எட்டாம் வகுப்பு வரை ஆல்-பாஸ் நடைமுறை; மாணவர்களை ஆசிரியர்கள் அடிக்கக்கூடாது உள்ளிட்ட சாதகமான சலுகைகளை, மாணவர்கள் பாதகமாக்கிக் கொள்கின்றனர். மதுபானம் அருந்துவது; வகுப்பறையிலேயே புகைப்பிடிப்பது உள்ளிட்ட தீய பழக்கங்களில் ஈடுபடுகின்றனர். அவர்களை திருத்த முடியாமல், அரசு பள்ளி ஆசிரியர்கள் வருத்தப்படுகின்றனர்.
14 வயதுக்கு உட்பட்ட அனைத்து மாணவர்களும் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன. அரசு சார்பில் சீருடை, சத்துணவு, சைக்கிள், பாடப்புத்தகங்கள் இலவசமாக வழங்கப் படுகின்றன.அதேபோல், பள்ளி மாணவர்களின் இடை நிற்றலை தவிர்க்கும் விதத்தில் எட்டாம் வகுப்பு வரை கட்டாய ஆல்-பாஸ் முறையை அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. மேலும், மாணவர்களை ஆசிரியர்கள் அடித்து துன்புறுத்தக்கூடாது என்பதும் கட்டாய மாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. மாணவர்கள் தவறே செய்தாலும் அடிக்காமல் கவுன்சிலிங் மூலம் நல்வழிப் படுத்த அறிவுறுத்தப்படுகிறது. அனைத்து பள்ளிகளிலும் இதற்கென ஆசிரியர் குழுவினரை கொண்டு "கவுன்சிலிங் சென்டர்' ஏற்படுத்தப்பட்டுள்ளது. மீறி மாணவர்களை அடிக்கும் ஆசிரியர்கள் மீது சட்டப்படி நடவடிக்கையும் எடுக்கப் படுகிறது. இத்தகைய சலுகைகள் மாணவர் களின் கல்வி நலனை உயர்த்தவும், பாதுகாக்கவும் கொண்டு வரப்பட்டது.எட்டாம் வகுப்பு வரை ஆல்-பாஸ் என்பதால், சில மாணவர்கள் தேர்வுக்கு வருவதில்லை. மேலும், சில மாணவர்கள் ஆசிரியர்களை மரியாதையின்றி பேசுவது, வகுப்புகளை புறக்கணிப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதால் ஆசிரியர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:அனைவரும் ஆல்-பாஸ் என்பதால், நடுநிலை வகுப்புக்கு உட்பட்ட மாணவர்கள் சிலர் தேர்வு நேரங்களில் காரணமின்றி விடுமுறை எடுத்துக் கொள்கின்றனர். தேர்வுக்கு பின் வழக்கம்போல் பள்ளிக்கு வருகின்றனர். சில பெற்றோரும் இதே கண்ணோட்டத் தில் பார்க்கின்றனர். தொடக்க கல்வி முதல் படித்தால் தான் உயர் வகுப்புகளிலும் கவனம் செலுத்த முடியும்.படிக்காத பெற்றோர்களில் சிலர், தங்கள் குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என அதிக அக்கறை காட்டுவதும் உண்டு. சில பெற்றோர் குழந்தைகள் மீது அக்கறை காட்டுவது இல்லை. நண்பர்களுடன் சேர்ந்து பள்ளி முடிந்ததும் வீட்டுக்குச் செல்லாமல் வெளியிடங்களில் சுற்றுகின்றனர்.சிலர் தீய பழக்கங்களுக்கு அடிமை யாவது; பள்ளி நேரத்திலேயே மது அருந்தி விட்டு குடிபோதையில் வருவது; வகுப்பறையில் புகைப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவதில்லை. கவுன்சிலிங் மூலம் நல்வழிபடுத்தவே அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.
இதற்கு மாணவர்கள் ஒத்துழைப்பு தருவதில்லை. இதனால், மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. தொடர்ந்து, தீய பழக்கங்களை பின்பற்றுகின்றனர். மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் சில இடங் களில் சீரழிவையும் ஏற்படுத்துகிறது.ஆண்கள் பள்ளியில் மேல்நிலை வகுப்புகளுக்கு பாடம் எடுக்க பெண் ஆசிரியர்கள் பயப்பட்டு, மாணவர்களின் தொல்லை காரணமாக வேறு இடங் களுக்கு மாறுதல் பெற்றுச்செல்வதும் உண்டு. மாணவர்களின் கல்விக்கு பாதுகாப்பு தருவதைபோல், தவறு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும். பெற்றோர், தங்கள் குழந்தைகள் மீது அக்கறை காட்ட வேண்டும், என்றனர்.
--
http://thamilislam.tk
No comments:
Post a Comment