Friday, July 15, 2011

தெண்டுல்கர் ஊக்க மருந்தாக இருக்கிறார்;

தெண்டுல்கர் எனக்கு ஊக்க மருந்தாக இருக்கிறார்; இங்கிலாந்து கேப்டன் ஸ்டிராஸ் பேட்டி

லண்டன், ஜூலை. 15-
தெண்டுல்கர் எனக்கு ஊக்க மருந்தாக இருக்கிறார்; இங்கிலாந்து கேப்டன் ஸ்டிராஸ் பேட்டி
 
4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்திய அணி இங்கிலாந்து சென்றுள்ளது. முன்னதாக 3 பயிற்சி ஆட்டங்களில் இந்தியா ஆடுகிறது. இதில் முதல் பயிற்சி ஆட்டம் இன்று தொடங்குகிறது.இங்கிலாந்து கேப்டன் ஸ்டிராஸ் இதுபற்றி கூறியதாவது:-
 
இந்திய அணியில் தெண்டுல்கர் மிகச்சிறந்த வீரராக திகழ்கிறார். அவர் இங்கும் சிறப்பாக ஆடுவார் என்று எதிர்பார்க்கிறோம். அவரது ஆட்டத்தில் இப்போது புதிய மாற்றம் தெரிகிறது. அவருக்கு ரன் குவிக்க வேண்டும் என்ற பசி எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது. அதனால்தான் அவரால் அதிக ரன் குவிக்க முடிக்கிறது.
 
அதுமட்டுமல்லாமல் ஏதேனும் சாதனை நிகழ்த்திக்கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணமும் அவரிடம் உள்ளது. எனக்கும் கூட வயதாகி விட்டதாக எண்ணம் வரும். ஆனால் தெண்டுல்கரை பார்த்தால் இது மறந்து விடும். அவரை போல நாமும் ஆட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு நானும் நிலைத்து நின்று ஆடி வருகிறேன்.இதில் தெண்டுல்கர் எனக்கு ஒரு ஊக்க மருந்தாகவே இருக்கிறார்.
 
இங்கிலாந்து அணியை பொறுத்த வரை கடந்த 2 ஆண்டுகளாக சிறப்பாக ஆடி வருகிறோம். இந்தியா நெம்பர் 1 அணியாக இருந்தாலும் அதை எங்களால் வீழ்த்த முடியும். மற்ற இடங்களை விட எங்களது சொந்த மண்ணில் நாங்கள் சிறப்பாக ஆடுவோம்.
 
எனவே இந்திய அணிக்கு கடும் நெருக்கடி கொடுக்க முடியும். எங்கள் அணி வீரர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து சிறப்பாக ஆடுகிறோம். இது எங்களுக்கு பெரும் சாதகமாக அமைந்துள்ளது.
 
இவ்வாறு அவர் கூறினார்.

source:maalaimalar

--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails