Thursday, January 13, 2011

தாயின் குரல் மூலம் செயற்படுத்தப்படும் குழந்தையின் மூளை



 குழந்தையின் மொழியை கற்றுக்கொள்ளும் மூளையின் பாகம் தாயின் குரல் மூலமே செயற்படுத்தப்படுகின்றது என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மொன்ட்ரியல் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களே இவ்வாய்வினை மேற்கொண்டிருந்தனர்.

இவர்களின் ஆய்வின்படி குழந்தைகளின் மூளையின் மொழியை கற்கும் பகுதியானது தாயின் குரலுக்கு மட்டுமே துலங்களைக் காட்டுவதாகவும் மற்றையவர்களின் குரலுக்கு அவ்வாறு காட்டுவதில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இவ்வாய்விற்கு பல குழந்தைகளை உட்படுத்தியதாகவும் அவை உறங்கும்போது அவற்றின் தலைகளுக்கு இலக்ட்ரோட் வழங்கியுள்ளனர். 

இதன் போது குழந்தைகளின் தாய்க்கு அவர்களை ' ஹலோ ' என மெதுவாக அழைக்கும் படி கூறியுள்ளன. 

இதனைத்தொடர்ந்து வேறு பெண்களுக்கும் குழந்தைகளை அவ்வாறு அழைக்கும் படி கூறியுள்ளனர். 

குழந்தையின் தாய் அழைத்த போது குழந்தையின் மூளையின் இடதுபகுதி அதாவது மொழியினை செயற்படுத்தும் பகுதியின் மாற்றங்களை அவதானித்ததாகவும். மற்றையவர்கள் அழைத்தபோது குரல்களை அடையாளங்கண்டு கொள்ளும் மூளையின் வலது பகுதியிலேயே மாற்றங்கள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது


source:
--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails