Sunday, November 7, 2010

இந்த வார டவுண்லோட் - இணையப் பக்கங்களை பி.டி.எப். ஆக மாற்ற...



பல வேளைகளில், நாம் பார்க்கும் இணையப் பக்கங்களை, அவை தரும் தகவல்களுக்காக, சேவ் செய்திட விரும்புவோம். அனைத்து பிரவுசர்களும் இதற்கான வசதியைத் தருகின்றன. பிரவுசரின் எடிட் மெனுவில் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில்,சேவ் அல்லது சேவ் அஸ் தேர்ந்தெடுத்து பைலை பதிந்திடலாம். ஆனால், இது எச்.டி.எம்.எல். பைலாகத்தான் பதியப்படும். அவ்வாறு பதிவது நமக்கு உகந்ததாக இருக்காது. ஏனென்றால், தேவையற்ற பல விஷயங்களுடன், பைல்களுடன் அந்த பைல் பதிவாகும். ஒரு டாகுமெண்டாகப் பதிவாகாது.  ஆனால், இதனையே ஒரு பி.டி.எப். பைலாகப் பதிந்தால், ஒரே பைலாக அனைத்து தகவல்கள் மற்றும் ஆப்ஜெக்ட்களுடன் கூடிய பைல் ஒன்று கிடைக்கும். இதனை மற்றவர்கள் பெற்றுப் பயன்படுத்துவதும் எளிதாகும்.
சரி, இணைய தளப் பக்கத்தினை எப்படி பி.டி.எப். பைலாக மாற்றுவது? இதற்கு உதவிடும் வகையில் கிடைப்பது  Joliprint bookmarklet   என்னும் புரோகிராமாகும். புக்மார்க்குகள் பயன்படுத்தும் அனைத்து பிரவுசர்களிலும் இது இயங்கும். புக்மார்க்லெட் என்பதுவும் ஒருவகை புக்மார்க் தான். புக்மார்க்குகள் அனைத்தும் ஏதேனும் ஒரு இணைய தளத்தின் சுருக்கு வழிகளாக அமையும். ஆனால் இந்த புக்மார்க்லெட் ஜாவா ஸ்கிரிப்ட் குறியீடுகள் அமைந்ததாக இருக்கும். இவை இயக்கப்பட்டவுடன், குறிப்பிட்ட இணைய தளத்துடன் இணைந்து இயங்கும். தானாகவே இணைய தளத்தினை ஒரு பிடிஎப் பைலாக மாற்றும். இந்த புக்மார்க்லெட்டில் கிளிக் செய்துவிட்டு, அது மாற்றப்பட்டு கிடைப்பதனை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கலாம்.  இதன் இயக்கத்தின் இன்னொரு சிறப்பு என்னவெனில், இணையப் பக்கத்தில் உள்ள  தேவையற்ற மெனு, விளம்பரங்களை இது தானாகவே நீக்கிவிடுகிறது. பார்மட்டிங், லிங்க்ஸ், கட்டுரைக்கான படங்கள் ஆகியவற்றை மட்டும் தக்கவைத்துக் கொள்கிறது. கட்டுரையினை இரண்டு பத்திகளாக அமைத்துத் தருகிறது.  இந்த புரோகிராம் இயங்கும்போது, கம்ப்யூட்டருடன் இணைந்த இன்டர்நெட் இணைப்பு இயங்கிக் கொண்டிருக்க வேண்டும்.  ஜாலி பிரிண்ட் புரோகிராமினை, நம் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திடத் தேவையில்லை. ஜாலிபிரிண்ட் இணைய தளத்தில் இதன் ஐகானைக் கிளிக் செய்து, இழுத்து புக்மார்க்காக அமைத்துவிட்டால் போதும். பின் தேவைப்படுகையில், இந்த புக்மார்க்கில் கிளிக் செய்து, இணைய தளங்களை பிடிஎப் பைலாக மாற்றலாம்.
இந்த ஜாலிபிரிண்ட் புரோகிராமினைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி:
http://joliprint.com/bookmarkinstructions/

source:dinamalar

--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails