Wednesday, March 14, 2012

1. இஸ்லாம். பிறப்பும் இருப்பும்: ஓர் எளிய அறிமுகம்

கிபி ஆறாம் நூற்றாண்டில் அரேபிய தீபகற்பத்தின் மக்கா என்னும் நகரில் முகம்மது என்ற பெயர் கொண்ட உயர்குல வணிகரால் தொடங்கப்பட்ட மதம் இஸ்லாம். ஆனால் அவரைப்பின்பற்றும் இஸ்லாமியர்கள் அல்லது முஸ்லீம்கள் இதை இப்படி ஏற்றுக்கொள்வதில்லை. அனைத்து ஆற்றல்களையும் தன்னகத்தே அடக்கிக்கொண்டுள்ள தங்களின் ஏக இறைவனான அல்லா களிமண்ணிலிருந்து முதல் மனிதனை படைத்தபோது, அந்த முதன் மனிதனிலிருந்து தொடர்ச்சியாக மனித குலத்தை உருவாக்க நினைத்தபோது, அப்படியான மனித குலத்திற்காக இறைவன் உண்டாக்கித்தந்ததுதான் இஸ்லாம் எனும் மதம் என்பது முஸ்லீம்களின் நம்பிக்கை.
மனித குலத்திற்கான அந்த இஸ்லாம் எனும் ஒரே மதம் உருவான சில கணங்களிலேயே சைத்தான் எனும் அல்லாவின் எதிரியால் சிதைவுக்கு உள்ளாக்கப்படுகிறது. பின்னர் தொடர்ந்து சைத்தானால் சிதைக்கப்பட்டு, சிதைக்கப்பட்டு அதனால் மனிதர்கள் மனம்போன போக்கில் பின்பற்றக்கூடிய நிலையானது. உருவாக்கித்தந்த ஆண்டவனே தான் உருவாக்கிய மதம் இப்படித்தான் அப்படி இல்லை என்று போதிப்பதற்காக இறைத்தூதர்களை அனுப்பவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்ப்பட்டது. ஆனால் அவைகளும் சைத்தானின் வினையாக்கலுக்கு ஆட்பட்டு தனித்தனி மதங்களாக உருமாறி இறைத்தூதர்களையே கடவுளாக கொண்டாடும் நிலையாகி நிற்கிறது. இப்படி அனுப்பப்பட்ட  அனேகம் அனேகம் தூதர்களில் முகம்மது தான் கடைசியாக வந்த தூதர் அதாவது நபி. இனி உலகம் உள்ளளவும் மனித குலம் வாழும் வரையிலும் அந்த முகம்மது நபி தான் இறுதித்தூதர், அவர் சொன்னதும் செய்ததும் தான் இஸ்லாமின் வேதமும் வழிகாட்டுதலும். இதுவும் முஸ்லீம்களின் நம்பிக்கை.
முஸ்லீம்களின் இந்த நம்பிக்கை வேதம் படித்த, மத ஆச்சாரங்களின்படி ஒழுகும் சில மேல்மட்ட முஸ்லீம்களிடம் மட்டும் இருப்பது, ஏனைய சாதாரணமானவர்களுக்கு இதெல்லாம் தெரியாது என்று யாரும் கருதிக்கொள்ளலாகாது. அடிமுதல் முடி வரை, ஏழையானாலும் பணக்காரனானாலும், நல்லவன் கெட்டவன் எனும் பேதமின்றி முஸ்லீம்கள் அனைவரிடமும் இந்த நம்பிக்கை நிலை கொண்டிருக்கும். இஸ்லாத்தில் சொல்லப்பட்டிருக்கும் சமூகவியல் ஒழுங்குகளை முஸ்லீம்கள் எல்லோரும் கடைப்பிடிப்பார்கள் என்று சொல்லமுடியாது. இஸ்லாம் கூறும் மதச்சடங்குகளை எல்லோரும் ஒழுங்காக செய்து கொண்டிருக்கிறார்கள் என்றும் சொல்லிவிட முடியாது. ஆனால் முஸ்லீமாக இருப்பவர்கள் அனைவரும் மேற்கண்ட நம்பிக்கையை தவறாமல் கொண்டிருப்பார்கள் என அறுதியிட்டு சொல்லிவிடலாம். ஏனென்றால் இது தான் அந்த மதத்தின் அடிப்படை.
பிற மதங்களில் வேறொன்றிலிருந்து தங்களின் மதத்திற்கு மாறுபவர்களை அடையாளப்படுத்த சில சடங்குகளை செயல் வடிவங்களை கொண்டிருக்கிறார்கள். ஆனால் இஸ்லாத்தைப் பொருத்தவரை மேற்கண்ட நம்பிக்கைதான் வழிமுறை. அதை கண்டிப்பாக நம்பி ஏற்றுக்கொள்ளவேண்டும், அப்படி ஏற்றுக்கொள்ளாதவரை ஒருவனை முஸ்லீமாக கருத மாட்டார்கள். "அல்லாவை தவிர வேறு ஆண்டவன் யாருமில்லை. முகம்மது நபி அல்லாவின் தூதர் தான்" இப்படி ஒருவன் நம்பிவிட்டால் போதும் அவன் முஸ்லீமாக ஆகிவிடுவான். இதனைத்தொடர்ந்து இன்னும் சில நம்பிக்கைகள் வருகின்றன. சொல்லப்போனால் தொடர்ந்து வரும் இந்த நம்பிக்கைகளின் அடிப்படையில் தான் மேற்கண்ட சூத்திரமே வடிவமைக்கப்பட்டுள்ளது.
௧) இதில் முதலில் வருவது ஆண்டவனின் சக்தி அல்லது அதிகாரம். ஆண்டவன் யாராலும் பெறப்படவில்லை, சுயம்பு என்பது எல்லோருக்கும் தெரியும், சுற்றிவழைத்து எல்லா மதங்களும் சொல்வது தான். ஆனால் இஸ்லாத்தின் விளக்கம் வேறானது, ஆண்டவனான அல்லாவைத்தவிர வேறு யாருக்கும் எதற்கும் எந்த சக்தியும் இல்லை என்பதுதான். ஒரு பொருளுக்கு ஒரு குறிப்பிட்ட ஆற்றல் இருக்கிறது என்றால் அது அல்லாவைத்தவிர வேறு எவற்றினாலும் வழங்கப்பட்டிருக்க முடியாது. அல்லாவின் உத்திரவை மீறி அது செயல்படவும் முடியாது. பிரபஞ்சம் முழுக்க நாம் காணும், காணாத; அறிந்த , அறியாத அனைத்தும் அல்லாவின் கட்டளையை ஏற்று செயல்படுத்தும் விதத்திலேயே வடிவமைக்கப்பட்டுள்ளன.
௨) மறைவானவற்றின் ஞானம். அதாவது இந்த உலகத்திலோ அல்லது பிரபஞ்சத்திலோ ஏதோ ஒன்று அல்லது அதைப்பற்றிய ஞானம் மனிதனுக்கு தெரியவில்லை என்றால் அது இல்லை என்று கூற முற்படுவதோ, ஆதாரம் உண்டா எனக்கேள்வி கேட்பதோ அல்லாவின் சமஸ்தானத்தில் மிக மிகக்கடுமையான தண்டனைக்குறிய குற்றமாகும். உதாரணமாக எதிர்காலத்தில் பூமியிலிருந்து ஒரு மிருகம் வெளிப்பட்டு மக்களுடன் பேசும் என்றால் அதை கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படி ஒரு மிருகம் வருமா? பரிணாமத்தில் அதற்கு வாய்ப்பிருக்கிறதா? பேசும் மிருகம் என்றால் அது சமூக வயப்பட்டிருக்கவேண்டுமே என்பன போன்ற சிந்தனைகள் உங்களுக்கு வந்தால் நீங்கள் அல்லாவைப்பற்றிய பயமற்ற காபீராக இருக்கவேண்டும். ஏனென்றால் அனைத்து ஞானங்களும் அறிந்தவன் அல்லா ஒருவனே. அல்லா இப்படிக்கூறியிருக்கிறான் என்று யாரேனும் கூறினால் அல்லா அப்படி கூறியிருக்கிறானா? என்று குரானின் பக்கங்களை நீங்கள் புறட்டிப்பார்க்கலாமே தவிர அதற்கு சாத்தியமிருக்கிறதா என்று நீங்கள் சிந்திக்கக்கூடாது. மொத்தத்தில் அல்லாவின் இருப்பையோ, ஆற்றலையோ நீங்கள் சந்தேகிக்கவே கூடாது.
௩) குரான். இது ஆண்டவனால் முகம்மதுக்கு வழங்கப்பட்ட வேதம். இதை நீங்கள் ஏற்றுக்கொண்டேயாகவேண்டும். இதில் எந்த ஒரு முரண்பாட்டையும் நீங்கள் காணமுடியாது.  இன்னும் எத்தனை கோடி ஆண்டுகள் மனிதன் வாழ்ந்தாலும் தங்களின் ஐயங்களை இதிலிருக்கும் ஆறாயிரத்துச் சொச்ச வாக்கியங்களுக்குள்ளிருந்துதான் தீர்த்துக்கொள்ளவேண்டும். இதற்கு வெளியே மனிதனுக்கு எந்த ஒரு தீர்வும் இல்லை. இதிலிருக்கும் எதிர்காலக் கணிப்புகள் அப்படியே புள்ளி மாறாமல் நிகழும். இதில் கூறப்பட்டிருக்கும் வரலாறுகள் அத்தனையும் அப்படியே நடந்தவை. எந்த மாறுதலோ திருத்தமோ தேவையில்லாத, அல்லா கூறியது போன்றே அப்படியே பாதுகாக்கப்படும் அதி அற்புத வேதம் திருக் குரான்.
மேலே கூறப்பட்ட நம்பிக்கைகள் அனைத்தும் ஒரு முஸ்லீமுக்கு கட்டாய அவசியமாகும். இதனால் தான் முஸ்லீம்கள் ஏனைய மதங்களை பின்பற்றுபவர்களை விட அதிகமான பற்றும் பிடிப்பும் நம்பிக்கையையும் தங்கள் மதத்தின் மீது கொண்டிருக்கிறார்கள். இந்த நம்பிக்கைகள் அவர்களுக்குள் ஆழமாக வேரோடியிருப்பதால் தான் இஸ்லாம் கூறும் ஒரு செய்திக்கு மாறாக ஒன்றை எவ்வளவு ஆதாரங்களுடன் நிரூபணமாக விளக்கினாலும் ஏற்றுக்கொள்ள பிடிவாதமாக மறுக்கிறார்கள். காரணம் அவர்கள் மனதில் சரியாக இருக்குமோ என்று சிறிய ஐயம் வந்தாலும் செத்த பிறகு ஆண்டாண்டு காலத்திற்கும் எண்ணெய்க்கொப்பரையில் வறுபட வேண்டியதிருக்கும். மறுபரிசீலனை என்ற வார்த்தையே இஸ்லாத்தின் அகராதியில் கிடையாது.
ஆனால், எந்த நம்பிக்கைகள் அவர்களின் மதத்தின் மீது ஆழ்ந்த பிடிப்பை ஏற்படுத்துகிறதோ அந்த நம்பிக்கைகள் முரண்பாடுகளின் தொடக்கமாகவும் இருக்கின்றன என்பது அவர்களுக்கு விளங்குவதில்லை. காரணம் எந்த முஸ்லீமும் அந்த நம்பிக்கைகளை உரசிப்பார்த்ததில்லை. அந்த நம்பிக்கைகளை கேள்விக்கு உட்படுத்தியதில்லை. எல்லாவற்றையும் சிந்திப்பது இஸ்லாத்தில் கடமையாக்கப்பட்டுள்ளது என்பவர்கள் கூட தங்கள் சிந்தனையை உள்வசமாய் இஸ்லாத்தை நோக்கி திருப்புவதில்லை. திருப்பினால் அவன் முஸ்லீமல்ல என இஸ்லாமியர்களால் தீர்ப்பளிக்கப்படுவது மட்டுமல்ல, ஊர்விலக்கம், சமூகப்புறக்கணிப்பு, பொருளாதாரத் தனிமைப்படுத்துதல் என்பவை தொடங்கி கொலை மிரட்டல் வரை எதிர்கொள்ள நேரிடும். சிலர் கொலை செய்யப்பட்டதும் உண்டு. அமெரிக்காவின் ஆமினா வதூத், கனடாவின் இர்ஷாத் மஞ்சி, எகிப்தின் நவ்வல் சதாவி, லெபனானில் சாதிக் ஜலால் அல் அஸ்ம், மஹ்தி அமில், பாகிஸ்தானின் தாரிக் அலி, சோமாலியாவின் ஹிர்ஸ் அலி இவர்களெல்லாம் இஸ்லாம் பற்றிய தங்களின் மாற்றுக்கருத்துகளால் கடுந்துன்பங்களுக்கு ஆளானவர்களில் சிலர். இவர்கலெல்லாம் இஸ்லாத்தை விட்டு விலகியவர்கலல்ல. இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டே அதன் கொள்கைகளைப்பற்றிய தங்கள் ஐயங்களை வெளியிட்டவர்கள்.  தமிழகத்தில் தக்கலையில் கவிஞர் ரசூல் கடந்த சில ஆண்டுகளாக ஊர் விலக்கம் செய்யப்பட்டு சொந்தக்காரரின் மரணத்தில் கூட கலந்து கொள்ள இயலாமல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இவைகளெல்லாம் இஸ்லாமியர்கள் தங்கள் மதத்தை பரிசீலிப்பதில்லை என்பதோடு மட்டுமல்லாது அப்படி பரிசீலிப்பவர்களையும் ஏற்றுக்கொள்வதில்லை என்பதற்கான எடுத்துக்காட்டுகள். ஆனாலும் மாற்றுக்கருத்துகளை இஸ்லாமியர்கள் ஏற்றுக்கொள்வதில்லை என்பதாலேயே அவர்கள் சரியான இடத்தில் இருப்பதாகப் பொருளாகாது. சரியானதிலேயே தாங்கள் இருப்பதாக நம்பிக்கொண்டிருக்கும் முஸ்லீம்களை நோக்கி கேள்விகள் தொடரும்….

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி1

source:senkodi

--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails