படுத்தி, டேபிளில் செல்லுக்கான கோடுகளை வரையவும். ஒவ்வொரு செல் கோட்டிலும் கிளிக் செய்து இழுக்கலாம். இழுத்து தேவையானது கிடைத்தவுடன் கர்சரை விட்டுவிடலாம். பின் செல் நாம் இழுத்தபடியான கோட்டுடன் அமைக்கப்பட்டுவிடும்.
5. இவ்வாறு வரைந்து முடித்தவுடன், மீண்டும் Draw Table டூலில் கிளிக் செய்திடவும். அல்லது எஸ்கேப் கீயை அழுத்தவும். இது டிராயிங் வகையில் இருப்பதை மூடும். 
6. பின் வேலை முடிந்தவுடன் Tables and Borders டூல்பாரை மூடவும். 
வேர்ட் டேபிளில் வரிசைகளை நகர்த்த
வேர்ட் டாகுமெண்ட் இடையே சில டேட்டாவைத் தெளிவாகக் காட்ட, டேபிள் ஒன்றை உருவாக்கியிருக்கிறீர்கள். உருவாக்கி முடித்த பின்னரே, முதல் முதலாக உள்ள படுக்கை வரிசை ஐந்தாவதாக இருக்க வேண்டும் என விரும்புகிறீர்கள். என்ன செய்வீர்கள்? நான்காவது வரிசைக்கு அடுத்து ஒரு காலி வரிசை உருவாக்கி, பின் முதல் வரிசை டேட்டாவினை கட் செய்து, உருவாக்கிய வரிசையில் பேஸ்ட் செய்வீர்கள், இல்லையா? இத்தனை வேலைகள் எதற்கு? எளிதான வழி ஒன்று இருக்கிறது.
1. எந்த வரிசையை நகர்த்த வேண்டுமோ, அந்த வரிசையில் ஏதேனும் ஒரு செல்லில் கர்சரைக் கொண்டு சென்று வைத்திடவும். ஒன்றுக்கு மேற்பட்ட, அடுத்தடுத்த வரிசைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் எனில், ஷிப்ட் அழுத்தி அனைத்து வரிசைகளையும் தேர்ந்தெடுக்கவும். 
2. பின் ஷிப்ட்+ ஆல்ட்+ அப் அல்லது டவுண் ஆரோ (Shft+Alt+Up/Down) கீகளை அழுத்தவும். உங்களுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட வரிசை அல்லது வரிசைகள் நகரத் தொடங்கும். அவற்றை வைக்க வேண்டிய இடம் வந்தவுடன் அப்படியே விட்டுவிடவும். எவ்வளவு எளிதாக நகர்த்திவிட்டீர்கள்!
வேர்ட் டிப்ஸ்
வேர்ட் டாகுமெண்ட்டில் உடனடியாக ஸ்பெல்லிங் சோதனை மேற்கொள்ள எப்7 அழுத்தவும். 
ஹைபன் பயன்படுத்திய சொற்கள் பிரியாமல் இருக்க வேண்டும் என்றால் ஹைபன் டைப் செய்திடுகையில் கண்ட்ரோல் +ஷிப்ட் கீகளை அழுத்திக் கொள்ளுங்கள். 
குறிப்பிட்ட இரண்டு சொற்கள் வரி ஓரங்களில் பிரியாமல் அமைய வேண்டும் என்றால் கண்ட்ரோல்+ஷிப்ட்+ ஸ்பேஸ் பயன் படுத்துங்கள். திரையில் தெரியும் முதல் வாக்கியத்தின் தொடக்கத் திற்குச் செல்ல Alt + Ctrl + Page Up அழுத்திப் பாருங்கள். அதே போல் திரையில் தெரியும் பக்கத்தின் கீழ்ப்பாகத்திற்குச் செல்ல Alt + Ctrl + Page Down  அழுத்தவும்


source:dinamalar


--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails