தகவல் தொழிநுட்ப யுகத்தில் இப்படியும் ஒரு உத்தரவா என்று? தலைப்பைப் பார்த்தவுடன் பயந்து விடாதீர்கள். உண்மைதான் இந்தியாவில் உத்தர பிரதேசத்தில் காதல் திருமணத்தை தடுக்கும் வகையில், திருமணமாகாத பெண்கள் மொபைல் போன் பயன்படுத்துவதற்கு கிராம பஞ்சாயத்து தடை விதித்துள்ளது.
வட மாநிலங்களில் உள்ள கிராமங்களில் காதல் திருமணம், ஒரே கோத்திரத்தில் திருமணம் ஆகியவைக்கு கடும் எதிர்ப்பு உள்ளது. காதல் திருமணம் மற்றும் ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்யும் தம்பதி மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பஞ்சாயத்துகளில் கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், முசாபர் நகர் மாவட்டம், லங்க் கிராமத்தில் அனைத்து சமூகத்தை சேர்ந்த பஞ்சாயத்தார் கூடி, கிராமத்திலுள்ள திருமணமாகாத பெண்கள் மொபைல் போன் பயன்படுத்துவதற்கு தடை விதித்தனர்.
இதுகுறித்து பஞ்சாயத்து செய்தி தொடர்பாளர் கூறுகையில்,
"மொபைல் போன் இளைஞர்களிடத்தில், குறிப்பாக பெண்களிடத்தில் விரும்பத்தகாத தாக்கங்களை ஏற்படுத்துகிறது. எனவே, திருமணமாகாத பெண்கள் காதல் திருமணம் செய்வதை தடுக்கும் வகையில், இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது' என்றார்.
கடந்த சில நாட்களுக்கு முன், இதே மாவட்டத்தில் உள்ள சோரம் கிராமத்தின் அனைத்து காப் பஞ்சாயத்தில், ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்வதை தடுக்க, 1955ம் ஆண்டு இந்து திருமண சட்டத்தில் மாறுதல் கொண்டு வர வேண்டும் என்று, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
source:tamilcnn
--
http://thamilislam.tk
No comments:
Post a Comment