இலங்கையின் கொலைக்களம் � பாகம் 02 ஐ வெளியிட உள்ளது பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி. மார்ச் மாதம் 14ம் திகதி இரவு 10.55 க்கு இந் நிகழ்ச்சியை ஒளிபரப்ப சனல் 4 தொலைக்காட்ச்சி முடிவுசெய்துள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகின்ற நிலையில் இலங்கையின் கொலைக்களம்(பாகம் 2) தண்டனைக்கு உட்படுத்தப்படாத போர்க் குற்றங்கள் என்கிற இப்புதிய ஆவணப் படம் வெளிவந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் இறுதி யுத்தத்தில் இடம்பெற்றன என்று கூறப்படுகின்ற நான்கு குற்றங்கள் தொடர்பாக இப்படத்தில் விசேடமாக ஆராயப்பட்டு உள்ளது. இக்குற்றங்களுக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் யார் ? என்றும் ஆய்வு செய்யப்பட்டு இருக்கின்றது.
*யுத்த சூனிய பிரதேசத்தில் பொதுமக்கள் மீதும் வைத்தியசாலைகள் மீதும் நடத்தப்பட்ட பயங்கரமான எறிகணைத் தாக்குதல்கள்
*பல்லாயிரக் கணக்கான பொதுமக்களுக்கு உணவு, மருந்து ஆகியன மறுக்கப்பட்டதுடன் யுத்த வலயத்துக்கு மனிதாபிமான உதவிகள் வர விடாமல் தடுக்கப்பட்ட சம்பவங்கள்
*மீட்பு நடவடிக்கையின்போது பொதுமக்கள் கொல்லப்பட்டமையுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க கைதிகள் நிர்வாணம் ஆக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள்
*12 வயது சிறுவன் ஒருவன் மிக கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்
ஆகியனவே இந்த ஆவணப் படத்தில் முக்கியமாக காட்டப்பட்டு இருக்கின்ற நான்கு வகையான போர்க் குற்றங்கள் ஆகும். புலிகள் இயக்கப் பெண் போராளி ஒருவர் சுடப்படும் காட்சி உட்பட, பல போர்குற்ற ஆதாரங்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளது.
source:athirvu
http://thamilislam.tk
No comments:
Post a Comment