Wednesday, July 27, 2011

CIA காண்பித்த 10 நிமிட வீடியோ: வாயடைத்த பாக்கிஸ்தான் !

  



சி.ஐ.ஏ.யின் தலைவர் லியோன் பனெடா, பாகிஸ்தானிய ராணுவத்துக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையிலான தொடர்புகள் பற்றிய பகீர் ஆதாரங்களை காண்பித்திருக்கின்றார். பாகிஸ்தானில் வைத்தே, பாகிஸ்தானிய ராணுவத் தளபதி, மற்றும் உளவு அமைப்பின் தலைவர் ஆகியோருக்கு இந்த ஆதாரங்கள் காண்பிக்கப்பட்டுள்ளன. �சி.ஐ.ஏ. பாகிஸ்தானில் செய்துவரும் பல ஆபரேஷன்கள் பற்றிய விபரங்கள், தீவிரவாத அமைப்புகளுக்கு முன்கூட்டியே தெரியவந்து விடுகின்றன. இதனால் அவர்கள் உஷாராகி, தப்பி விடுகின்றனர். தீவிரவாதிகளுக்கு தகவல் போவது எப்படி? அதற்கு பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைப்புகளுக்குள் தீவிரவாதிகளுக்கு ஆட்கள் இருக்க வேண்டும்� இவ்வாறு சி.ஐ.ஏ. சமீபகாலமாக வெளிப்படையாகக் கூறிவருகின்றது. அதை பாகிஸ்தானியத் தலைமை மறுத்தும் வந்துள்ளது.
நிலைமை மோசமாகி வரவே சி.ஐ.ஏ.யின் தலைவர் லியோன் பனெடா, இரு தினங்களுக்குமுன் பாகிஸ்தானுக்கு நேரில் சென்றிருந்தார். பாகிஸ்தானிய ராணுவத் தளபதி ஜெனரல் ஆஷ்பக் கயானி, உளவுத்துறை ஐ.எஸ்.ஐ.யின் தலைவர் லெப். ஜெனரல் அஹ்மட் பாஷா ஆகியோரை அவரச கூட்டம் ஒன்றுக்கு அழைத்தார்.

அப்போதும் பாகிஸ்தான் தரப்பு, �எமது பாதுகாப்புப் பிரிவுகளில் இருந்து ரகசியங்கள் ஏதும் தீவிரவாத அமைப்புகளுக்கு லீக் செய்யப்படுவதில்லை. நீங்கள் (சி.ஐ.ஏ.) கூறுவது கற்பனையான குற்றச்சாட்டு� என்பதையே மீண்டும் வலியுறுத்தினர். இதையடுத்து சி.ஐ.ஏ.யின் தலைவர், �எமக்குக் கிடைத்த தகவல்களில் இருந்து, உங்களது ராணுவத்துக்கு உள்ளேயே தீவிரவாத அமைப்புகளுக்கு ஆட்கள் இருக்கின்றனர்� என்று கூறினார். இதை கோபமாக மறுத்த பாகிஸ்தானிய ராணுவத் தளபதி, �ஆதாரம் ஏதுமில்லாமல் எமது ராணுவத்தினர்மீது குற்றம்சாட்டக் கூடாது� என்றார். அதன் பின்னரே லியோன் பனெடா, தம்மிடமுள்ள ஆதாரங்கள் சிலவற்றை மேஜையில் தூக்கிப் போட்டார். சி.ஐ.ஏ. தலைவர் காண்பித்த ஆதாரங்களில், பல டாக்குமென்ட்களுடன், 10 நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோவும் இருந்தது. பாகிஸ்தானிய உளவுத்துறைக்குத் தெரியாமலேயே, பாகிஸ்தானுக்கு உள்ளே படம்பிடிக்கப்பட்ட வீடியோ அது!

பாகிஸ்தானின் இரு பகுதிகளில் தீவிரவாத அமைப்புகள் வெடிகுண்டு தயாரிப்பு தொழிற்சாலைகளை நடாத்திவருவது பற்றிய உளவுத் தகவல்கள் சி.ஐ.ஏ.க்குக் கிட்டியிருந்தது. இதில் ஒரு வெடிகுண்டுத் தொழிற்சாலை வடக்கு வாசிரிஸ்தானிலும், மற்றையது தெற்கு வாசிரிஸ்தானிலும் அமைந்திருந்தன. குறிப்பிட்ட தொழிற்சாலைகள் பற்றிய முழு விபரங்களையும் சேகரித்திருந்த சி.ஐ.ஏ., தம்மிடமிருந்த தகவல்களை பாகிஸ்தானிய ராணுவத்துடன் பகிர்ந்து கொண்டது. பாகிஸ்தானிய ராணுவத்தை வைத்தே, அந்த வெடிகுண்டுத் தொழிற்சாலைகள் இரண்டையும் ரெயிட் செய்யும் ஆபரேஷனை மேற்கொண்டது. ஆனால், ரெயிட் நடைபெற்ற நேரத்தில், இரு இடங்களிலும் ஏதுமில்லை. எல்லாமே மாயமாகி விட்டிருந்தன.

�சி.ஐ.ஏ.க்கு கிடைத்த தவறான தகவலின் பேரில் நடைபெற்ற ரெயிட்� என்று கூறி, இரு ஆபரேஷன்களையும் முடித்துக் கொண்டது பாகிஸ்தானிய ராணுவம். இப்போது, சி.ஐ.ஏ. தலைவரினால் இஸ்லாமபாத்தில் வைத்துக் காண்பிக்கப்பட்ட 10 நிமிட வீடியோவில், மேலே குறிப்பிட்ட சம்பவத்தின் பின்னணி படமாக்கப்பட்டிருந்தது. எடிட் செய்யப்பட்ட அந்த வீடியோ, தீவிரவாத அமைப்பினரில் இரு வெடிகுண்டுத் தொழிற்சாலைகளிலும் ரகசியமாக எடுக்கப்பட்டவை! தொழிற்சாலைகளை ராணுவம் சுற்றி வளைக்கப்போகும் தகவல், தீவிரவாத அமைப்பினருக்கு வந்து சேருவதும், உடனே அவர்கள் துரிதமாகச் செயற்பட்டு, தமது தொழிற்சாலையை அங்கிருந்து அப்புறப்படுத்துவதும் சி.ஐ.ஏ.யால் ரகசியமாகப் படமாக்கப்பட்டிருந்தன. �எமக்குக் கிடைக்கும் உளவுத் தகவல்களின் அடிப்படையில் நாம் நேரடியாக ஆபரேஷன்களை பாகிஸ்தானுக்குள் செய்தால், அதையும் எதிர்க்கிறீர்கள். உளவுத் தகவல்களை உங்களிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்குமாறு கூறினால், உங்கள் ஆட்களாலேயே தகவல்கள் தீவிரவாதிகளுக்குப் போய்ச் சேருகின்றன� என்று சி.ஐ.ஏ.யின் தலைவர் கூறியதற்கு, பாகிஸ்தானின் தரப்பிலிருந்து கூறப்பட்ட பதில் என்ன ?

�நாங்கள் இதுபற்றி விசாரிக்கிறோம்� அவ்வளவுதான்!


source:athirvu


--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails