Saturday, March 10, 2012

உண்மைக்குப் புறம்பானவற்றை நாங்கள் சொல்லமாட்டோம்:TNTJ வின் உச்சகட்ட காமடிக்கு-SAN சவுக்கடி


உண்மைக்குப் புறம்பானவற்றை நாங்கள் சொல்லமாட்டோம்:TNTJ வின் உச்சகட்ட காமடிக்கு-SAN சவுக்கடி


From: SAN (INDIA)
Date: Fri, Mar 9, 2012 at 9:07 AM
Subject: SAN reply to TNTJ
To: TNTJ Head Office , TNTJ Head Office , TNTJ Head Office , pjtntj@gmail.com
Cc: "S.JOSHUA VENKATESAN" , Ajoy Varghese

Let the name of Yahweh, the only true name of God upon which all the true prophets have called, who in flesh was known by the name LORD Jesus Christ, be glorified forever and ever. Amen.

Dear Friends at TNTJ,

We are in receipt of your email dated March 08, 2012.

We as Christians debated with you on our topic, the Holy Bible, and the recordings are uploaded in public to see the results. Are you not ashamed as Muslims and being such a large Jammath, if you really believe that Quran is the word of God, to always look for some loopholes and some means to somehow get this debate cancelled and escape from a debate but still pretend that you are willing to debate?

Initially, after the police cancellation, we agreed to come to your office for a private recorded debated to debate on Quran while complying with police order and you purposely continued to advertise the online telecast knowing fully that we will not violate the law. If you really believe Quran as the word of God and have the ability to prove that, you should have kept your word for private recorded debate and could have shared the recordings with interested people later. We gave you that option even after your drama on Jan 28 and still you did not take it. It should have been you who should have offered this option if you really believed Quran as the word of God, a position that you were supposed to defend. If you really wanted a debate on Quran, you should have taken the initiative to go to the Chennai police to get the ban order revoked. But you are refusing to come even after we took the initiative.

We at least thought you would be cooperative if we offer to host the debate at another place at our expense though you should have been the one who should have taken the initiative if you really believed Quran as the word of God, a position that you were supposed to defend. It looks to us that you are more interested in somehow fooling people that you are ready to debate but at the same time wants this debate to get cancelled. When we are ready for all the three legally viable options, when we are ready to bear the cost as mentioned earlier and host the debate despite your refusal to abide by even the signed agreement, the least that you can do is to cooperate to have this debate take place. By looking for some lame excuses and loopholes, you are not going to fool anyone except yourselves.

Let us first discuss the issues which you raised:

(a) You want the draft to the police commissioner to be changed as you think that the debate cannot be an academic one which would help in the greater understanding of Islam and Christian teachings. Probably, that explains why you used more abusive words than logically sound arguments with proper evidence in the previous debate. We believe that a debate can be an academic one helping in greater understanding of religions while at the same time exposing the falsehood. We wrote the draft with all the relevant points which are required for applying police permission at any place. However, in the pretext of disclosing all truths, you want to mention about the debate at Chennai and that no mishap happened in Chennai. If we go by your argument, we think that we should also mention about the ban since everything, even if it is irrelevant, must be mentioned. If we apply your argument, we must also provide a brief description about some key panelists and their security risks lest the Kochi police find that some key panelists are at risk from their coreligionist and cancel the debate at later stage. Though we know your intentions, we would still try our best to accommodate your suggestions and apply for the police permission at Kochi and we look forward for your cooperation as well.

(b) You said you will not come with us to the Kochi police. You are supposed to come as part of the signed agreement but we still said that we can go alone. We would be going alone as well. However, if the police insist on seeing your representative, you should come with us. That is what we wrote in the previous email and that is what we write in this as well.

(c). You wrote that the debate must happen at any cost. Is that what you truly believe? Then why are you refusing to come with us to Chennai police to request to get the ban revoked despite the signed agreement clearly says that both parties should together approach the police? Why are you not ready for a private recorded debate but always insist on live telecast which was not even part of the signed agreement? Now, you do not want us to mention these points of the agreement as you fear that the people would see your true color- running away from the debate on Quran at any cost. We Christians debated with you on the Holy Bible and proved our case and refuted and exposed your shallow arguments. You can never debate with us on the Quran and prove your point. That is a fact. You will continue to transgress agreements (as you did for posters and later private recorded debate), look for loopholes, create such conditions as to get the debate cancelled.

(d) If the Kochi police denies the permission to host the debate at Kochi, the other two options are always open- (1) approaching the Chennai police together to get the cancellation order revoked and conduct it in Chennai itself (2) conduct a private recorded debate. We know why you do not want these options to be open. You would now play behind the scenes to get either police deny the permission or get it cancelled at a later stage. And you want it to be solely the responsibility of Sakshi and escape from that loophole. We repeat that you are shamelessly trying at any cost to escape from the debate on Quran. If you really think that your Quran is the word of God, stop all these cheap tricks and show how you are ready to conduct this debate at any cost with your actions. You cannot on one hand claim that you are ready to debate at any cost and on other hand does not even do the least which you are supposed to do. The other two options are always open if the Kochi police deny the permission. If you have any other reasonable option which is legally viable, do let us know. We have not heard any constructive suggestion from you to conduct this debate at "any cost" though you make this empty claim every now and then. The fact is that you want to avoid this debate at any cost. The only way you can escape is to run away or accept the fact that you are incapable of defending your Quran and you are worth only of doing dramas.

(e) You are again repeating the laughable statement that debate on Quran had already happened. We agree that you can only "debate" on Quran without us. You can never have a debate with us as that would completely shatter your arguments.

(f) Yes, you should be debating with Jehovah Witnesses another group like you which falsely claims to followers of true God. If either you or Jehovah Witnesses debate with us, who are the true followers of true God, people can see the result. It was in display on Jan 21 & 22. Probably, in order to avoid such results in the future, you should focus only on false groups such as Jehovah Witnesses.

Having said this, we would still try our best to accommodate your suggestions (which has a high probability of getting the police denial) and will apply for police permission. Accommodating your suggestions, we propose the following letter to the police. Please let us know by when we should be collecting your letter.

To,

Commissioner of Police,

Kochi City,

Kerala

Sub: Request for Permission for an Indoor Interreligious Debate

Respected Sir,

This letter is to request your kind permission to conduct an interreligious debate on the topic "Is Quran the Word of God" at Kochi in an indoor auditorium on April 28 & 29, 2012. The Christian perspective on this would be presented by Sakshi Apologetics Network and the Islamic perspective on this would be presented by Tamil Nadu Thowheed Jamath using the provision provided by the constitution of our country for peaceful gathering and religious propagation.

Sakshi Apologetics Network and Tamil Nadu Thowheed Jamath are committed to maintain absolute order and peace in the entire program and as such would be allowing only 150 selected participants with identity cards. This is the second in the series of debates with the first on the Holy Bible being conducted at Chennai. Further, it is proposed that for the benefit of the larger public, that these debates be telecasted live.

We request your kind permission to conduct this debate and convey our deep gratitude for the same.

Thanks,

Sincerely,

SAN அனுப்பின மின்னஞ்சலின் தமிழாக்கம்

மாம்சத்தில் வந்து ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து என்று அறியப்பட்டவரும் உண்மையான எல்லா தீர்க்கதரிசிகளாலும் அழைக்கப்பட்டவரும் உண்மையான ஒரே இறைவனுமாகிய யொகோவாவின் நாமம் என்றென்றைக்கும் மகிமைப்படுவதாக. ஆமென்.

அன்புள்ள TNTJ நண்பர்களுக்கு,
மார்ச் 8, 2012 அன்று நீங்கள் அனுப்பிய மின்னஞ்சல் கிடைக்கப் பெற்றோம்.
கிறிஸ்தவர்களாகிய நாங்கள் எங்கள் பரிசுத்த வேதாகமத்தைப் பற்றிய எங்கள் தலைப்பிலே உங்களோடு விவாதித்தோம், அதன் வீடியோ பதிவுகளை எல்லோரும் பார்க்கும் விதத்தில் பதிவேற்றம் செய்தும் இருக்கின்றோம். குர்-ஆன் இறைவனுடைய வார்த்தை என்று நீங்கள் உண்மையிலேயே விசுவாசிப்பீர்களானால், முஸ்லீம்களாக, ஒரு பெரிய ஜமாஅத்தாக இருக்கும் நீங்கள், இந்த விவாதத்திலிருந்து தப்பிக்க, இந்த விவாதம் இரத்து செய்யப்படுவதற்கு ஏதாகிலும் வழிவாசல்கள் மற்றும் காரணங்கள் கிடைக்காதா என்று தேடிக்கொண்டே, விவாதம் செய்ய விருப்பம் உடையவர்கள் போல பாசாங்கு செய்து கொண்டு இருப்பதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா?

காவல் துறை தடை உத்தரவுக்குப் பின்பு, காவல் துறையினரின் ஆணைக்கு இணக்கமான விதத்தில், உங்களுடைய அலுவலகத்தில் வந்து ஒளிப்பதிவுடன் கூடிய தனிப்பட்ட ஒரு விவாதத்தை செய்ய நாங்கள் ஆரம்பத்தில் ஒப்புக்கொண்டோம். ஆனால் நாங்கள் சட்டத்தை மீற மாட்டோம் என்பதை முழுவதுமாக அறிந்த நீங்கள் இணைய தளத்தில் நேரடி ஒளிபரப்பு நடைபெறும் என்று வேண்டுமென்றே தொடர்ந்து விளம்பரப்படுத்திக் கொண்டிருந்தீர்கள். குர்-ஆன் இறைவனுடைய வார்த்தை என்று உண்மையிலே நீங்கள் நம்புகிறவர்களாக இருந்தால், அதை நிரூபிக்கத் திறமையுடையவர்களாயிருந்தால், ஒளிப்பதிவுடன் கூடிய தனிப்பட்ட விவாதத்திற்கு நீங்கள் சொன்னபடி வந்து விவாதித்து, பிறகு விருப்பமுடையவர்களுக்கு அந்த ஒளிப்பதிவை கொடுத்திருக்கலாம். அதே வாய்ப்பை ஜனவரி 28ம் தேதி நீங்கள் நடத்திய நாடகத்திற்கு பிறகும் நாங்கள் கொடுத்தோம் ஆனால் இன்னமும் நீங்கள் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. நீங்கள் குர்-ஆனை இறைவனுடைய வேதம் என்று உண்மையிலே நம்புபவர்களாக இருந்திருந்தால், எங்களிடம் அதை நிரூபிக்க வேண்டிய நிலையில் இருந்த நீங்கள்தான் இப்படிப்பட்ட ஒரு வாய்ப்பை எங்களுக்குத் தந்திருக்க வேண்டும். உண்மையிலேயே குர்-ஆன் மீதான விவாதம் நடைபெறவேண்டும் என்று நீங்கள் உண்மையிலேயே விரும்பியிருந்தால், சென்னை காவல் துறையினரிடம் சென்று ரத்து செய்த ஆர்டரை நீக்க வேண்டும் என்று கோருவதற்கு முயற்சி எடுத்திருக்க வேண்டும். ஆனால் நாங்கள் முயற்சி எடுக்க ஆரம்பித்த பிறகும் கூட எங்களுடன் வருவதற்கு நீங்கள் மறுக்கிறீர்கள்.

நீங்கள் குர்-ஆனை இறைவனுடைய வேதம் என்று உண்மையிலே நம்புபவர்களாக இருந்திருந்தால், எங்களிடம் அதை நிரூபிக்க வேண்டிய நிலையில் இருந்த நீங்கள்தான் விவாதம் நடப்பதற்கு முயற்சி எடுக்கிறவர்களாக இருக்க வேண்டும் என்ற போதிலும், எங்களுடைய செலவிலே விவாதத்தை வேறொரு இடத்தில் நடத்துவதற்கு நாங்கள் ஏற்பாடு செய்கிறோம் என்று சலுகை அளித்தால், குறைந்த பட்சம் அதற்காவது ஒத்துழைப்பு தருவீர்கள் என்று நாங்கள் நினைத்தோம். நீங்கள் விவாதம் செய்வதற்கு விருப்பமுள்ளவர்களாக இருக்கிறீர்கள் என்று மக்களை நம்பவைத்து முட்டாளாக்கி, அதே வேளையில் இந்த விவாதம் ரத்து செய்யப்படவேண்டும் என்று விரும்புகிறவர்களாக எங்களுக்குத் தோன்றுகிறது. சட்டப்பூர்வமான நடைமுறைக்குந்த மூன்று விருப்ப தெரிவுகள் அனைத்திற்கும் நாங்கள் தயாராக இருக்கும் போது, கையொப்பமிடப்பட்ட ஒப்பந்தத்தின் படி நடப்பதற்கு நீங்கள் மறுக்கும் நிலையிலும் ஏற்கனவே குறிப்பிட்டது போல செலவுகளை நாங்களே ஏற்றுக் கொண்டு விவாதத்தை நடத்த நாங்கள் தாயராக இருக்கும் போது, உங்களால் செய்யக் கூடிய சிறிய ஒரு காரியம் என்பது இந்த விவாதம் நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டியது தான். ஏதாவது நொண்டிச் சாக்குகளையும், தப்பிக் கொள்ள வழிவாசல்களைத் தேடுவதின் மூலம் நீங்கள் உங்களையே முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறீர்கள், மற்றவர்களை அல்ல.

நீங்கள் முன்வைத்தை விசயங்களைப் பற்றி முதலில் பேசுவோம்:
(அ) இந்த விவாதமானது இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ போதனைகளை மிகவும் சிறப்பாகப் புரிந்து கற்றுக் கொள்ள உதவக் கூடியதாக இருக்க முடியாது என்று நீங்கள் நினைப்பதால், காவல் துறை ஆய்வாளருக்கு கொடுக்க வேண்டிய கடிதத்தின் வரைவு மாதிரி மாற்றப் படவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். முந்தின விவாதத்தில் நீங்கள் தகுந்த ஆதாரங்களோடு, சரியான வாதங்களை முன் வைப்பதை விட, நீங்கள் ஏன் அதிகம் இழிவான வார்த்தைகளையே பயன்படுத்தினீர்கள் என்பதை விளக்குவதாக இருக்கின்றது. விவாதமானது மார்க்கங்களைப் பற்றிய சிறந்த புரிந்துகொள்ளுதலில் உதவுக்கூடிய அறிவுசார்ந்த ஒன்றாக இருக்கும் அதே வேளையில், பொய்யானவற்றையும் அம்பலப்படுத்திக் காட்டும் என்று நாங்கள் நம்புகிறோம். எந்த இடத்திலும் காவல் துறை அனுமதிக்கு சமர்ப்பிப்பதற்கு தேவையான பொருத்தமான எல்லாக் குறிப்புகளோடும் நாங்கள் அந்த வரைவு மாதிரியை எழுதினோம். இருப்பினும், எல்லா உண்மைகளையும் வெளிப்படுத்த வேண்டும் என்ற சாக்கு போக்கில் சென்னையில் நடந்த விவாதம் பற்றியும் அந்த விவாதத்தில் எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை என்பதையும் நீங்கள் குறிப்பிட விரும்புகிறீர்கள். உங்களுடைய வாதத்தின் படியே நாம் செய்வோமானாலும், தடையைக் குறித்தும் நாம் குறிப்பிட வேண்டும், ஒரு வேளை ஏற்புடையதாக இல்லாவிட்டாலும் அதிலிருந்து எல்லாக் காரியங்களும் குறிப்பிடப்பட வேண்டும். உங்களுடைய வாதத்தை நாம் நடைமுறைப் படுத்துவோம் எனில், குழுவின் சில நபர்களுக்கு அவர்களுடைய சொந்த மார்க்கத்தினரிடமிருந்தே அபயாம் ஏற்படும் சூழல் இருக்கிறது என்பதை கேரளா காவல் துறையினர் அறிந்து கொண்டு கடைசி நேரத்தில் அனுமதியை ரத்து செய்துவிடாதவாறு, குழுவின் சில முக்கியமான நபர்களைப் பற்றியும் அவர்களுடைய பாதுகாப்பிற்கு இருக்கும் அபாயமான சூழலையும் நாம் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். உங்களுடைய உள்நோக்கத்தை நாங்கள் அறிந்தவர்களாக இருப்பினும், எங்களால் முடிந்த அளவிற்கு உங்களுடைய யோசனைகளோடு இணங்கி செயல்பட்டு காவல் துறை அனுமதிக்காக கொச்சியில் சமர்ப்பிப்போம், உங்களுடைய ஒத்துழைப்பையும் நாங்கள் எதிர்நோக்கியிருக்கிறோம்.

(ஆ) கொச்சி காவல் துறையிடம் நீங்கள் எங்களோடு வரமாட்டீர்கள் என்று சொல்லியிருக்கிறீர்கள். கையொப்பமிடப்பட்ட ஒப்பந்தத்தின் படி நீங்கள் வரவேண்டியவர்களாக இருந்தாலும், நாங்கள் தனியே போக முடியும் என்பதை கூறியிருக்கிறோம். நாங்கள் தனியே போவோம். இருப்பினும், உங்கள் பிரதிநிதிகளை பார்க்க வேண்டும் என்று காவல் துறையினர் வலியுறுத்துவார்கள் எனில், நீங்கள் எங்களோடு வர வேண்டும். அதைத் தான் நாங்கள் முந்திய மின்னஞ்சலிலும் எழுதினோம் அதைத் தான் இப்போதும் எழுதுகிறோம்.

 

(இ) எப்படியாவது இந்த விவாதம் நடந்தே தீர வேண்டும் என்று நீங்கள் எழுதியிருந்தீர்கள். நீங்கள் உண்மையிலேயே எதிர்பார்ப்பது அதைத்தானா? அப்படியென்றால், இரு தரப்பினரும் சோந்து காவல் துறையை அணுக வேண்டும் என்று கையொப்பமிடப்பட்ட ஒப்பந்தம் தெளிவாகக் கூறுகின்ற நிலையிலும், எங்களோடு சேர்ந்து சென்னை காவல் துறையினரிடம் தடையுத்தரவை நீக்கும்படி கேட்பதற்கு நீங்கள் ஏன் வர மறுக்கிறீர்கள்? ஒளிப்பதிவுடன் கூடிய ஒரு தனிப்பட்ட விவாதத்திற்கு ஏன் நீங்கள் ஆயத்தமாக இல்லை? கையொப்பமிடப்பட்ட ஒப்பந்தில் இல்லாதிருக்கும் நிலையில் நேரடி ஒளிபரப்பு செய்தே ஆகவேண்டும் என்று ஏன் வலியுறுத்திக் கொண்டிருக்கிறீர்கள். எந்த நிலையிலும் குர்-ஆன் விவாதத்திலிருந்து ஓடி ஒளியும் உங்கள் உண்மையான நிறத்தை ஜனங்கள் பார்த்து விடுவார்கள் என்று நீங்கள் பயப்படுவதால் ஒப்பந்தத்தில் இருக்கின்ற இந்தக் காரியங்களைப் பற்றி நாங்கள் குறிப்பிட வேண்டாமென்று நீங்கள் விரும்புகிறீர்கள். கிறிஸ்தவர்களாகிய நாங்கள் பரிசுத்த வேதாகமத்தின் தலைப்பில் விவாதித்து எங்களுடைய நிலையை நிரூபித்து விட்டு, உங்களுடைய ஆழமற்ற வாதங்களுக்கு மறுப்பு தெரிவித்து அவற்றை அம்பலப்படுத்தியிருக்கிறோம். குர்-ஆனைப் பற்றி எங்களிடத்தில் ஒருபோதும் உங்களால் விவாதம் செய்து உங்கள் கருத்தை நிரூபிக்க முடியாது. இது தான் உண்மை. (சுவரொட்டிகள் காரியத்தில் செய்தது போல, பிறகு ஒளிப்பதிவுடன் கூடிய தனிப்பட்ட விவாதத்திற்கு நீங்கள் செய்தது போல) நீங்கள் தொடர்ந்து ஒப்பந்தத்தை மீறுவீர்கள், தப்புவதற்கு ஏதாவது வழிவாசல்களைத் தேடுவீர்கள், விவாதம் ரத்து செய்யப்படக் கூடிய விததில் ஏதாவது நிபந்தனைகளை உருவாக்குவீர்கள்.

(ஈ) ஒரு வேளை கொச்சியில் விவாதம் நடத்துவதற்கு கேரள காவல்துறையினர் அனுமதி தர மறுத்தாலும் கூட மற்ற இரண்டு விருப்பத் தெரிவுகள் திறந்தே இருக்கின்றன.

 

(1) காவல் துறையை சேர்ந்து அணுகி தடையுத்தரவை ரத்து செய்யப்பட்டு வாங்கி சென்னையிலேயே விவாதத்தை நடத்துவது.

 

(2) ஒளிப்பதிவுடன் தனிப்பட்ட ஒரு விவாதத்தை நடத்துவது. இந்த இரண்டு விருப்பத் தெரிவுகளும் திறந்து இருக்க வேண்டாம் என்று நீங்கள் ஏன் விரும்புகிறீர்கள் என்பதும் எங்களுக்குத் தெரியும். காவல் துறையினர் அனுமதி மறுக்கவைப்பது அல்லது கடைசி நேரத்தில் அதை ரத்து செய்யவைப்பதற்கு இப்போது நீங்கள் திரை மறைவில் இருந்து விளையாடுவீர்கள். மேலும் நீங்கள் சாக்ஷியை அதற்கு முழுக் காரணம் என்று காட்டி விட்டு அதைச் சாக்காக வைத்து தப்பித்துக் கொள்ள விரும்புகிறீர்கள். குர்-ஆன் விவாதத்திலிருந்து எந்த விதத்திலிருந்தாவது தப்பித்து கொள்வதற்கு நீங்கள் வெட்கமில்லாமல் முயன்று கொண்டிருக்கிறீர்கள் என்பதை நாங்கள் மறுபடியும் சொல்லுகிறோம். உண்மையிலே குர்-ஆன் தான் இறைவனுடைய வார்த்தை என்று நீங்கள் கருதுவீர்களானால், இப்படிப்பட்ட அற்பமான தந்திரங்களையெல்லாம் நிறுத்திவிட்டு எப்படியாகிலும் இந்த விவாதத்தை நடத்த தயாராக இருக்கிறோம் என்பதை உங்கள் செயல்களினால் காண்பியுங்கள். ஒரு புறம் எந்த நிலையிலும் விவாதம் நடத்துவதற்கு தயாராக இருக்கிறோம் என்று வாதிட்டுக் கொண்டு மற்றொரு புறம் நீங்கள் செய்ய வேண்டிய மிக எளிமையான காரியத்தை கூட செய்யாமலிருக்க   முயற்சி செய்ய வேண்டாம். கொச்சி காவல் துறை அனுமதி மறுத்தாலும் கூட மற்ற இரண்டு விருப்ப தெரிவுகள் திறந்தே இருக்கின்றன. உங்களுக்கு சட்டப்பூர்வமான நடைமுறைக்கு உடபட்ட வேறு ஏதாவது விருப்பத் தெரிவுகள் இருக்குமென்றால், எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். இந்த விவாதத்தை எந்த நிலையிலும் நடத்துவதற்கு உங்களிடமிருந்து உருப்படியான எந்த யோசனையும் வரவில்லை இருப்பினும் இந்த வெற்று வாதத்தையே நீங்கள் இப்போதும் முன்பும் கூறிக்கொண்டிருக்கின்றீர்கள். எப்படியாகிலும் இந்த விவாதத்தை தவிர்க்க வேண்டும் என்று நீங்கள் விரும்புவது தான் உண்மையாகும். அதற்கான ஒரே வழி நீங்கள் தப்பி ஓட வேண்டும் அல்லது உங்கள் குர்-ஆனை தற்காத்து விவாதிக்க உங்களுக்கு திறமை இல்லையென்றும், நீங்கள் நாடகம் நடிப்பதற்கு தான் தகுந்தவர்கள் என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும்.

(உ) குர்-ஆனைப் பற்றிய விவாதம் ஏற்கனவே நடந்து முடிந்து விட்டது என்று நீங்கள் மீண்டும் மீண்டும் வேடிக்கையான ஒரு கூற்றை கூறிவருகிறீர்கள். நாங்கள் இல்லாத இடத்தில் தான் உங்களால் குர்-ஆனைப் பற்றி "விவாதிக்க" முடியும் என்பதையும் நாங்கள் ஒத்துக் கொள்கிறோம். உங்களால் ஒரு போதும் எங்களோடு விவாதிக்க முடியாது .அப்படி செய்தால் உங்களுடைய வாதங்களை தவிடுபொடியாகும்.

(ஊ) ஆமாம், உண்மையான இறைவனைப் பின்பற்றுகிறோம் என்று பொய்யாக வாதிடுகின்ற உங்களை போன்ற மற்றொரு குழுவிடமோ அல்லது யெகோவா சாட்சிக்காரரிடமோ நீங்கள் விவாதம் செய்து கொண்டிருப்பீர்கள். உண்மையான இறைவனை பின்பற்றுகிறவர்களாகிய எங்களிடம் நீங்களோ அல்லது யெகோவா சாட்சிக்காரர்களோ விவாதம் செய்தால், மக்கள் அதன் முடிவை பார்க்க முடியும். அது தான் ஜனவரி 21 மற்றும் 22 தேதிகளில் வெளிக்காட்டப்பட்டது. அநேகமாக, எதிர்காலத்தில் இப்படிப்பட்ட முடிவுகளை தவிர்ப்பதற்காக நீங்கள் யொகோவா சாட்சிக்காரர்களைப் போன்ற பொய்யான குழுவினரையே சந்தித்தாக வேண்டும்.
இவைகளைக் கூறும் அதே வேளையில், (காவல் துறை அனுமதி மறுக்கப்படுவதற்கு அதிகமான சாத்தியக் கூறுகள் இருக்கின்ற) உங்கள் யோசனைகளை நாங்கள் சேர்த்துக் கொண்டு எங்களால் முடிந்த அளவிற்கு முயற்சி செய்து காவல் துறை அனுமதிக்கு நாங்கள் சமர்ப்பிப்போம். உங்கள் யோசனைகளை சேர்த்துக் கொண்டு பின்வரும் கடிதத்தை நாங்கள் காவல் துறைக்கு முன்மொழிவோம். உங்களிடமிருந்து கடிதத்ததை எந்த நாளுக்குள் நாங்கள் பெற்றுக் கொள்ள வேண்டுமென்பதை தெரியப்படுத்தவும்.

TNTJ அனுப்பின கடிதம் 

From: TNTJ Head Office
Date: 2012/3/8
Subject: சான் குழுவினருக்கு
To: Sakshi Apologetics Network

சான் குழுவினருக்கு

இணைப்பைப் பார்வை இடவும்

இப்படிக்கு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

TNTJ அனுப்பின் இணைப்பில் உள்ளவை 

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய தனக்கு மகனை ஏற்படுத்திக் கொள்ளாத எல்லாம் வல்ல ஒரே இறைவனாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்…
சான் குழுவினருக்கு,
உங்களது 03.03.2012 மற்றும் 06.03.2012 ஆகிய தேதியிட்ட மெயில்கள் கிடைத்தன.
ஜெர்ரி தாமஸ் குழுவினர் சரியாக விவாதிக்கவில்லை; எங்களுடன் விவாதிக்கத் தயாரா என்று ஆந்திராவில் உள்ள யகோவா விட்ன்ஸ் குழுவினர் அறை கூவல் விட்ட்தன் அடிப்படையில் விவாத ஒப்பந்த குறித்துப் பேச எங்கள் குழு அறிஞர்கள் பயணம் மேற்கொண்டிருந்ததால் இரண்டு மெயிலுக்கும் ஒரே பதில் எழுதும் நிலை ஏற்பட்டு விட்டது.
குர்ஆன் இறைவேதமா என்ற தலைப்பில் இரண்டாம் முறையாக விவாதம் செய்ய ஏப்ரல் 28, 29 தேதிகளைத் தேர்ந்தெடுத்து அறிவித்தமைக்கு பாராட்டுக்கள்.
மண்டபம் ஏற்பாடுகளை உடனே செய்யுங்கள்.
காவல்துறை அனுமதியைத் தாமதமின்றிப் பெற்று, பொறுப்புள்ள ஒரு அதிகாரியால் சான்றளிக்கப்பட்ட அதன் நகலை ஏப்ரல் 12 ஆம் தேதிக்குள் எங்களுக்கு அனுப்பித் தரவேண்டுகிறோம். ஏனெனில் விவாதம் நடைபெறும் நாளுக்கு 15 நாட்கள் முன்னதாக அதாவது ஏபர்ல் 12 க்குள் எங்களுக்கு அந்த நகல் கிடைத்தால் தான் எங்கள் தரப்பில் வரும் பார்வையாளர்களும் நாங்களும் பயணச்சீட்டுக்கான முன்பதிவு செய்ய இயலும்.
எங்கள் பார்வையாளர்களும் நாங்களும் தேவையான பயண ஏற்பாடுகளைச் செய்ய 15 நாட்கள் அவகாசம் தேவை என்பதை முன்னரும் குறிப்பிட்டிருக்கிறோம்.
குறிப்பிட்ட ஏப்ரல் 12க்குள் அனுமதி நகலைப் பெற்றுத்தர உங்களால் இயலாமல் போனால் அது குறித்து தேவையில்லாத வாதப்பிரதிவாதங்களுக்கு இடமளிக்கக் கூடாது என்று நாங்கள் கருதுகிறோம். எனவே குறிப்பிட்ட ஏப்ரல் 12 ஆம் தேதிக்குள் எங்களுக்கு அதன் நகலைத் தராவிட்டால் எந்தத் தேதியில் எங்களுக்குக் கிடைக்கப் பெறுகிறதோ அன்றிலிருந்து 15 நாட்கள் கழித்து விவாதம் நடக்கும் வகையில் தேதிகளை மாற்றி அமைத்துக் கொண்டு இந்த விவாதம் நடந்தே ஆக வேண்டும். என்று கருதுகிறோம். இதில் உங்களுக்கு ஆட்சேபணை இருக்காது என்று நம்புகிறோம்.
நீங்கள் அனுமதி பெற்றுத் தருவது தவிர மற்ற விஷயங்களை நாம் பேசி முடித்து விட்டோம்.
மேலே சொன்ன பிரகாரம் அனுமதிக்கான உத்தரவை நீங்கள் பெற்றுத் தந்தவுடன் எங்களது ஒளிப்பதிவு மற்றும் லைவ் ரிலே தொழில்நுட்பக் கலைஞர்கள், சாதனங்களுடன் ஏப்ரல் 28 தேதி காலை 7 மணிக்கு நீங்கள் பதிவு செய்து விட்டு பதிவு செய்த ரசீது நகலுடன் எங்களுக்குத் தெரியப்படுத்தும் மண்டபத்தில் காத்திருப்பார்கள்.
நீங்கள் குறிப்பிடும் அந்த அரங்கில் விவாதம் நடப்பதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாக 9;45 மணிக்கு நாங்கள் தயாராக இருப்போம். எங்கள் தரப்பில் கலந்து கொள்ளும் பார்வையாளர்கள் சரியாக 9.30 மணிக்கு ஆஜராகி விடுவார்கள்.
கமிஷனரைச் சந்திக்க வேண்டும் என்ற ஒப்பந்த விதியை நாங்கள் மீறுவதாக உங்கள் கடிதத்தில் தெரிவித்துள்ளது உண்மைக்கு மாற்றமானதாகும். கடந்த ஆண்டு நம் இரு தரப்பிற்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, பைபிள் இறைவேதமா? என்ற தலைப்பும் குர்ஆன் இறைவேதமா? என்ற தலைப்பும் விவாதிக்கப்பட்டு விட்டன.
அந்த ஒப்பந்தம் அல்லாமல் நீங்களே முன்மொழிந்த புதிய விதிகளுக்குப் பின் பழைய ஒப்பந்தம் பற்றி நீங்கள் பேசுவதை பயனற்றதாக நாங்கள் கருதுகிறோம்.
கொச்சியில் நடத்துவோம் என்று நீங்கள் தான் சொன்னீர்கள். நீங்களே அரங்கத்துக்கான ஏற்பாடுகளை நாங்களே செய்கிறோம் என்றும் நீங்கள் தான் சொன்னீர்கள். காவல்துறையில் அனுமதி பெறுவதும் நீங்களே ஏற்றுக் கொண்டீர்கள். இவை நீஙகளே முன்மொழிந்த புதிய விஷயமாகும். ஒரு தரப்பு முன்மொழிந்து இன்னொரு தரப்பு ஏற்றுக் கொண்ட விஷயங்களில் பழைய ஒப்பந்தம் பற்றி பேசுவது அர்த்தமற்றதாகும்.
பழைய ஒப்பந்தப்படி அனைத்து தலைப்புகளிலும் உங்களுடன் விவாதிக்க வேண்டும் என்பதற்காகவே உங்களது இந்த புதிய ஒப்பந்தக் கோரிக்கையை நாங்கள் ஏற்றோம் என்பதை உங்களுக்கு நினைவூட்டுகிறோம்.
இரண்டு ஒப்பந்தங்களையும் ஒன்றுபோல் கருதி நீங்கள் குழம்பிக் கொண்டிருப்பதால் இதைத் தெளிவுபடுத்துகிறோம்.
மேலும், கொச்சியில் விவாதத்தை வைத்துக் கொள்ளலாம் என்று முதன் முதலில் நீங்கள் முன்மொழிந்த பிப்ரவரி 3 ஆம் தேதியிட்ட மெயிலில் உள்ள வாசகத்தை உங்களுக்கு நினைவூட்டுகிறோம்.

"…..சானுடன் இணைந்து இணை கமிஷனரைச் சந்திக்க வருவதற்கு நீங்கள் விரும்பவில்லை என்றால் கீழ்க்கண்டவாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம்;
விவாதத்திற்கு தடை உத்தரவு இல்லாத இந்தியாவின் மற்ற பகுதிகளில் வைத்துக் கொள்ளலாம். குர்ஆன் பற்றிய விவாத செலவு முழுவதையும் சானே ஏற்று கொச்சியில் விவாத ஏற்பாடுகளையும் சானே செய்யும்."
இது நீங்கள் எழுதிய வாசகம் தான்.
சானுடன் இணைந்து இணை கமிஷனரைச் சந்திக்க வருவதற்கு நீங்கள்விரும்பவில்லை என்று நீங்கள் எழுதியதன் மூலம் கொச்சியில் விவாதம் நடக்கும் போது இருவரும் சேர்ந்து சந்திக்கும் அவசியம் இல்லை என்று நீங்களே ஒப்புக் கொண்டீர்கள். பழைய விதியை ரத்து செய்து விட்டீர்கள். இப்போது கமிஷனரைச் சந்திக்க நீங்களும் வாருங்கள் என்று நீங்கள் சொல்வது நீங்கள் புதிதாக சொல்லி நாங்களும் ஒப்புக் கொண்ட முடிவுக்கு மாற்றமானது என்பது ஏன் உங்களுக்குப் புரியவில்லை.

இருவரும் சேர்ந்து கமிஷனரைச் சந்திக்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தை மேற்கண்ட வாசகத்தின் மூல்ம நீங்களே முறித்து விட்டு கமிஷனரைச் சேர்ந்து சந்திப்போம் என்பது தான் புதிய ஒப்பந்த்த்தை மீறுவதாகும்.
கொச்சியில் விவாதத்திற்கு அனுமதி உண்டு; தடை இல்லை; எங்களுடன் இணைந்து காவல்துறையிடம் அனுமதி பெற நீங்கள் வர விரும்பவில்லை ; ஆகவே கொச்சியில் விவாதிக்க வாருங்கள்; நாங்களே ஏற்பாடுகளைச் செய்கிறோம் என்று எழுதிவிட்டு இப்போது கடிதம் தாருங்கள்; கமிஷனர் கூப்பிட்டால் நீங்களும் வாருங்கள் என்று எழுதுவது எப்படி?
இருப்பினும், காவல்துறை அனுமதி கோரி நாங்களும் கடிதம் தர வேண்டும் என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், நீங்கள் அனுப்பியுள்ள ((Draft)) மாதிரி வரைவுக் கடிதம் அனுமதி பெறுவதற்கு ஏற்றவாறு இல்லை. அனுமதி கோரி கொடுக்கும் கடிதத்தில் உண்மைக்கு மாற்றமான விஷயங்கள் இடம்பெற்றால் காவல் துறைக்கு கடைசி நேரத்தில் அது தெரிந்தால் கொடுத்த அனுமதியை ரத்து செய்து விடுவார்கள். ஆனால் நீங்கள் அனுப்பிய மாதிரி வரைவுக் கடிதத்தில் உண்மை மறைக்கப்பட்டும் உண்மைக்கு மாற்றமான வகையில் எழுதப்பட்டும் உள்ளன.
நமக்கிடையே நடப்பது கிறிஸ்தவர்கள் முஸ்லிம்கள் ஆகிய இரு சாராருக்கு இடையில் இணக்கத்தை ஏற்படுத்தும் கலந்துரையாடலும் அல்ல; ஒருவருக்கு ஒருவர் புரிந்துணர்வை ஏற்படுத்தும் முயற்சியும் அல்ல; இது அறிவுசார் ஆய்வு நிகழ்ச்சியும் அல்ல. மாறாக யார் பொய்யர் என்பதை உலகிற்குத் தோலுரித்துக் காட்டும் விவாதக்களமாகும். இதை நம் இருவருக்கிடையே பேச்சுவார்த்தை துவங்கிய முதல் நிமிடத்திலேயே நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம். நீங்களும் அதை ஆமோதித்தீர்கள். அதற்கான யூ டியூப் இணைப்பு இதோ :
http://www.youtube.com/watch?v=yOX_Aj5uWSQ
எந்த நிலையிலும் உண்மைக்குப் புறம்பானவற்றை நாங்கள் சொல்லமாட்டோம். அனுமதி கடிதமே ஆனாலும் சரியே.
நீங்கள் அனுப்பிய மாதிரிக்கடித்த்தைக் கொடுத்து அனுமதி கோரினால் கடைசி நேரத்தில் தமிழக உளவுத்துறையிடம் விசாரித்து கேரள போலீசார் உண்மையை அறிந்து கொள்ள மாட்டீர்கள் என்று எப்படி நினைக்கிறீர்கள். அவ்வாறு அறிந்து கொண்டால் நாம் பொய்யான தகவல் கொடுத்ததாக சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக நெரிடும்.
உண்மையைச் சொல்லி அனுமதி வாங்கினால் பின்னர் எவராலும் இடைஞ்சல் செய்ய இயலாது என்பதையும் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.
எனவே கலந்துரையாடல் என்று சொல்லி அனுமதி கேட்காமல் குர்ஆன் இறைவனின் வேதமா இல்லையா என்பது குறித்து முஸ்லிம்களுக்கும் கிறித்தவர்களுக்கும் விவாதம் நடக்க உள்ளது என்றோ சான் அமைப்பினருக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்துக்கும் இடையே குர்ஆன் இறைவேதமா என்ற தலைப்பில் உண்மை அறியும் விவாதம் நடைபெற உள்ளதால் அனுமதியும் பாதுகாப்பும் அளிக்க கோரும் வகையில் மாதிரி வரைவுக் கடிதம் தயாரித்து உடனே அனுப்புங்கள். நாங்கள் கையெழுத்திட்டு அனுப்பி வைக்கிறோம்.
உங்கள் மெயிலில் கமிஷனர் அழைத்தால் நீங்கள் வர வேண்டும் என்று எழுதியுள்ளீர்கள். முன்னரே சொன்னது போல் உங்களுடன் இணைந்து நாங்கள் வரமாட்டோம் என்பதால் தானே நீங்கள் எங்களை கொச்சிக்கு அழைத்தீர்கள். சென்னையிலே எங்களுடன் வராமல் தனித்துச் சென்று காவல் அதிகாரிகளுடன் பேசி முடித்து மண்டபத்தை ரத்து செய்தீர்கள். சென்னையிலேயே இணைந்து வரமாட்டோம் என்று நாங்கள் சொன்னதை ஏற்றுக் கொண்டு விட்டு கமிஷனர் அழைத்தால் வரவேண்டும் என்று எங்களை கொச்சிக்கு வரச்சொன்னால் எப்படி?
ஒருவேளை நாங்கள் நேரில் உங்களோடு வந்து கொச்சி கமிஷனரை சந்தித்த பின்னரும் அனுமதி மறுக்கப்படுமேயானால் அதற்கும் நாங்களே காரணம் என்று நீங்கள் சொல்வீர்கள் என்று நாங்கள் அஞ்சுகிறோம். எந்த மண்படபத்தை நீங்கள் பிடித்தாலும் அதற்கும் நாங்கள் இணைந்து வர அவசியம் இல்லை. காவல் துறையில் அனுமதி பெறுவதற்கும் நாங்கள் வர வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் கெடுத்து விட்டோம் என்ற பழிச்சொல்லை எங்கள் மீது சுமத்த நாங்கள் இடம் தர விரும்பவில்லை.
எத்தனை கடிதம் வேண்டுமானாலும் தருகிறோம். என்னென்ன ஆவணம் வேண்டுமானாலும் தருகிறோம். உங்களுடன் இணைந்து வரமாட்டோம். இது நீங்களே ஏற்றுக் கொண்டு நீங்களே விதித்த நிபந்தனையாகும்.
குர்ஆன் இறைவேதமா என்ற விவாதத்திற்காக நீங்கள் கூடுதலாக ஒரு மைல் நடக்க தயாராக இருப்பதாக எழுதியுள்ளீர்கள்.
உங்களுக்கு ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறோம். நாங்கள் சென்னை கொச்சி சென்னை என்று சுமார் ஆயிரத்து ஐந்நூறு கிலோமீட்டர் நடக்க முன்வந்துள்ளோம். ஜனவரியில் சென்னையில் நடந்த குர்ஆன் இறைவேதமா? என்ற விவாதத்திற்கு பின் இதுவரை நீங்கள் விதித்த நிபந்தனைகளின் அடிப்படையிலேயே கொச்சியில் இரண்டாம் முறையாக அதே தலைப்பில் விவாதிக்க நாங்கள் ஏற்றுக் கொண்டுள்ளோம். எங்களது எந்த நிபந்தனையையும் நீங்கள் ஏற்காத போதும் குர்ஆன் தலைப்பில் பேச இப்போது வருகிறோம் என்று நீங்கள் சொன்ன ஒரே காரணத்திற்காக நாங்கள் இந்த நிலையை எடுத்துள்ளோம்.
எனவே, இப்போது, உண்மையைச் சொல்லி முழு உண்மையைச் சொல்லி உண்மையை மட்டும் சொல்லி காவல்துறை அனுமதிக்கான வரைவுக் கடிதத்தை தாயாரித்து அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம். உடன் கையெழுத்திட்டு அனுப்பி வைக்கிறோம்.
இப்படிக்கு,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.
நாங்கள் மாதிரி வரைவுக் கடிதம் பின்வருமாறு இருக்க வேண்டும் என்று கருதுகிறோம்.
பொருள்; விவாதத்துக்கு பாதுகாப்பும் அனுமதியும் கோருதல்
மரியாதைக்குரிய …………. அவர்களுக்கு ……………………… இயக்கத்தினராகிய எங்களுக்கும் ……………….. இயக்கத்தினருக்கும் இடையில் ………………… ஆகிய தலைப்புகளில் எது உண்மை என்பதைக் கண்டறியும் வகையில் விவாதம் நடத்த ஒப்புக் கொண்டு இருவரும் சம்மதித்துள்ளோம். இந்த விவாதத்தை சென்னையில் எவ்வித அசம்பாவிதமும் இல்லாமல் …….. தேதிகளில் நடத்தியுள்ளோம். எனவே குர்ஆன் இறை வேதமா என்ற தலைப்பில் கொச்சியில் ……………….. அரங்கத்தில் ………….. நாட்களில் விவாதம் நடத்தவுள்ளோம். இருமதத்தின் சார்பிலும் தாலா 150 பார்வையாளர்களுடன் நடக்கும் இவ்விவாதத்துக்கு அனுமதியும் பாதுகாப்பும் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இதில் உடன்பாடு என்றால் தெரிவிக்கவும். கையெழுத்திட்டு அனுப்பி வைக்கிறோம். வேறு ஏதும் மாறுதல் இருந்து தக்க காரணத்துடன் சுட்டிக்காட்டினால் அந்த மாற்றத்தைப் பரிசீலிப்போம்.
இப்படிக்கு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்


source:www.iemtindia.com


--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails