Sunday, April 3, 2011

தோனிக்கு பாரத்ரத்னா விருது!?

 

பத்தாவது உலக கோப்பை தொடரின் பைனலில் தோனியின் தலைமையிலான இந்திய அணி, இலங்கையை வீழ்த்தி, சாம்பியன் பட்டம் வென்றது. இது கடந்த 1983ல் கபில்தேவ் தலைமையில் பெற்ற வெற்றிக்குப் பின் கிடைத்த வெற்றி. அதுவும், இந்திய மண்ணில் கிடைத்த வெற்றி. தோனி தலைமையில் "டீம் ஒர்க்'காக கிடைத்த வெற்றி. இந்த வெற்றிக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்தியா முழுவதும் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இந்தியா கிரிக்கெட் அணி வீரர்களுக்கு ஜனாதிபதி பிரதீபாபாட்டில் நேற்று ராஜ்பவனில் விருந்து அளித்தார். இந்நிகழ்ச்சியில் மகாராஷ்டிர முதல்வர் பிருதிவ்ராஜ்சவான், கவர்னர் சங்கரநராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் பிரதீபாட்டீலுடன் அனைவரும் ஒன்றாக குரூப் போட்டோ எடுத்துக்கொண்டனர். இந்நிலையில் அணியின் கேப்டன் தோனிக்கு ஜார்க்கண்டில் உள்ள டேராடூன் மைதானத்திற்கு தோனியின் பெயர் வைக்க அரசு முடிவு செய்துள்ளது.மேலும் ஜார்க்கண்ட் முதல்வர் அர்ஜூன்முண்டா, கவர்னர் பரூக் ஆகியோர் ‌,தோனிக்கு பாரத்ரத்னா விருது வழங்க மத்திய அரசிடம் பரிந்துரைக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். இதுதவிர உலகக்கோப்பையில் இந்திய அணி இடம் பிடித்த வீரர்கள் அனைவருக்கும் தலா ரூ. 1 கோடிபரிசுத்தொகையும், விருதும் வழங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிகின்றன. 

source:dinamalar
--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails