உடற்பயிற்சி நிலையமொன்றில் (ஜிம்) நிர்வாணமான நிலையில் உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது.
பாஸ்க் பிராந்தியத்திலுள்ள இந்த உடற்பயிற்சி நிலையத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகின்றது. இதற்குக் நாட்டின் பொருளாதார நிலைமையே காரணமென இதனது உரிமையாளர்கள் நம்புகின்றனர்.
இந்நிலையில் இந்த உடற்பயிற்சி நிலையத்தில் அங்கத்தவர்களை அதிகரித்துக் கொள்ளும் நோக்குடன் மேற்படி நிர்வாண உடற்பயிற்சித் திட்டத்தை அந்நிலையத்தினர் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
உடற்பயிற்சி ரீதியான காரணங்கள் அல்லாமல் பொருளாதார காரணங்களே இந்த வில்லங்கமான திட்டத்திற்கு காரணம் என அந்நிலையத்தின் உரிமையாளர் மேர்ச்சே லெசேகா கூறியுள்ளார்.
'என்னைப் பொறுத்தவரை நிர்வாணமாக தோன்றுவதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லாத போதிலும் அப்படி தோன்றுவதற்கு நான் விரும்பவில்லை. ஆனால் இந்தப் புது முயற்சியானது பணத்தை வசூலிப்பதற்காக மட்டுமே' என மேர்ச்சே லெசேகா ஒப்புக் கொண்டுள்ளார்.
அப்பிராந்தியத்தில் நீச்சல் தடாகங்களை நடத்தும் இரு நிறுவனங்கள் அறிமுகப்படுத்திய மாதம் ஒரு தடவை நிர்வாணக் குளியலில் ஈடுபடுவதற்கான வாய்ப்பளிக்கும் திட்டம் வாடிக்கையாளர்களிடையே வரவேற்பை பெற்றதாம். அதையடுத்து இந்த உடற்பயிற்சி நிலையமும் இத்திட்டத்தை அமுல்படுத்தியுள்ளது.
source:athirchy
--http://thamilislam.tk
No comments:
Post a Comment