கூகுள் தேடும் தளம் தான், இன்று இணையத்தில் அதிகம் நாடப்படும் தளமாகத் தொடர்ந்து இருந்து வருவது அனைவரும் அறிந்ததே. அப்படியானல், குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில், அதிகம் தேடப்படும் பொருள் தெரிந்தால், உலகம் எதனை நோக்கி அதிகம் கவலைப் படுகிறது அல்லது தெரிந்து கொள்ள ஆசையாய் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாமே. நாடு, இனம்,மொழி பாகுபாடின்றி, எது குறித்து மக்கள் அதிக சத்தம் எழுப்பிக் கொண்டிருக்கின்றனர் என்று தெரிந்து கொண்டு, நாமும் உலகத்தோடு ஒட்ட வாழ்கிறோமா என்று அறிந்து கொள்ளலாம் அல்லவா!
கவலைப் படவே வேண்டாம், கூகுள் தேடுதல் சாதனமே இந்த தகவல்களை கூகுள் ட்ரெண்ட்ஸ் என்ற தலைப்பில் தருகிறது. இதற்கு முதலில் Google.com செல்லுங்கள். இதன் மேல் பக்கத்தில் more என்று இருப்பதில் கிளிக் செய்திடுங்கள். பின்னர் இதனை அடுத்து even moreஎன்பதில் கிளிக்கிடுங்கள். கிடைக்கும் அடுத்த பக்கத்தில், அப்படியே மவுஸின் சக்கரத்தினை உருட்டிச் சென்று Trends என்று இருக்குமிடம் சென்று நிறுத்துங்கள். இதன் மீது கிளிக் செய்திடுங்கள். இங்குதான் மேலே முதல் பத்தியில் நாம் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் கிடைக்கும். இங்குதான், பன்னாட்டு மக்களும் எந்த செய்தி அல்லது தகவலுக்காக, கூகுள் தேடுதல் தளத்தினை நாடி உள்ளனர் என்று காட்டப்படும்.
இங்கு காட்டப்படும் தேடுதல் பட்டியலில் நீங்கள் எதிர்பார்த்த தேடுதல் விஷயம் இல்லை என்றால், உங்களுக்கு ஏமாற்றம் ஏற்படலாம். கவலைப்பட வேண்டாம். நீங்கள் எதனை எதிர்பார்க்கிறீர்களோ, அதனை தேடுதல் சொற்களாக அமைத்து, தேடுதல் கட்டத்திலேயே "Search Trends" என டைப் செய்து, என்டர் தட்டினால், உடன் ஒரு வரை படமாக முடிவுகள் காட்டப்படும். இந்த வரை படத்தின் மூலம், நீங்கள் காணவிரும்பிய அந்த தகவல் குறித்து எந்த ஆண்டில் எந்த மாதத்தில் அதிகத் தேடல்கள் இருந்தன என்று தெரிந்து கொள்ளலாம். நான் www.dinamalar.com என டைப் செய்து தேடச் சொன்ன போது, அருகே உள்ளது போல ஒரு கிராப் கிடைத்தது. இதிலிருந்து, தமிழ்ச் செய்தி நாளிதழ்களின் இணைய பதிப்புகளில் அதிகம் காணப்படும் நம் தினமலர் இணைய தளத்தினை எந்த எந்த மாதத்தில் அதிகம் பேர், தேடுதல் தளம் மூலம் தேடிப் பார்த்துள்ளனர் என்று தெரியவருகிறது அல்லவா! இந்த வரைபடத்தின் கீழாகவே, எந்த நாட்டில் மற்றும் எந்த நகரங்களில் அதிகம் தேடுதல் தள மூலம் பார்க்கப்பட்டது என்ற தகவலும் கிடைக்கிறது. இத்துடன் நின்றுவிடவில்லை. உங்கள் மனதில் ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் குறித்த தேடல்களை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என எண்ணினால், அதனை தேடுதலுக்கான விண்டோவில், ஒரு கமா மூலம் பிரித்துக் கொடுத்தால், இதே போன்ற வரைபடத்தின் மூலம் முடிவுகள் காட்டப்படும்
No comments:
Post a Comment