ஆப்கானிஸ்தானில் இருந்தபடி அல்கொய்தாவின் செயல்பாடுகளையும், திட்டங்களையும் நோட்டம் விட்டு வரும் பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் கிறிஸ்துமஸ் பொம்மைகளுக்குள் வெடிகுண்டுகளை வைத்து தாக்குதல் நடத்த அல்கொய்தா திட்டமிட்டு இருப்பதை கண்டுபிடித்து உள்ளனர்.
அரேபிய தீபகற்பத்தில் உள்ள தீவிரவாதிகளுக்கும், வெடிகுண்டுகளை தயாரிக்கும் பொறுப்பில் இருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த தொலைபேசி பேச்சுவார்த்தைகளை உளவுத்துறை அதிகாரிகள் ஒட்டுகேட்டதன் மூலம் அவர்களின் புதிய திட்டம் வெளிவந்தது.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாக இங்கிலாந்து நாட்டில் புதிய முறையில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளனர்.
அல்கொய்தாவின் வெடிகுண்டு தயாரிப்பு தலைமை பொறுப்பாளரான இப்ராகிம்ஹாசன் அல் அசிரி கிறிஸ்துமஸ் பொம்மைகளின் உள்பகுதியில் அதிநவீன வெடிபொருள் கலவையை வைத்து குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்க செய்ய திட்டமிட்டு இருக்கிறார்.
இதற்காக அல்கொய்தா இயக்கத்தினர் இங்கிலாந்து நாட்டு துறைமுகங்கள் வழியாக கிறிஸ்துமஸ் பரிசு பொம்மைகளை அதிக அளவில் அனுப்ப திட்டமிட்டு உள்ளனர்.
இங்கிலாந்து நாட்டில் உள்ள கடைகளில் இந்த பொம்மைகளை அடுக்கி வைத்ததும் அவை எந்த நேரத்திலும் வெடித்து சிதறும். அதன் மூலம் பெருமளவு சேதம் ஏற்படுத்த அவர்கள் திட்டமிட்டு உள்ளனர்.
ஏமன் நாட்டில் இருந்து சரக்கு விமானம் மூலம் அனுப்பப்பட்ட வெடிபொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டதால், கடல் வழியாக வெடிபொருள்களை அனுப்பவும் அல்கொய்தா திட்டமிட்டு உள்ளது. துறைமுகங்களில் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகம் இல்லை என்பதால் இது மிக எளிதாக இருக்கும் என்று அல்கொய்தா கருதுகிறது.
அல்கொய்தாவுக்கு உலகம் முழுவதும் 22 கப்பல்கள் இயங்கி வருவதை உளவுத்துறையினர் கண்டுபிடித்து உள்ளனர். இந்த கப்பல்கள் மூலம் கிறிஸ்துமஸ் பொம்மைகள் எளிதில் இங்கிலாந்து நாட்டுக்குள் சென்று விடும் என்று கூறப்படுகிறது.
அல்கொய்தாவின் இந்த திட்டம் தொடர்பாக இங்கிலாந்து அரசை உளவுத்துறை எச்சரித்து உள்ளது. இதையடுத்து லண்டனில் இப்போதே சோதனை நடவடிக்கைகள் தொடங்கி விட்டன
source:nakkheeran
--http://thamilislam.tk
No comments:
Post a Comment