Friday, January 7, 2011

கம்ப்யூட்டர் சிஸ்டம் எது ?



நண்பர் ஒருவரிடம் இருந்து கம்ப்யூட்டர் வாங்கிய மேட்டுப் பாளையம் வாசகர் ஒருவர், அதில் விண்டோஸ் எக்ஸ்பி உள்ளது என்றும், அதன் பதிப்பு மற்றும்  அதில் அப்டேட் செய்யப்பட்ட சர்வீஸ் பேக் குறித்து நண்பருக்குத் தெரியவில்லை என்றும் கூறி, அதனை எப்படித் தெரிந்து கொள்வது எவ்வாறு என்றும் கேட்டுள்ளார். இதே சந்தேகத்தினைப் பல வாசகர்கள் வெவ்வேறு சூழ்நிலையில் நமக்கு எழுதி உள்ளனர். 
இது சற்று சிக்கலான நிலை தான். கம்ப்யூட்டர் ஒன்றின் அடிப்படையான விஷயம் அதன் சிஸ்டம் தான்.  அந்த சிஸ்டமும் எந்த பதிப்பு என்று அறிய முடியாமல் இருப்பது துரதிர்ஷ்டம் ஆகும். சிஸ்டத்தின் எந்த பதிப்பு மற்றும் சர்வீஸ் பேக் தெரிந்தால் தான், அதில் என்ன என்ன புரோகிராம்களைப் பதியலாம் என்று நம்மால் ஒரு முடிவிற்கு வர முடியும். இதனை கம்ப்யூட்டரை இயக்கி நம்மால் தெரிந்து கொள்ள முடியும். 
விண்டோஸ் கீயை அழுத்தி, உடன் 'R'   கீயை அழுத்துங்கள். இது உங்கள் கர்சரை ரன் கட்டத்தில் கொண்டு நிறுத்தும். அதில் 'winver'  என டைப் செய்து என்டர் தட்டவும். உடனே சிறிய விண்டோ ஒன்றில், சிஸ்டத்தின் பெயர் பெரிய எழுத்தில்,மைக்ரோசாப்ட் இலச்சினை யுடன் காட்டப்படும். கீழாக அதன் பதிப்பு எண் தரப்படும். இணைந்த வாறே பில்ட் எண் மற்றும் சர்வீஸ் பேக் எண் அடைப்புக் குறிகளுக்குள் காட்டப்படும். கீழாக, யாருக்கு, எந்த நிறுனத்தின் பெயரில், விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டம்  பயன்படுத்த உரிமம் தரப்பட்டுள்ளது என்ற விபரமும் காட்டப்படும்.  இது விஸ்டா, விண்டோஸ் 7 போன்ற சிஸ்டங்களில் சிறிது மாற்றத்துடன் தெரியும்.  இதே தகவலை வேறு வழியிலும் பெறலாம்.My Computer   ஐகானில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Properties  கிளிக் செய்திடவும். இனி கிடைக்கும் விண்டோவில் உள்ள டேப்களில், ஜெனரல் டேப்பில் கிளிக் செய்தால், அதில் கம்ப்யூட்டர் சிஸ்டம் குறித்த தகவல் கிடைக்கும். ஆனால், இந்த விண்டோ தகவல்கள் தரும் வகை சற்று வித்தியாசமாக இருக்கும். அடிப்படையில் அவை ஒன்றுதான். இதே போல விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 தொகுப்புகள் உள்ள கம்ப்யூட்டரில், ஸ்டார்ட் பட்டன் கிளிக் செய்து, கம்ப்யூட்டர் என்பதில் ரைட்கிளிக் செய்திடவும். பின்னர் கிடைக்கும் மெனுவில் ப்ராப்பர்ட்டீஸ் தேர்ந்தெடுத்தால், அதில் சிஸ்டம் குறித்த தகவல்கள் கிடைக்கும்.  இரண்டு வழிகளிலும் சிஸ்டம் சார்ந்த தகவல்கள் கிடைக்கும்

source:dinamalar

--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails