தர்காவில் தற்கொலை தாக்குதல்; 41 பேர் பலி
இஸ்லாமாபாத். ஏப்.14-
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் தேரா காஷிகான் மாவட்டத்தில் 13-ம் நூற்றாண்டின் பழமையான அகமது சுல்தான் தர்கா உள்ளது. நேற்று அங்கு விழா நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அப்போது மக்கள் கூட்டத்துக்குள் தற்கொலை படை தீவிரவாதிகள் புகுந்தனர்.
அவர்களை புலனாய்வு பிரிவு போலீசார் அடையாளம் கண்டு கொண்டனர். இதற்கிடையே அவர்கள் தர்காவுக்குள் நுழைய முயன்றனர். எனவே, உள்ளே செல்ல விடாமல் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். அதற்குள் தற்கொலை படை தீவிரவாதிகள் 2 பேர் தர்கா வாசல் அருகே தங்கள் உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்க செய்தனர்.
இதனால் அங்கு பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்தது. எங்கும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதை தொடர்ந்து பிதி அடைந்த மக்கள் அங்குமிங்கும் சிதறி ஓடினார்கள்.இந்த தாக்குதலில் 41 பேர் அதே இடத்தில் பலியானார்கள். 70-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
அவர்கள் அனைவரும் தேரா காஷிகானில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த தாக்குதலில் சம்பந்தப்பட்டதாக பிதா ஹூசைன் (15) என்ற சிறுவன் கைது செய்யப்பட்டான். இத்தாக்குதலுக்கு எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஆக வில்லை. ஆனால் இந்த தர்காவுக்கு ஏற்கனவே தாக்குதல் மிரட்டல்கள் வந்த வண்ணம் இருந்தன.
எனவே சன்னி பிரிவு அல்லது தலிபான் தீவிரவாதிகள் இந்த தாக்கு தலை நடத்தியிருக்கலாம் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீவிரவாதிகள் நடத்திய இந்த தற்கொலை தாக்குதலுக்கு பாகிஸ்தான் அதிபர் யுசுப் ரசா கிலானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர்கள் மனித உயிர்களின் மதிப்பு தெரியாதவர்கள் என கூறியுள்ளார்.
source:maalaimalar
http://thamilislam.tk
No comments:
Post a Comment