Thursday, January 20, 2011

மகனை பறி கொடுத்து 4 பெண்களை காப்பாற்றியவர்

மகனை பறி கொடுத்து 4 பெண்களை காப்பாற்றியவர்: விருதுக்கு பரிந்துரை


தேனி : தேனி அருகே டொம்புச்சேரியில், தீ விபத்து மீட்பு பணியின் போது மகன் இறந்த நிலையிலும் விபத்தில் சிக்கிய நான்கு பெண்களை காப்பாற்றியவருக்கு மத்திய, மாநில அரசுகள் விருது வழங்க போலீஸ் நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளது.

தேனி அருகே டொம்புச்சேரி வடக்கு காலனியை சேர்ந்தவர் சுப்பையா. கடந்த 15ம் தேதி இவரது வீட்டில் மின்கசிவு காரணமாக தீ பற்றிக் கொண்டது. வீட்டிற்குள் நான்கு பெண்கள் இருந்துள்ளனர். பக்கத்து வீட்டில் வசிக்கும் கணேசன், அவரது மகன்கள் பிரபாகரன், பிரபு ஆகியோர் தீ எரிந்து கொண்டிருந்த வீட்டின் கதவினை உடைத்து உள்ளே சிக்கியிருந்த நான்கு பெண்களை மீட்டனர்.மீட்பு பணி நடந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மின்வயர் அறுந்து பிரபாகரன் மீது விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே பிரபாகரன்(22) உயிரிழந்தார். கணேசன் பலத்த காயமடைந்தார்.


அங்கிருந்த வயர்மேன் மொக்கை, மின்கம்பத்தில் ஏறி அறுந்து விழுந்த வயரின் மறுமுனையினை துண்டித்து விட்டார். இல்லாவிட்டால் மேலும் அதிகமானோர் பலியாகியிருப்பர்.தகவல் அறிந்த பாலகிருஷ்ணன் எஸ்.பி., டொம்புச்சேரிக்கு சென்று கணேசன் குடும்பத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கினார். தீயால் பாதிக்கப்பட்ட சுப்பையாவிற்கு 2000 ரூபாய் நிதி வழங்கப்பட்டது.பாலகிருஷ்ணன் எஸ்.பி., கூறியதாவது: டொம்புச்சேரியில் ஏற்கனவே ஜாதிப்பிரச்னை நடந்துள்ளது. ஆனாலும் விபத்து நடந்த நேரம் ஜாதியை பற்றி சிந்திக்காமல் கணேசன் மனிதநேயத்தை மட்டுமே மனதில் கொண்டு உதவிபுரிந்துள்ளார். இதற்காக அவர் தனது மகனையே இழந்துள்ளார்.


இதனால் கணேசனுக்கு விருது வழங்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தகுந்த நேரத்தில் துரிதமாக செயல்பட்டு மின் இணைப்பை துண்டித்த வயர்மேன் மொக்கைக்கும் விருது வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றார்.



source:dinamalar

--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails