Tuesday, November 23, 2010

சமையல் குறிப்புகள்



வெனிலா பர்பி

தேவையானவை:

முந்திரிப் பருப்பு  - 100 கிராம், தேங்காய்ப்பூ - 100 கிராம், சர்க்கரை - 200 கிராம், நெய் -  50 கிராம், வெனிலா எசென்ஸ் - சில துளிகள்.

எப்படிச் செய்வது?

முந்திரிப் பருப்பை அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.

பின்பு தேங்காய் பூ, முந்திரிப் பருப்பு இரண்டையும் நைஸôக அரைக்க வேண்டும். கனமான பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டுத் தேவையான தண்ணீர் விட்டு சர்க்கரை நன்றாக கரைந்து கொதிக்கும்போது அரைத்த விழுதைப் போட்டுக் கிளற வேண்டும்.

தீயைக் குறைவாக எரிய விட வேண்டும். நெய்யைச் சிறிது சிறிதாக விட்டுக் கிளற வேண்டும். பாத்திரத்தில் ஒட்டாமல் பர்பி பதமாக வரும்போது இறக்கி, எசென்ஸ் விட்டுக் கிளறி நெய் தடவிய தட்டில் கொட்ட வேண்டும். ஆறிய உடன் தேவையான அளவுக்கு வில்லைகளாக வெட்டிச் சுவைக்க வேண்டும்.

ஆர்.ஜெயலட்சுமி, திருநெல்வேலி டவுன்.

தக்காளி தோசை

மசால் தோசையைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். தக்காளி தோசையைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

தேவையானவை:

தக்காளி - 500 கிராம், உளுந்து - 100 கிராம், புழுங்கல் அரிசி    - 400 கிராம், மிளகாய் வற்றல்   -  50 கிராம், பெருங்காயத் தூள் - 1 ஸ்பூன், எண்ணெய் - 50 கிராம்

வெட்டப்பட்ட வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவுக்கு.

எப்படிச் செய்வது?

அரிசி, உளுந்தைக் கழுவி ஊற வைத்து பின் உளுந்தைக் கிரைண்டரில் போட வேண்டும். அதனுடன் துண்டு துண்டாக நறுக்கப்பட்ட தக்காளி, மிளகாய் வற்றல் ஆகியவற்றைப் போட்டு அரைக்க வேண்டும். தேவையான உப்பு, பெருங்காயத்தையும் அதில் போட வேண்டும். 4 மணி நேரம் கழித்து மாவில் வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து எண்ணெய் ஊற்றி பொன்னிறத்தில் தோசை சுட வேண்டும். பிடித்தமான சட்னியைச் செய்து பரிமாறினால் மிகவும் சுவையாக இருக்கும்.



source:dinamani
--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails