கிளிநொச்சியில் நடைபெற இருந்த மகிந்தவின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஒரே மேடையில் இசை நிகழ்ச்சி நடாத்துவதற்கு தமிழகத்தில் இருந்து சென்றுள்ளதாக தகவல் வெளிவந்துள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள தமிழ் உணர்வாளர்களது வேண்டுகோள்களை ஏற்று கொழும்பில் இருந்து திரும்ப உள்ளதாக மனோ தெரிவித்துள்ளார். தமிழ்த்திரையுலக பின்னணிப் பாடகர்களான மனோ சுசித்திரா கிறிஸ் ஆகியோர் கொலைவெறியன் மகிந்தராசபக்சவுடன் ஒரே மேடையில் ஏறி இசைநிகழ்ச்சியில் கலந்து கொள்ள கிளிநொச்சி சென்றுள்ளதாக பரபரப்பாக தகவல்கள் வெளிவந்திருந்தது. இதனையடுத்து அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த தமிழ் உணர்வாளர்கள் துரிதமாக களத்தில் இறங்கி சிங்களனின் சதி முயற்சியை தடுத்துநிறுத்தியுள்ளனர்.
இலங்கை சென்றிருந்த தமிழக பாடகர்களை தனது வலையில் சிக்கவைக்க மகிந்தர் போட்ட நாடகத்தை நேற்றைய தினம் அதிர்வு இணையம் வெளியிட்டது. இதனை அடுத்து தாய் தமிழகத்தில் உள்ள பல உணர்வாளர்கள் பாடகர்களைத் தொடர்புகொண்டு நிலையை எடுத்துரைத்துள்ளனர். இதன் காரணமாக தாம் உடனே தமிழகம் திரும்ப இருப்பதாக மனே சற்று முன்னர் தெரிவித்துள்ளார் என அதிர்வு இணையம் அறிகிறது. மதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ நாம்தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் உள்ளிட்ட தமிழ்த்தேசிய உணர்வு சக்திகள் இவர்களை தொடர்பு கொண்டு தமது எதிர்ப்பினை நேரடியாகத் தெரிவித்துள்ளதுடன் இந்த நிகழ்வின் பின்னணியில் தீட்டப்பட்டிருக்கும் சதியைப்பற்றியும் எடுத்துக் கூறியுள்ளனர்.
இதனை ஏற்றுக் கொண்ட இவர்கள் கொழும்பில் இருந்து உடனடியாக நாடு திரும்ப உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கொழும்பில் இருந்து ஊடகங்களிற்கு தகவல் தெரிவித்த பின்னணிப்பாடகர் மனோ அவர்கள் தமிழ் மண்ணிற்கும் தமிழ்த்தாய்கும் எப்போதும் துரோகம் செய்யமாட்டோம் என தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வு தொடர்பாக தமக்கு முழுமையான விபரங்கள் தெரியப்படுத்தப்படவில்லை எனவும் முத்தவர்களது(தமிழ் உணர்வாளர்கள்) வேண்டுகோளை ஏற்று கிளிநொச்சி செல்லாது தமிழகம் திரும்ப உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கலையரங்கம் திறப்பு விழா நிகழ்ச்சியொன்றில் பாடவேண்டும் என்று சொல்லித்தான் எங்களை அழைத்து வந்தனர். இங்கு வந்த பிறகுதான் பிரச்சினை எங்களுக்கு தெரிய வந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாம் என்று நடிகர் சங்கத்தினர் தொடர்பு கொண்டு பேசினார்கள்.
இதையடுத்து அந்த நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டோம். விமான நிலையத்துக்கு திரும்பிக்கொண்டு இருக்கிறோம். இன்று இரவு அல்லது நாளை காலை விமானத்தில் சென்னை வந்து விடுவோம்.இவ்வாறு அவர் கூறினார்.
யாழிலும் கிளிநொச்சியிலும் தமிழக பாடகர்கள் வருவதாக இராணுவம் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தது மண்கவ்வியுள்ளது.
source:athirvu
--
http://thamilislam.tk
No comments:
Post a Comment